அம்மாணை எனக்கொரு ஆசை
ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல...
ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள..
எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக
இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர.!
சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை
மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்குள்ள வந்ததால.!
கரவலை மீனில ஒரு சொதியும்..
கறுத்தப்பச்சையரிசி சோறும்...
கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்...
சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்...
உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும்.
சாதுவா கோப்பிறேசன் கள்ளைப்போட்டு
தென்னை மர நிழலில சாரத்தைப்போட்டு
தலை மாட்டில "ரேடியோவில" பாட்டைப்போட்டு
சும்மா கிடந்தா நித்திரை கண்ணை செம்மும்.
அம்மாணை எனக்கொரு ஆசை
ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல
கொடிகாமத்து கூழன் பிலாப்பழத்தை
கொண்டு வருவா சரசு மாமி சந்தை "வானில்"
நாலா புறிச்சு ஒரு பங்கு வாங்கி வந்து
நல்லா கையிலை எண்ணை பூசி
சுழையை பிரிச்சுத்திண்டா புறங்கையில ஓடும் தேனா
"கூப்பன்" மாவில புட்டைக்குழைச்சு
சாதுவா தேங்காய்ப்பூவை மேல தூவி
சீனியும் கொஞ்சம் போட்டு
கறுத்தக்கொழும்பான் மாம்பழத்தை துண்டாய் சீவி
குழைச்சு அடிச்சா சொல்லி வேலையில்லை.
கொட்டையை வடிவா சூப்பி
திண்டபிறகு சருவத்துக்கு பக்கத்தில தாட்டு
வைச்சா முளைக்கும் மாங்கண்டு.
அம்மாணை எனக்கொரு ஆசை
ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல
சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை
மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்கை வந்ததால
அண்ணை கனடாவில ஓடாய்தேஞ்சு
என்னை எடுத்துவிட்டான் இஞ்சை
"ஏஜென்சி" காரனிட்ட காசைக்கொட்டி
குண்டி தேய உழைக்க வேணும்
வாங்கின கடன் குடுக்க வேணும்
என்ன கோதாரிக்கு இஞ்சை அனுப்பினவங்கள்
ஒரு அறுப்பும் விளங்கயில்லை.
என்ர சினேகித பொடியள நினைச்சா கவலை வரும்
அம்மான்ர மடியை நினைச்சா அழுகை வரும்.
சாப்பிடும் போது பிரைக்கடிக்கும்
ஊரில மச்சாள் தான் நினைக்கிறாள் எண்டதும்
அவள் பாத்து கொடுப்புக்குள்ள சிரிச்சதுதான் நினைவு வரும்.
மச்சாளைப்பார்க்க பின்னெரத்தில மாமி வீடு
முட்டைப்பொரியலும் நண்டுக்கறியும்
மருமோனுக்கு சக்க வசதி
விக்கல் வந்து நிமிந்து பாத்தா
மச்சாள் தருவாள் செம்பில பச்சைத்தண்ணி
கடைசியாய் குண்டு கோப்பையில் தேத்தண்ணி
அம்மாணை எனக்கொரு ஆசை
ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல
ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள
எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக
இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர
அம்மாவாணை எனக்கொரு ஆசை
என்னைத் திருப்பி அனுப்பவேணும்..!!!!
© தமிழ்ப் பொடியன்
https://www.facebook.com/
(நன்றி:
புகைப்படம்:
அருள் அல்லு)
NOTE:
அம்மாவாணை- அம்மா மீது சத்தியம்
ஒப்பனுக்கு- கொஞ்சநேரம்
இஞ்சை- இங்கே
சில்லம்பல்லம்- சின்ன சின்ன துண்டாய்
கோதாரி, மக்கரிப்பான் - அநியாயம் செய்பவன்(இது யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கில் மிக வழமையான பேச்சு வழக்கு சொல்)
செம்மும்- நன்றாக
கூப்பன் மா- கோதுமை மா
சில யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு தமிழ் மட்டக்களப்பிலோ,திருகோண்மலை
கொப்பர்,கொம்மா,கோத்தை,பேந்




































































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக