திங்கள், ஜூலை 11, 2016

சண்டையும் சமாதானமும்..!!! (War and Peace)





போன கிழமை எழுதிய "நோ தூறு ஒழுங்கை" கதையால கனபேருக்கு வலு சந்தோசம்.

தங்கட பழைய நினைவுகளை இரைமீட்டிப்பார்த்த ஆனந்தம்.
பழைய காதலர்கள் பலர் ஒண்டு சேர்ந்ததாய் உறுதிப்படுத்தப்படாத செய்திகள்.

கன காலமாக முகப்புத்தகத்தில் பெண்டிங்கில்(pending) இருந்த பிரண்ட்ஸ் றிக்குவஸ்ட்டுகள் (friend requests)அக்செப்ட் (accept)ஆனதாகவும் மேலதிக தகவல்கள்.

தங்கட பழைய காதலிகளை கஸ்ரப்பட்டு முகப்புத்தகத்தில் தேடிக்கண்டுபிடிச்ச சந்தோசத்தில் கனபேர்.

கனபேருக்கு இப்ப “No Through Road" எண்ட அறிவிப்பு பலகையை பாக்கும் போது சிரிப்பு வருகுதாம்!!!

இப்படியாக கனபேரின் கிழுகிழுப்புக்கும் கதகதப்புக்கும் இடையில் கதை எழுதிய எனக்கு என்ர வீட்டில "ரணகளம்".

என் “ஆருயிர்” நண்பன் வைபரில் (viber) விடியச்சாமம் என்ர போனுக்கு அனுப்பிய “அகல்யாவின் படத்தால” என்ர குடும்பத்தில் கிளைமோர் ஒன்று வெடித்தது.

(எத்தினபேருக்கு கிளைமோர் அடிச்சிருப்பம்... கடைசியா என்ர கட்டிலுக்கு அடியில வெடிச்சிட்டுது)

அடுத்த நாள் சனிக்கிழமை!!!

பொதுவா சனியெண்டா மனிசியும் நானும் ஊர் சுத்துவம். கடையளுக்கு போவம்.கடையில சாமான் வாங்கிட்டு ஆர் காசுகுடுக்கிறது எண்டு சண்டைபிடிப்பம்.

“நீ குடு” என நானும்
“ஏன் நீங்கள் குடுங்கோ” என அவளும் இழுபறிப்படும்போது கவுண்டரில் (counter) நிக்கும் வெள்ளைக்காரி எங்களை பாத்து ஒரு நாறல் பார்வை பாப்பாள்.

"பிளடி ஏசியன் பீபிள்( bloody asian people)" என அவள் மைண்ட் வொய்ஸ்சில்(mindvoice) திட்டினது எனக்கு கேட்டு அவளை நான் முறைக்க அவள் என்னை முறைக்க இப்பிடி கனதரம் நடந்திருக்கு.

சனி விடிய எழும்பின எனக்கு அண்டைக்கு “சனி” ஆரம்பிச்சுது.
எழும்பி போனைப்பாத்தா போனைக்காணயில்லை.

எங்கயடா எண்டு பாத்தா நேரத்தோட எழும்பின மனிசி என்ர போனைத்தூக்கி மூலைக்குள்ள எறிஞ்சுகிடக்குது.

என்ர போன் பாஸ்வேட்டை (password) அடிச்சுப்பாத்து களைச்சுப்போய் ஒரு கட்டத்தில போன் லொக்(lock) ஆகும் போது கடுப்பில தூக்கி எறிஞ்சிருப்பாள்.

எப்பிடியும் போனை நோண்டுவாள் எண்டு தெரிஞ்சுதான் இரவோட இரவா பாஸ்வேட்டை மாத்திப்போட்டு கிடந்தனான்.( நாங்கள் ஆர்? எங்களிட்டேயாவா??)

வந்த கடுப்பில ... “ அடியே “ எண்டு கத்திக்கொண்டு வெளியில வந்து தேடினன் .. ஆளைக்காணயில்லை.

பாத்றூம் (bathroom)இல இருந்து வீட்டின்ர பின்பக்கம்(backyard) வரை ஆளைத்தேடியும் காணயில்லை.

எங்க போயிருப்பாள்???
காரும் நிக்குது.
என்னடா கோதாரி எண்டு கடுப்பில கோபமும் வர கொஞ்சமும் பயமும் வந்திட்டுது. கோபத்தில விட்டுட்டு போட்டாளோ?

போன் அடிச்சுப்பாப்பம் எண்டு என்ர போனை எடுத்து கோல் (call) அடிச்சன்.

அந்த நேரமும் தன்மானமும் விட்டுக்கொடுக்கவில்லை.
நானா கோல் அடிச்சா என்ர நம்பரை பாத்திட்டு எடுக்கமாட்டாள் எண்டு தெரியும்.

ஐடியா..!!!
பிறைவேற் நம்பரில (private number) இல விட்டு அடிச்சன்.
றிங் (ring) போச்சுது ஆனால் பதில் இல்லை.
நாலஞ்சுதரம் அடிச்சன்.
எடுக்கயில்லை.

கடைசியா என்ர நம்பரை போட்டும் அடிச்சன் எடுக்கயில்லை.
எங்க போயிருப்பாள்???

எதுக்கும் பக்கத்தில இருக்கும் அன்ரி ஆக்களின் வீட்டுக்கு அடிச்சு விசாரிப்பம் எண்டு நினைச்சு அவைக்கு கோல் அடிச்சன்.
அங்கையும் என் தன் மானம் விடயில்லை!!!!
போன் அடிச்சு மனிசி வந்தவளோ எண்டு கேட்டால் வெக்கக்கேடல்லோ...

அதனால எதோ அவையில அக்கறையா இருக்கிறமாதிரி கோல் அடிச்சு சுகம் விசாரிச்சுப்போட்டு வேற கதையள் கதைச்சன்.
கதைக்கு இடையில ....
மனிசி அங்க போயிருந்தால் விசயம் தெரியவரும் எண்டு பாத்தன்.
அந்த முயற்சியும் தோல்வி!!!!

அங்கையும் போகயில்லை...
எங்க போயிருப்பாள்???
காரை எடுத்துக்கொண்டு பக்கத்து சொப்பிங் செண்டெர் (shopping centre) எல்லாம் தடவிப்பாத்தன் ... ஆள் இல்லை.

பேசாமல் வீட்டை வந்திட்டன்.

மத்தியானம் வரை ஆள் இல்லை.
சனிக்கிழமை வேலையும் இல்லை.
எங்க போயிருப்பாள்???

எனக்குப்பசி வேறை...
என்னதான் சண்டையெண்டாலும் சமைச்சு வைச்சிருப்பள் எண்டு நம்பி.....
குசினியை தடவிப்பாத்தன், பிறிட்ஜ்ஜை (fridge) திறந்துபாத்தன் ஒரு சாப்பாடும் இல்லை.

என்ர நம்பிக்கையில் ”இடி” விழ...

பசிக்களையில....
பாலைச்சூடாக்கி குடிச்சுப்போட்டு செற்றியில (sofa) இல வந்து கிடந்து ....

youtube இல 80’s சோகப்பாடல் எண்டு தேடி அதை போட்டிட்டு...

“ மனிசியை காணயில்லை” எண்ட கவலையில நித்திரையாப்போனன்.

3.30 மணி பின்னேரம் இருக்கும்.
எழும்பிப்பாத்தன் ஆள் இன்னும் இல்லை.
என்னடா செய்வம் எண்டு கேற்றடியில்(gate) நிண்டு ஜோசிக்கும் போது..
வீட்டடியில் ஒரு பெரிய சிவத்தக்கார் வந்து நிண்டுது....

-தொடரும்-









”இஞ்ச... வீட்டுக்குள்ள நடக்குற விசயங்களை எல்லாம் முகப்புத்தகத்தில பப்பிளிக்கா(public) எழுதினால் விவாகரத்து பேப்பரை டவுண்லோட்(download) பண்ணி பிறின்ற் (print) எடுக்கவேண்டிவரும்” எனும் கடும் எச்சரிக்கையின் விளைவால் இன்னுமொரு கிழமைக்கு கதையை இழுத்தடிக்கும் என் திட்டத்திற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை இத்தால் சகல வாசகப்பெருமக்களுக்கும் கூறி கதைக்கு வாறன்.

மனிசி சண்டைபிடிச்சுக்கொண்டு காணாமல் போக...
நான் என்னசெய்யிறது எண்டு தெரியாமல் பதகழிச்சு பயத்தில இருந்தது முன்கதை சுருக்கம்.

பின்னேரம் வரை ஆள் வீட்டுக்கு வரவில்லை.

வெளியில போய் கேற்றடியில் நிண்டு பலமாக ஜோசிக்கும் போது பெரிய சிவத்தக்கார் வந்து நிண்டதை கண்டேன்.

ஆரெண்டு பாத்தால் மனிசியோட வேலைக்கு ஒண்டாப்போகும் “சிங்களப்பெட்டை”!!!

தமிழ்பொடியனின் மனிசியின் நெருங்கிய தோழி “சிங்களப்பெட்டை” என இங்க இருக்கும் என் நண்பன் என்னை அடிக்கடி நக்கல் அடிப்பான்.

சிங்களத்தி மனிசியிடம் குடுத்துவிடும் “மாலு கறிக்கு (மீன் கறி) “ நான் ரசிகன் என்பது உள்ளகத்தகவல்!!!

என்னடா இவள் வாறாள் எண்டு பாத்தா... காரில் இருந்து மனிசி இறங்கி வந்தாள்.

வழமையாக சிங்களத்தியை பார்த்து சிரிப்பது போல சிரிச்சன்..
அவள் முறைச்சுப்போட்டு போட்டாள்.

எனக்கு விளங்கிட்டுது என்ர ஆருயிர் மனிசி என்னைப்பற்றி பத்த வைச்சிட்டாள்.

இனி “ மாலு கறி “ வராது என்பது என் அந்த நேர கவலையானது.
அட நான் வேற பயந்து விசர் நினைப்புகள் எல்லாம் நினைச்சிருக்கன்.

மனிசி எங்கையும் போகயில்லை...
சனிக்கிழமை எண்டும் பாராமல் என்ர கடுப்பில ஓவர் ரைம் (over time) வேலைக்குத்தான் போயிருக்கிறாள்.

அடச்சீ ... இதுக்குப்போய் இவ்வளவு பில்ட் அப் (build up)பண்ணிட்டன் என கனபேர் புறுபுறுக்கிறது எனக்குக்கேக்குது.

”தலையிடியும் தடிமனும்” அவனவனுக்கு வந்தால்த்தான் தெரியும் ;-(
நான் கேற்றடியில் நிற்பதை மனிசி பாத்திட்டாள்!!

தனக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறன் எண்டு அவளுக்கு விளங்கிட்டுது.

நான் என்ன செய்தன்?? டக்கெண்டு தபால்ப்பெட்டியை திறந்து கடிதம் வந்திருக்கோ எண்டு செக் (check) பண்ணுறமாதிரி நடிச்சன்.
அண்டைக்கு சனிக்கிழமை .. கடிதங்கள் வராது எண்டு தெரிஞ்சும் நான் அப்பிடி நடிச்சது எனக்கே அவமானமாக இருந்திச்சு. இருந்தாலும் தன்மானம் எண்ட ஒண்டு இருக்கல்லோ...( இருந்தாத்தானே..  )

எல்லாத்தையும் தேடிப்பாத்த நான் மனிசி வேலைக்கு போடும் சப்பாத்தை மறந்து போட்டன். அதைப்பாத்திருந்தால் உவ்வளவு குழப்பமும் வந்திருக்காது கண்டியளோ....

”ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” எண்ட பழமொழி சரிதான்!
வீட்டுக்கு உள்ள போன மனிசி பிறிட்ஜ்(fridge) இக்குள் இருக்கும் தோசை மாவைத்தூக்கி வெளியில் வைத்தாள்.

இந்த “புழிச்ச தோசை மாதான்” மிச்சக்கதையின் திருப்புமுனை (turning point) என்பதை “குசி” பட டைரக்டர்(director) சூர்யா பாணியில் (style) சொல்லிப்போட்டு மிச்சக்கதைக்குப்போறன்.

பொதுவா வேலையால வரும் மனிசி .....

அர்ச்சனை செய்யும் விடயங்கள் பின்வருமாறு
- ”வீடு ஏன் குப்பையா கிடக்கு .. உங்களை கூட்டவல்லோ சொன்னனான்..”
-”வெளியில உடுப்பு காயப்போட்டனான் ... எடுத்து மடிச்சு வைச்சனியளே..”
-”சிங்கில (sink) சாப்பிட்ட கோப்பையை போட்டா கழுவி வைக்கத்தெரியாதே..”
-”எதுக்கு எல்லா லைற்றையும் (light) திருவிழா மாதிரி போட்டு வைச்சிருக்கிறியள்? கறண்ட் பில் ஆர் கட்டுறது?”
-”கழட்டுற உடுப்பை எதுக்கு மூலைக்குள்ள எறிஞ்சு வைச்சிருக்கிறியள்? எடுத்து அந்தந்த இடத்தில கொழுவுறதுக்கு என்ன கை ஏலேதே..”
இப்படிப்பல....
ஆனால் என்ன ஆச்சரியம்.. என்ன அதிசயம்!!!

இண்டைக்கு ஒரு ஏச்சும் விளவில்லை.
நான் குசினிக்குப்போய் கிளாஸ் நிறைய தண்ணியை விட்டு அவளுக்கு முன்னால் குடிச்சன்.

நான் ஒண்டும் சாப்பிடவில்லை... தண்ணியை குடிச்சுக்கொண்டுதான் இருக்கிறன் எண்டு காட்ட...

அவள் திரும்பி பாக்கவேயில்லை...
கல்நெஞ்சக்காரி..!!!

பேசாமல் போய் ரீவியில (TV) அவளுக்கு பிடிக்காத விஜய் ரீவியின் ”சூப்பர் சிங்கர் 5” நிகழ்ச்சியை சத்தமா போட்டு கடுப்பேத்தினேன்.
அறையை சாத்திப்போட்டு உள்ள போனவள் கனநேரமா வெளிய வரயில்லை..

நானும் அறை வாசலை அடிக்கடி பாத்துக்கொண்டிருந்தன்..
“அவள் வருவாளா..” எண்டு.

கொஞ்ச நேரத்துக்கு பிறகு வந்தவள் நான் இருந்த செற்றியின் (sofa) மறுமுனையில் இருந்து ஆருக்கோ போன் அடிச்சாள்.
நான் ரீவி சவுண்டை( TV volume) குறைக்கவேயில்லை...

நான் ரீவியை வாய்பாத்துக்கொண்டிருந்த நேரம் பாத்து ரீவி றிமோட்டை(remote) கைப்பற்றினாள் அவள்.

முல்லைத்தீவு சண்டையில் இயக்கத்திடம் ஆட்லறியை பறிகொடுத்த ஆமிக்காரனின் பரிதாப நிலையில் நான்.
இப்ப அவள் என்னை கடுப்பேத்த விஜய் ரீவியின் சீரியல்களான “தெய்வம் தந்த வீடு” “ கல்யாணம் முதல் காதல் வரை” போன்ற அறுவைகளை அதே சவுண்டில் போட்டாள்.

அதெண்டாலும் பரவாயில்லை...
ரீவி றிமோட் என்னால் கைப்பற்ற முடியாத இடத்துக்கு போய்விட்டது!

இயக்கத்தின் சில ராணுவ நகர்வுகளை புரிந்து கொள்ளமுடியாத ஆனையிறவு ஆமிக்காரர்களாய் நான்!!!!

மனிசியின் சில அதிரடி நடவடிக்கைகளை என்னால் றெக்கி எடுத்தாலும் கண்டு பிடிக்கமுடியாது.

”இருடி வைக்கிறண்டி ஆப்பு” எண்டுபோட்டு என்ர போனை எடுத்து சைலென்ரில (silent mode) போட்டிட்டு என்ர பிரண்டோட (friend) கதைக்கிறமாதிரி பீலா விட்டன்.( சைலென்ரில விட்டதுக்கான காரணம் பிறகு ஆரும் மாறி கோல் அடிச்சால் என்ர வண்டவாளம் விளங்கிடும் எண்டதுக்காக...)

அவள் ரீவி சவுண்டை குறைக்கவேயில்லை...

நான் பெரிசா கத்தி கசைச்சு நாடகம் பாக்குறதை வேணுமெண்டே குழப்பினன்.

ம்ம்ம்ம்ம்....... அவள் எனக்கு மேலால சவுண்டை கூட்டினாள்.
எவ்வளவு நேரம் தான் நான் நடிக்க...
நான் போனை கீழ வைச்சன்.

இப்ப அவள் போனை தூக்கி தன்ர “சிங்கள நண்பிக்கு “ போன் அடிச்சு என்னை கடுப்பேத்த சிரிச்சு சிரிச்சு கதைச்சாள்.

அவள் கதைக்கும் போது மட்டும் ரீவி சவுண்டை குறைச்சுப்போட்டு கதைச்சாள்.

கதையை வாசிக்கிற நீங்களே சொல்லுங்கோ இது அளாப்பல் விளையாட்டுத்தானே...!!! lol

எனக்கும் தெரியும் கடுப்பேத்த ....

லப்ரப்பை(laptop) திறந்து என்ர பேஸ்புக்கை(facebook) ஓபின்(open) பண்ணி....
சீமானின் பேச்சை போட்டு கேட்டன்...!!!
பழிக்குப்பழி...
ஒரு கட்டத்தில் சீமானின் ஆவேசமான பேச்சால் கடுப்பாகி....
கொஞ்ச நேரத்தில ஏலாமல் அவளே எழும்பி குசினிக்குப்போனாள்.

புழிக்க வைத்திருந்த “தோசை மாவை” எடுத்து தோசை சுட ஆரம்பிச்சாள்.

காலமையில் இருந்து சாப்பிடாமல் இருந்த எனக்கு ... தோசை வாசத்தால் என் அடி வயிறு பற்றி எரிஞ்சுது!!!!
அதெண்டாலும் பறுவாயில்லை...
சின்னவெங்காயமும், கருவேப்பிலையும் தாழிச்சு தேங்காய்ப்பூவில அரைச்சு ஒரு “சிவத்த சம்பல் “ செய்வாள்...
வாசம் சும்மா சுண்டி இழுக்கும்...

என்னை கடுப்பேத்த கருவேப்பிலையை அள்ளிப்போட்டு அண்டைக்கு கொஞ்சம் தூக்கலா தாழிச்சாள்...
என்னால முடியவில்லை...
இருந்தாலும் “ தன்மானம்” என்னை செற்றியை (sofa) விட்டு எழும்பவிடாமல் கட்டிப்போட்டது.

பொதுவா எங்கட சண்டை ”கோட்டை அடிபாடு” மாதிரி வருசக்கணக்கா இல்லாமல் “1990 களில் இயக்கத்தின் கொரில்லா” தாக்குதல் போல மணித்தியால கணகுத்தான் எடுக்கும்.
இந்த முறை கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் நீடிக்கிறது ....
இரவு 8 மணி இருக்கும்..

தோசை எல்லாம் சுட்டு..
வேணுமண்டு எனக்கு பக்கதில இருந்து நல்ல வடிவா சாப்பிட்டாள்.
சாதுவா கடைக்கண்ணால அவளின் கோப்பையை பாத்தன்...
ஒரு முட்டைத்தோசை... ஒரு நெய்த்தோசை.. இன்னொரு முறுகல் தோசை!!!!

வல்லிபுரக்கோயில்லை ஞாயிற்றுக்கிழமைகளில் மர நிழலில் பொன்னம்மா ஆச்சியின் கையால் சுட்டுத்தரும் அந்த தோசைக்கு நிகராய் என் மனிசியின் கைப்பக்குவம் இருக்கும்!!!
சனிக்கிழமை வந்த சனியனால... என் ஆசைக்குரிய தோசைக்கு ஆப்பு!!!

ஞாயிற்றுக்கிழமைகளில் வல்லிபுரக்கோயிலுக்கு போய் கோயிலை கும்பிடாமல் கோயிலுக்கு வாற பெட்டைகளை சைற் அடிச்சுப்போட்டு “தோசையை” சாப்பிட்டு விட்டு வந்த பாவம் என்னை அவுஸ்திரேலியா வரை வந்து அடிக்குது!!!
எனக்கு கடுப்பேத்த நல்ல வடிவா ரசிச்சு ருசிச்சு எனக்கு பக்கத்தில இருந்து சாப்பிட்டு விட்டு போய்ப்படுத்துவிட்டாள்.

என்னதான் கோபம் எண்டாலும்...
எனக்கு தோசை சுட்டு வைச்சிருப்பாள் எண்டு எனக்குத்தெரியும்.
ஆனால் எழும்பி போய் எடுத்து சாப்பிட “ தன்மானம் “ எண்ட மண்ணாங்கட்டி என்னை விடவில்லை.

இரவு 10 மணி....
”தன்மானத்துக்கும்” எனக்கும் நடந்த நேரடிச்சமரில் “தன்மானம்” களப்பலியாகியது.
எழும்பி நேரா குசினிக்கு போய் லைற்றைப்போடாமல் (light) போன் (phone) வெளிச்சத்தில் எனக்கான தோசையை தேடினேன்.
கல்நெஞ்சக்காரி எண்டு கதையின் இடையில சொன்னனான்.
அதை அழியுங்கோ..

பாசக்காரி!!!
அதே முட்டைத்தோசை...!!!
அதே நெய்த்தோசை..!!!
அதே முறுகல் தோசை..!!!
எனக்கு சுட்டு வைச்சு இன்னொரு கோப்பையால மூடி வைச்சிருந்தாள்.

அப்பிடியே பக்கத்தில “தாழிச்ச “ அந்த சிவத்த மிளகாய்ச்சம்பல்!!!
லைற்றை போட்டால் மனிசி எழும்பிடுவாள் என நினைச்சு போன் லைற்றை (phone torch) போட்டு பக்கத்தில வைச்சுட்டு தோசையை ஒரு “ வெட்டு வெட்ட “ ஆரம்பிச்சன்.
பசிக்களையில “அவக் அவக்கெண்டு” சாப்பிட நாசமறுந்த விக்கல் வந்திட்டுது...
ரப்பில (tap) தண்ணியை திறந்து குடிச்சிட்டு திரும்பி பாக்குறன்...
என்ர விக்கல் சத்தத்தில மனிசி எழும்பி வெளியில வந்து லைற்றை போட்டாள்..

ஒரு கையில தண்ணிக்கோப்பை ....
மற்றக்கையில தோசை...
மனிசி நான் நிண்ட கோலத்தை கண்டு .........
அவளுக்கு வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் ...
பெரிசா “கில்...கில்..” எண்டு சிரிச்சாள்.
”கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் “ எண்ட நிலையாய் என் நிலை.....
குசினிக்கு வந்த மனிசி என்னைப்பாத்துக்கேட்டாள்
“ என்னப்பா இன்னுமொரு நெய்த்தோசை சுட்டுத்தரவே...பசிக்குதே”

பாசக்கார மச்சாள்!!!!

இதுக்கும் பிறகு சண்டையை தொடர்ந்தால் வியட்னாமில அமெரிக்கன் ஆமி வாங்கின அடிதான் எனக்கும் விழும் எண்டு தெரிந்த நான் சமாதான கொடியை ஏற்றினேன்.

வெள்ளி இரவு வந்த "வீக்கெண்ட் சனியன் " சனி இரவுடன் முடிந்தது.
-முற்றும்-
Note:(இது என் கதை மட்டுமல்ல ..உங்க கனபேரின் கதை இது)
(கன பேருக்கு வீட்டில சண்டைவந்தா எப்பிடி கெதியா ஒண்டு சேரவேணும் எண்டும் இலவச ஆலோசனையும் (free counselling) சொல்லி இருக்கிறன்)
பிடிச்சிருந்தா like ,comment பண்ணுங்கோ..
அனுபவிச்சிருந்தா share பண்ணுங்கோ....lol

அன்புடன்
தமிழ்ப்பொடியன்







யோகா. எஸ். கடத்திக்,கிடத்தி.................//// நல்லாப் போகுது தம்பி,மிச்சப் புழுகு எப்ப? 
Jude Prakash தொங்கல்ல கொண்டு வந்து கதையை நிற்பாட்டிப் போட்டு, சனத்தை டென்ஷனாக்கிறதே உங்களுக்கு வேலையாய் போச்சு.. 

நாளைக்கு சனி..சனிக்கிழமை..சனி
Vimaleshwara Sabaratnam Jude Prakash
அண்ணை நான் பெற்ற “டென்சன்” பெறுக இவ்வையகம்..lol
Ravi Chandran சிவத்தகார்ல வந்த்து அன்னியா வேறு யாரமா அண்ணே
Vinesh Vallipuram Nampa mudiyathu
Pancha Gajaananan Thamil Serial mathiri -- tension -- adutha episode eppa?
Aseervatham Thananchayan தொடரட்டடும்...
Sithamparappillai Ajanthan கதை சிவப்பு காரோடை திரும்பப் போகுது போல கிடக்கு...
அம்பன் நிதர்ஷன் அண்ணா சூப்பர் அடுத்த பாகத்தை வெகுவிரைவில் எழுதுங்க
Ravimany Anuraviththi Ijo wife a eppady kodumai paduththa kudathhu
Kalps Bala Wow super story! !!!!!!!
Guhendiraa Ganeshu Wife relations arrived in red car ?? Isn't it??
Suthes Pasupathy சேகர் செத்தான்
Hemmal Lathan உண்மையில சிரிச்சிட்டன் தோழா...

கடையில சாமான் வாங்கிட்டு ஆர் காசுகுடுக்கிறது எண்டு சண்டைபிடிப்பம்.
...See More
Ravindran Keerthanan ச ஏதும் கதைச்சால் இப்படி எல்லாம் பின்விளைவுகள் வருமா கல்யாணத்துக்கு பிறகு??
Sujeeva Shankar Kathai nalla irruku 👍
Balaraja Yogan Enakku agalyava parkonum pola erukku anna. Viberil vantha padatha poodu vedungovan.
Thanapalasingam Lathees Mmmm ennaththa endaalum eluthunka machchida kaluththa maddum vidunka anna
குமுதினி ரமணன் போன் அடிச்சு மனிசி வந்தவளோ எண்டு கேட்டால் வெக்கக்கேடல்லோ...Ha..Ha..நகைச்சுவை, இலகுவான மொழிநடை, யதார்த்தம், அழகு.அருமை சகோ.
Nicksala Karan Before friend story now ur story but writing way very interesting , and Jaffna style writing god look . God will bless you coming a big writer books and novels
சிறீ சிறீஸ்கந்தராஜா நாட்டுக்கு இப்போதைக்கு இல்லை... ஆனால் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடவும். வாழ்த்துக்கள் நண்பருக்கு!!





Jude Prakash கேட்கிறது தமிழீழம்
சாப்பிடுறது මාලු පෑන් (மாலு பாண்)...😜
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Vimaleshwara Sabaratnam Jude Prakash
ஐயே ...
மாலு பாண் நெமே..
...See More
Jude Prakash கேட்கிறது தமிழீழம்
சாப்பிடுறது මාලු කරි
Varuni Bala Do u have a hidden camera inside my house!!! hmmmm
Vimaleshwara Sabaratnam Varuni Bala
அக்கோய்...
u too????


Vimaleshwara Sabaratnam
Write a reply...
Vimaleshwara Sabaratnam பிடிச்சிருந்தா like ,comment பண்ணுங்கோ..
அனுபவிச்சிருந்தா share பண்ணுங்கோ....lol
Ravi Chandran அண்ணா சிங்களபெட்டை லசணய்யா.....
Vimaleshwara Sabaratnam மல்லி 
மகே கெதரட்ட “கிளைமோர் “ காண்ட எப்பா.lol
Ravi Chandran சின்ன காமெடிதான் அண்ணா உங்க பதில் புரியவில்லை
Vimaleshwara Sabaratnam தம்பி 
என் வீட்டில் கிளைமோர் அடிக்காதையுங்கோ..lol
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Melliyal Uma போயும் போயும் தோசைக்காக தன்மானத்தை இழந்திட்டீங்களே தம்பி .....!!!!!
Vimaleshwara Sabaratnam Melliyal Uma
அக்கா ...
சும்மா இழக்கவில்லை...

வீரனா கடைசிவரை சண்டைபோட்டுத்தான் இழந்தன்...lol
கதிரமலை யசோதரன் அடியளேதும் விழுந்தமாதிரி????
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Melliyal Uma ஆ....! விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேல்ல எண்டுறியளோ...???
Vimaleshwara Sabaratnam Melliyal Uma
குடும்பச்சண்டைகளில்...
தோற்றால்த்தான்...

வெற்றி!!!
சண்டை முடிவில் சமாதானம்
அடுத்த தெரிவுக்கு இடமேயில்லை.

விதிவிலக்கான உண்மை 
Melliyal Uma குடும்பச் சண்டையில் மட்டுமல்ல அன்புக்குரியவர்கள் யாரிடமென்றாலும் தோற்பதுதான் உண்மையான வெற்றி தம்பி. ஆனால் இது பலருக்குப் புரிவதில்லை
Alex Sara உண்மை
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Pancha Gajaananan Super story -- Love it Love it!
கதிரமலை யசோதரன் இப்பிடி சுவாரசியமா எழுதுங்கோ , நாங்களும் விரும்பி வாசிக்கிறம் 
அதவிட்டு, வெள்ளிக்கிழமையில போட்டோ போட்டா???(டவுட்டன்) வரவேண்டிவரும் (பொருளோட🔫🔫🔫🔫😝😝
Vimaleshwara Sabaratnam அவ்வளவு அழகாவா (?) இருக்கன் தம்பி .lol
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Ravipalan Rasaratnam அண்ண ! தோசை சாப்பிட்டனான் எண்டு சும்மா எழுதியிருக்கலாம். நெய் முறுகல், முட்டத் தோசை, சம்பல் ன்னு எழுதி வாசிக்கிரவனுக்கெல்லாம் வாயூறுது.
Shrivashini Subaraj அண்ணை நல்ல உவமைகளோட சொன்னிங்க சிரிப்புதான்...........
Aathy Arun Ai bro, periya world wae pola. Elephant pass, Vietnaam ellam vanthichu. Hiroshima illaye?
Krishnarajah Pirasath Superb thampu 👌🏻😊
Shylaja Mahadeva Very nice Anna👍
ஈழ முற்றம் மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தம்பு. எங்கட வாழ்வு போர்க்களங்களுடன் பின்னிப் பிணைக்கப்பட்டது என்பதை யதார்த்ததுடன் பதிவுசெய்த விதம் புதுமை/அருமை.
K Nawa Navaneethan உங்கள் கதை எழுதும் திறனுக்கு பாராட்டுக்கள்..
//ஒரு கட்டத்தில்சீமானின் ஆவேசப் பேச்சால் கடுப்பாகி..
கொஞ்ச நேரத்தில் ஏலாமல் அவளே எழும்பி குசினிக்குளப்போனாள்.//
...See More
Vimaleshwara Sabaratnam Part -1
https://www.facebook.com/podiyan/posts/10153398832813002
Vimaleshwara Sabaratnam
சண்டையும் சமாதானமும்..!!! (War and Peace)- பாகம் 1
---------------------------------------------
போன கிழமை எழுதிய "நோ தூறு ஒழுங்கை" கதையால கனபேருக்கு வலு சந்தோச...
See More
Sara Sivam கதையென்னவோ சாதாரணம்தான்( இப்படித்தான் சொல்லவேணும் பாருங்கோ,
ஏனென்றால் என்வீட்டிலும் இதே கதைதானே) ஆனால் அந்த உவமைகள் உம்மை
அடிச்சிக்க ஆளே இல்லை பீரங்கியைப் பறிகொடுத்த இராணுவம் இப்படிப்பல இருந்தும்
...See More
Vimaleshwara Sabaratnam Same blood ???? Lol
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Sithamparappillai Ajanthan குடும்பம் குலையாமல் இருக்க, நீங்களெல்லாம் குத்து விளக்காய் எரியிறியள். இதைவிட கூட அனுபவிச்சவங்களுக்கு ஏதாவது இலவச அறிவுரை?
Vimaleshwara Sabaratnam அண்ணை நீங்கள் தான் பெரிய குத்துவிளக்கு.
நாங்கள் எல்லாம் சின்ன குத்துவிளக்கு!!!
...See More
Sithamparappillai Ajanthan அது சரி...நீங்கள் தோசையோட சமளிக்கிறியள்...எங்களுக்கென்னவோ இப்ப கல்லு றொட்டிதான் கிடைக்கிறது......🤓
Vimaleshwara Sabaratnam
Write a reply...
கவிஞர் அல்லையூர் சி விஜயன் என் அனுபவத்தில் 
எங்கள் வாழ்க்கையும் பதிவாகிறது.
இதில் எமது திருமணத்திற்கு முன்பு சில முடிவுகள் இருவருமே எடுத்தோம்!
அதில் எவ்வளவு சண்டை வந்தாலும் சமைக்காமல்.இருப்பதோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ 
தவிர்த்தல் வேண்டுமென இன்றுவரை அதுவே நடைமுறையும் கூட.கதை சொன்னவிதம் அருமை
குமுதினி ரமணன் ”இஞ்ச... வீட்டுக்குள்ள நடக்குற விசயங்களை எல்லாம் முகப்புத்தகத்தில பப்பிளிக்கா(public) எழுதினால் விவாகரத்து பேப்பரை டவுண்லோட்(download) பண்ணி பிறின்ற் (print) எடுக்கவேண்டிவரும்” எனும் கடும் எச்சரிக்கையின் விளைவால் இன்னுமொரு கிழமைக்கு கதையை இழுத்தடிக்கும் என் திட்டத்திற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை இத்தால் சகல வாசகப்பெருமக்களுக்கும் கூறி கதைக்கு வாறன். 
Rajarajan Thiagarajah என்னத்தை எண்டு சொல்ல .ஒரு தோசையிலை கவிண்டு கொட்டுண்டவனை தம்பி எண்டு சொல்ல வெக்கமாய் கிடக்கு  .
Yoga Rajah Rani manju
Shanthirakala Velvelicham நாங்கள் பார்க்கும் பொழுது சாது போல இருந்தீர்கள். நீங்களா இப்படி
Shanthirakala Velvelicham ஆச்சரியம். ஆனால் அருமை
Sänta Baby · Friends with Ramya JB and 4 others
Superb bro

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge