செவ்வாய், ஜூலை 05, 2016

கண்ணீர் இனித்தது...!!!



படலை திறந்து
என் முற்றத்தில்
என் காலடி...

சில்லென்று 
சோழகக்காற்று
அக்குள் நுழைந்து
ஐசாய் குளிரும் உணர்வு...

எங்கட வீட்டு வீமன்
வாலை ஆட்டி குரைக்கும்...

"அம்மோய்.."
சொல்லாமல் கொள்ளாமல்
போய் நிண்டன்.

அம்மாவாணை அம்மா நம்பவே இல்லை!!
கடவுளாண அப்பா நினைச்சே பாக்கயில்லை!!!

கண்ணீர் கனக்க கதைக்க
வார்த்தைகள் ஊமையாகின.

பெருமூச்சொன்று
அடிவயிற்றில் ஏறி இறங்க...

அழுது முடிச்சு...
இமைகள் விறைச்சு;
கண்ணை திறக்க...
கனவு கலைஞ்சாலும்;
கண்ணீர் இனித்தது
கண்ணீர் இனித்தது...
ஊர் போகும் நினைவுகள் போல!!!!


🔘தமிழ்ப்பொடியன்®
Show more reac
Comments
Raguvaran Balakrishnan அருமை
Melliyal Uma Otukka vanthiddu porathu thane?
Vimaleshwara Sabaratnam கண்டிப்பா இந்தவருசம் வருவன் அக்கா
Vimaleshwara Sabaratnam
Write a reply...
இரா. மயூதரன் எங்கள் கனவுகூட கண்ணீரால் தானே வரையப்படுகிறது.
Sinthuja Rajkumar அருமையான வரிகள்
நித்தியா மரியாம்பிள்ளை கனவுகள் பலிக்கட்டும்.
Velu Vasanthakumaran இது கவிதை மாதிரி தெரியவில்லை யாரையாவது பார்த்து எழுதிய மாதிரியான இருக்கிறது
Ravi Magit மனதின் வலிகளே கனவில் வரும் போது அது கவிதயாக வரிகளாக வருகிறது சூப்பர் தம்பி
Aathy Arun இந்தியா வந்தனியள் ஒப்பன் இஞ்சாலயும் எட்டிப் பாத்திருக்கலாமல்லோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge