ஞாயிறு, ஜூலை 24, 2016

"நோ துறூ ஒழுங்கை- No Through Road"- பாகம் 1




2000 ஆண்டு
நாங்கள் அப்ப A/L படிச்ச காலம்.
பள்ளிக்கூட காதலுக்காக பெட்டையளுக்கு பின்னால திரிஞ்ச காலம்.

O/L ஓட எங்கட வயது பெட்டைகளுக்கு பின்னால திரியுற வேலையை நிறுத்தி எங்கள விட வயது குறைஞ்ச பெட்டையளுக்கு பின்னால திரியும் "ஒப்பிறேசனை-operation love" ஆரம்பிச்ச காலம்.

பருத்துறையில இருந்து நெல்லியடி, யாழ்ப்பாணம், அச்சுவேலி எண்டு கொஞ்சம் எங்கட நடவடிக்கைகளை விரிவு படுத்திய காலம்.

இயக்கம் காம்(camp) அடிக்க போறதுக்கு ஆயத்தப்படுத்துறதை விட அதிகமாக பிளான்(plan) போட்ட காலம்.
வேவு நடவடிக்கையில மூன்று படிநிலை இருக்கு,
1.முதல்ல லவ் பண்ணுற பெட்டை எந்த ரியூசனில படிக்கிறாள் எண்டு ரெக்கி எடுப்பம்
2.அவளின்ர பிரண்ட்ஸ் யார் எண்டு விசாரிச்சு கண்டுபிடிக்கிறது.
3.ரியூசன் ரைம்ரேபிள்(time table) எடுக்கிறது
இது ஆரம்ப கட்ட வேலை. இதுக்கு எங்கட பொடியள் உதவி செய்வாங்கள்.
அதுக்குப்பிறகு ஒரு ஆறு ஏழு தரம் ரியூசன் முடிய அவளுக்கு பின்னால போய் .....
லவ் பண்ணுற பெட்டையின்ர ரியக்சன் எப்பிடி இருக்கு எண்டு பாப்பம்.
ரியக்சனிலையும் (Reaction) மூண்டு வகை இருக்கு.
1.கொடுப்புக்குள்ள சிரிக்கிறது
2.வீட்டுக்குள்ள படலையை திறந்து போகமுதல் ஒருக்கா திரும்பி பாக்கிறது
3.பிரண்ட்ஸ் பெட்டையள் எங்களை பாத்து அவளை நக்கல் அடிக்கும் போது பொய்யுக்கு அந்த பெட்டையளை முறைச்சு பாக்குறது
இவ்வளவும் நடந்திட்டா பிள்ளைக்கு லவ் முட்(love mood) ஆரம்பிச்சிட்டு எண்டு அர்த்தம்.
அப்பதான் எங்கட அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பிப்பம்.
பொடியளை செற்பண்ணி அவள் ரியூசன் முடிச்சு வாற நேரம் எங்கட பெயரை சொல்லி கூப்பிட்டு பழிக்கிறது.அந்த நேரம் அவள் படும் வெக்கைத்தை பார்த்து ரசிக்கிறது.
ஒழுங்கை வாசலில காத்திருந்து எங்களை கடக்கும் போது ரைமிங்கில(timing) பெயரை சொல்லி பழிக்கவேணும். எங்கட பொடியள் அதை சிறப்பா செய்வாங்கள்.
அதிலையும் எங்கட பொடியள் "இஸ்ரேல் ரெயினிங்க்" எடுத்த மாதிரி அச்சொட்டா கிளைமோர் அடிப்பாங்கள்.
ஆரம்ப கட்ட வேலைகள் எல்லாம் முடிச்சுவிட்டு என்னிடம் வந்தான் என் ஆருயிர் நண்பன்.
(ஆண்டு 6 இல இருந்து நண்பன் அவன்)
"மச்சான் இண்டைக்கு எப்பிடியும் அகல்யாவுக்கு கடிதம் குடுக்கிறம்"
"என்ன மச்சான் அவளெண்டு முடிவு எடுத்திட்டியோ?"

ஏனென்டால் ஆண்டு 6 இருந்து அவன் பாக்கும் 4வது பெட்டை இது.
"மச்சான் கட்டினா அவளைத்தான் கட்டுவன்"
சைக்கிளை ஸ்ராண்டில் விடாமல் ஒற்றைக்காலில நிண்டு சொன்னான்.
"சரி மச்சி ஆனால் நெல்லியடிக்கு உவ்வளவு தூரம் நான் சைக்கிள் ஓடி வரமாட்டன். நீதான் ஏத்திகொண்டு போகவேணும்."
"நான் ஓடுறன் நீ ஏறு"
"ஓகே வா"
"வரயுக்கையும் நீதான் ஓடுவாய் மவனே"

போகும் போது அவளை பாக்கும் ஆர்வத்தில சைக்கிள் ஓடும் என் நண்பன்..
வரும் போது நான் தான் ஏதோ தேய தேய ஓடவேணும்.
இது கனதரம் நடந்திருக்கு எனக்கு.

"மச்சி எங்கயடா லவ் லெட்டர். காட்டு பாப்பம்?""மச்சி வெறுக்கிறாய் பாத்தியா ? பாலனுக்கு நீதானே எழுதிக்குடுத்தனி. எனக்கு எழுதிதரமாட்டியா?"


கெமிஸ்ற்றி கொப்பியின்ர பின் ஒற்றையை கிழிச்சு சைக்கிள் கரியரில கொப்பியை வைச்சு "லவ் லெட்டர்" எழுதினம்.

"மச்சன் இந்தா சிவப்பு , நீலப்பேனை.. கலரா வடிவா எழுது மச்சி.. "

ஈஸ்வரநாதன் சேரின் விஞ்ஞான பாடத்துக்கு கலர் கலரா நொட்ச்(notes) எழுதிற மாதிரி.

ஏற்கனவே என்ர நண்பன் ஒருத்தனுக்கு எழுதின காதல் கடிதத்தின் வரிகள் நினைவில் வைத்து சில மாற்றங்கள் செய்து புது காதல் கடிதம் எழுதியாச்சு.

"மச்சி சரி கடைசியில கையெழுத்தை எண்டாலும் வையண்டா "" மச்சான் கையெழுத்து வேணாம் கீழ ஒரு இதயமும் ரோசாப்பூவும் கீறிவிடு "

அவன் ஏன் கையெழுத்து வைக்கவில்லை என்பதற்கான காரணத்தை கதையினின் கடைசியில சொல்லுறன்.
ஒப்பிரேசன் அகல்யா(operation akalya) ஆரம்பம்...!!!

பருத்துறையில் இருந்து நெல்லியடிக்கு போகும் வழியில்..
மந்திகை ஆசுப்பத்திரியை கடக்கும் போது நான் என் நண்பனிட்ட கேட்டன்.

"மாச்சான் ஏண்டா அவளை பாக்குறாய்..? உனக்கு செட்(set) ஆகுமா?"
" மச்சி நானும் பயோ(biology) படிக்கிறன் அவளும் பயோதான், இரண்டுபேரும் டொக்கர் ஆனா அந்த மாதிரி மச்சான்"
" டொக்டர்(doctor) டொக்டர கட்டினா life ஈசி மச்சான்"

அவன் சொன்ன விஞ்ஞான விளக்கம் எனக்கு விளங்கவேயில்லை அந்த நேரம்.
போகும் வழியில் மாலுசந்திக்கு கிட்ட உள்ள சலூன் கடையில் திடீர் எண்டு சைக்கிளை நிப்பாட்ட சொன்னான்.
" மச்சி ரியூசன் விடப்போகுது .. நேரமாச்சடா ......வந்து தலைமயிர் வெட்டலாம்."
" மச்சி உள்ள வா ஒரு அலுவல் இருக்கு"

சலூனுக்குள் போனவன் சலூன் கடைக்கர பொடியனோட கன நாளா பழகினமாதிரி ...கதைச்சுப்போட்டு...

முகத்துக்கு பவுடர் போட்டு தலை இழுத்துக்கொண்டு வந்தான்.

"மச்சி முகம் ஒகே யாடா. வேர்வை இல்லைத்தானெ?...தலை இழுப்பு ஒகேயா""மச்சி நானும் இழுத்திட்டு வரவா?"நான் கேட்டேன்.

" டேய் உன்ர ஆளையா பாக்கப்போறம் என்ர ஆளைத்தானெ நான் பாக்கபோறன். அதெல்லாம் வேணாம் வா."
பொறாமை அந்த சனியனுக்கு.
" மச்சி சலூன் பொடியனிட்ட என்ன கேட்டனி?'
" அதோ ... அகல்யாவின்ர ரியூசன் முடியுற நேரத்தை confirm பண்ணினனான்.

சலூன் கடைதான் "Information centre"
சலூன் பொடியன் தான் "Data base"

ஒரு மாதிரி ரியூசன் ஒழுங்கை முடிவில மாலை 5.30 இக்கு காத்திருந்தம்.
குமரன் சேரின் physics பாடம் முடியும் நேரம்.
முதல்ல பொடியள்தான் வெளியில வந்தாங்கள்..

அதில ஒருத்தன் எங்களுக்கு கிட்டவந்து நண்பனிடம் சொன்னான்.

"அண்ணை ..... அண்ணி இண்டைக்கு சிவப்பு புள்ளி புள்ளிச்சட்டை...."

அவன் தான் எங்கட வேவுப்பிரிவு. அகல்யாவின் வகுப்பில படிக்கும் பொடியனை ஸ்பை (spy)ஆக வைச்சிருந்தான் என் நண்பன்.

கண்ணைக்கவரும் பட்டாம் பூச்சிகளாக சிவப்பு, மஞ்சள், பச்சையென பிள்ளைகள் வெளியில் வரத்தொடங்கினார்கள்.

எனக்குப்பரவாயில்லை... பருத்துறையில இருந்து நெல்லியடி வந்ததுக்கு பிரயோசனம்.

"மச்சி சைக்கிளை எடு என்ர ஆள் வருகுது... "

நான் ஆயத்தமானேன். நண்பன் முன்னுக்கு ஏற சைக்கிளை மெதுவாக எடுக்க ஆயத்தமானேன்.
அகல்யா தன் தோழிகளோடு எங்களை கடக்கும் போது அவளை நான் பார்த்தேன்.
நண்பன் குனிந்த தலை நிமிராமல் " எடடா.... எடடா சைக்கிளை.." என முனகினான்.

சும்மா சொல்லக்கூடாது நண்பனின் தெரிவு எனக்கு கொஞ்சம் பொறாமையாக தான் இருந்திச்சு.

" மச்சி ஆள் சூப்பர்.... இண்டைக்கு எப்பிடியும் முடிவை கேக்குறம்"
மெதுவாக பின் தொடர்ந்தோம்.

அகல்யாவின் நண்பி எங்களை திரும்பி பார்த்துவிட்டு அகல்யாவின் காதில் ஏதோ குசுகுசுத்தாள்.

நாங்கள் பின் தொடர்வது அகல்யாவுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது.

"மச்சி வீடு தெரியுமாடா?"" வாற ஒழுங்கைக்குள்ள தான் வீடு... பின்னால விட்டு மெதுவா மறி. நான் லவ் லெட்டரை அவளிட்ட குடுக்கிறன்"

ஒழுங்கைக்குள் அகல்யா மட்டும் திரும்பினாள்.
சைக்கிளை வேகமாக மிதித்து முன்னுக்கு முந்தி (over take) வழி மறித்து சைக்கிளை நிறுத்தினேன்.
அகல்யா இதை எதிர்பார்க்கவில்லை. லேடீஸ் சைக்கிள் எண்டதால சடாரென காலை ஊண்டி நிப்பாட்டினாள்.
நண்பன் இறங்கி நேரே போய் என்ன சொன்னானோ தெரியவில்லை... கடிதத்தை நீட்டினான்.
அகல்யா குனிந்த தலை நிமிராமல் ...கடிதத்தை வாங்கவேயில்லை...
இவன் கெஞ்சிக்கொண்டே நிண்டான்.
எனக்கு கடுப்பாகி " டேய் மச்சி...." என மெதுவாக கூப்பிட்டென்.
நான் கடுப்பாகவும் பயப்பிடவும் முக்கிய காரணம்.... அது நோ துறு ஒழுங்கை....!!!!
இதுகள் இரண்டும் இழுபறிப்படவும் அகல்யாவின் வீட்டு படலை திறந்து "மாமி" (அகல்யாவின் அம்மா) வெளிய வரவும் .....கணக்கா கையும் களவுமா மாட்டுப்பட்டம்.
சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடவும் வழியில்லை....
ஏனெண்டா அது நோ துறு ஒழுங்கை...!!!
(அந்த நேரம் ஒழுங்கை வாசலில "No through Road" எண்டு போட்டிருந்தா நான் சைக்கிளை ஒழுங்கைக்குள்ள விட்டிருக்கவே மாட்டன்)
அகல்யாவின் தாயை கண்டதும் நண்பன் ஓடி வந்து சைக்கிளில் ஏறினான்.
களத்தில் ...(ஒழுங்கைக்குள்)
அகல்யா
அகல்யாவின் அம்மா...( ஆட்டுக்கு குழை பிடுங்கப்போகும் கொக்கத்தடியோடு)
நான்
நண்பன்
கொக்கத்தடியால் சைக்கிளை மறித்த அகல்யாவின் அம்மா...
மாமிக்கு நடந்த விசயங்கள் எல்லாம் விளங்கிட்டுது.
"அக்கா தங்கச்சியோட பிறக்கயில்லையோ நீங்கள்....."
எண்டு ஆரம்பித்து...
"கொக்கத்தடியால அறுத்துப்போடுவன்" வரை அகல்யாவின் அம்மாவின் ஏச்சு கொத்துக்குண்டுகளாய் எங்களை தாக்கியது.
நாங்கள் இரண்டு பேரும் ஆயுதங்கள் இல்லாத நிராயுத பாணிகளாக மெளனமாக நிண்டம்.
இதில என்ன பம்பல் எண்டா மாமிக்கு இதில ஆர் மருமோன் எண்ட குழப்பம் வேற...!!!
ஏனெண்டா என்ர முகத்தை பாத்தும் ஏச்சு விழுந்திச்சு.
"இந்தப்பக்கம் இனிமேல் உங்களை கண்டால்... பெரிய பிரச்சினை வரும்" எண்ட முடிவுரையோடு மாமி எங்களை போகவிட்டா.
இதுவரைக்கும் எந்த ரியாக்சனும் காட்டாமல் பேசாமல் நிண்டாள் அகல்யா.
நண்பன் குனிந்த தலை நிமிராமல் "மச்சி சைக்கிளை எடுடா" என ஈனக்குரலில் சொன்னான்.
தப்பினால்க்காணும் என ஒழுங்கையை விட்டு ரண்டுபேரும் ஓடித்தப்பினம்.
மாலுசந்தி தாண்டும் வரை இரண்டு பேரும் கதைக்கவேயில்லை.
அவனுக்கு ஒண்டு எண்டால் எனக்கும் தானே அவமானம்...துன்பம்...கவலை.
நண்பேண்டா.....
" மச்சி டேய் விடு விடு ஜோசிக்காத... அரம்பத்தில உப்பிடித்தான்.. போக போக எல்லாம் சரிவரும்"
நண்பனின் மனதை தேற்றினேன்.

" மச்சி ... அருந்தப்பு ... லவ்லெட்டர் மட்டும் மனிசியின்ர கையில கிடைச்சிருந்தால்...
கிழிஞ்சிருக்கும் எங்கட நிலை"
எண்டன் நான்.

" மச்சான்......நான் கடிதத்தை அவளின்ர கூடையில போட்டிட்டு வந்திட்டன்ரா..."
இங்கதான் கிளைமாக்ஸ் இருக்கு.

"அடப்பாவி... வசமா மாட்டினம் மச்சான்..."

அடுத்த கிழமை..!!!!
நான் நண்பனுக்காய் எழுதிய "காதல் கடிதம்" கிடைக்கக்கூடாத ஒரு ஆளின் கையில் கிடைத்துவிட்டது.
யார் அது?
எப்பிடிச்சமாளித்தம்?
அகல்யா நண்பனுக்கு கிடைத்தாளா?


தொடரும்...!!!

🔴தமிழ்ப்பொடியன்®


Comments
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Thanush Slk வார கிலமயா நோ😩😩
Thanush Slk ரொம்ப நல்லா இருந்த்துச்சு 🙏🙏
Vimaleshwara Sabaratnam
Write a reply...
செல்வகுலேந்திரன் கஜேந்திரன் வடிவா வயிறு குலுங்க குலுங்க சிரித்தேன் .....
Vimaleshwara Sabaratnam நன்றி மச்சான்
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Sivapathasundrampillai Navaneethan கனபேர் மாட்ட போகினம் கதையோடு கதையாக
Vimaleshwara Sabaratnam Sivapathasundrampillai Navaneethan
அண்ணை பழைய நினைவுகளை பம்பலாக மீட்டுவதே எங்கட நோக்கம்.
இளமைக்கால காதல் அனுபவங்களை .... இப்ப கட்டின மனிசிக்கு சொல்லி சிரிக்கும் போது அதில ஒரு சந்தோசம் அண்ணை..lol
...See More

Sivapathasundrampillai Navaneethan தம்பி சூப்பர்.நானும் பம்பலா தான் சொன்னன்.அது ஒரு காலம் இப்பத்தைய பொடியலுக்கு உந்த அனுபவங்கள் கிடைக்காது.இப்படி சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவிக்கவும் தெரியாது
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Ravindran Keerthanan அண்ணா Super.....
Thava Nesan Anupavam.....
Arunthavam Pakeetharan அந்த மணல் ஒழுங்கை பற்றி எப்ப எழுதுவீங்க சார்.....?
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Jude Prakash யாழ்ப்பாண காதல் கதை..தமிழ் பொடியன் ஸ்டைலில்... சூப்பர்
Gunasingam Pirasath சைக்கிளும், சைக்கிள் செயினும் கூட வரப்பிரசாதம்... காதலிக்காக காத்திருக்கவும் காதலை சொல்லவும்...
Vimaleshwara Sabaratnam என்னை எழுதவைத்து ஊக்கப்படுத்திய Jude Prakash அண்ணாவுக்கே
எல்லாப்புகழும் ...lol

Vimaleshwara Sabaratnam Gunasingam Pirasath
உண்மைதான் தம்பி
காதலியை கண்டதும் ... சைக்கிள் செயின் தானாக களரும்.
...See More

Arjun Rajeswaran super boss I think that girl may your wife 
Vimaleshwara Sabaratnam thampi ...
very very wrong guess.....lol
நாங்கள் சுலபமா சிக்கமாட்டம் கண்டியளோ...

Vimaleshwara Sabaratnam
Write a reply...
Chandran Shanmugam கைநம் ,நம எண்டு ஏதோ எழுத முனையிது , ஆனாலும் நல்லா இருக்கு எண்டு வாயும், மனமும் உச்சரிக்குது எல்லாம் இளமையின் நினைவலையால் எண்டு நினைக்கிறன் தொடருங்கோ....
Nithya Kirushnaramanan Very nice. Continue. ...
வேள் நாகன் நானும் யாழ்ப்பாணப் பெடியன் தான் நாங்களும் உது எல்லாத்தையும் தாண்டி வந்தவர்கள் தான் ஆனால் பாருங்கோ மாட்டுப் பட்ட உடன மாமிக்கு அதில ஆர் உண்மையான மருமகன் எண்டு தெரியாம ..... சிறப்பு கன நாளைக்கு பிறகு என்னை மறந்து சிரித்தேன்
Vimaleshwara Sabaratnam nanri annai... y blood..same blood..lol
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Ravi Chandran பருவகால சேட்டைகளை வடிவ எழுதியுள்ளீர்கள் காதல் கல்யாணத்தில் முடிந்த்தா?
Sithamparappillai Ajanthan அதெல்லாம் கிடக்கட்டும், இப்ப அகல்யா எங்கே? நீங்கள் முந்தி எழுதிய கடிதங்கள் எல்லாம் சரியான அன்பாய் இருந்திருக்கும் போல ...............
Vimaleshwara Sabaratnam annai .... please wait until next friday..lol
Sithamparappillai Ajanthan இதிலை எவனுக்குமே பொறுமையில்லை தம்பி ...lol
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Bhamini Daniel Your writting bring back my school days. Keep writing
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Theivigan Panchalingam அப்ப மட்டும் சுமந்திரன் அரசியலில இருந்திருந்தா உந்த அகல்யா பெடியனிண்ட கண்ணில படாமலே போயிருப்பாள்... 
Vimaleshwara Sabaratnam Theivigan Dave Panchalingam
மச்சி...
மருந்து குடிக்கும் போது குரங்கை நினைக்காமல் குடிக்கவேணும் என சொன்னாராம் ஒரு டொக்டர்.

நானும் மறக்க நினைக்கிறன்...
நீங்கள் விடமாட்டியள் போல கிடக்கு...lol

Sithamparappillai Ajanthan தயவுசெய்து அகல்யாவையும் அரசியலையும் கலக்காதேங்கோ ராசுகளே .............
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Jena Siva Wow so cute
அம்பன் நிதர்ஷன் அண்ணா சூப்பர்
அம்பன் நிதர்ஷன் அண்ணா பள்ளிக்காதல் படலை வரைக்கும் தான் சொந்தம்
Veerasingam Rajalingam nadakadum  trampi thopi kanaperuku alavaka varumpola See Translation
Vimaleshwara Sabaratnam Veerasingam Rajalingam
அடுத்தது எங்கட கதைதான்....
(அண்ணை no tension... summaa laka laka)

Venthan Ponniah சும்மா கண்டபடி பழைசுகளை கிழப்பாதையுங்கோ. மனசு தாங்காது
Vimaleshwara Sabaratnam அண்ணை...
பழசுகளை ஒருக்கா திருப்பி தேடி எடுத்து அதை நினைச்சு பார்க்கும் சுகம் எனக்கு மட்டுமல்ல... உங்களுக்கும் கிடைக்கட்டும் எண்டுதான்...

Vimaleshwara Sabaratnam

Write a reply...
Ravi Rajh அருமை அண்ணா..!!

அடுத்த பதிவுக்காய் காத்திருக்கிறோம்.......

Sanjey Sinnathurai நல்லா தான் இருக்கு தம்பி.... நீங்க எழுதினா நாங்க வாசிப்பம்!! ........ எங்கட பெட்டயல் அப்ப கொஞ்சம் அந்த மாதிரி தான் இருந்தவகள்!!!! So it was all worth it!!! ☺️
Siva Ranchani · Friends with Ravi Rajh
Wow

Rathy Kanes Superrrr...Thambi:)))
Ramanie Sinnadurai Excellent. ...the way u described everything is fantastic. ..I culd understand ur teenage by reading this. ..I love da way it goes. .continue. ...all da very best (still imagine da way how maamy shouted)
Kalps Bala Congratulations! !!!!!!!! Expecting from u more and more !!!!!!

Jega Srinivasan சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே தமிழ்ப் பொடியன்
Ravithas Maruthapiran Very nice kandiyallo😜
Raj Narayanaswamy Gounder சைக்கிள்ள போய் ... பெட்டையளுக்கு பின்னால சுத்தின சுகம்...
தனி சுகம்..!!!

Bala Ragu அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!நண்பனே!இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே!இல்லையே!அருமை அருமை
Jaz Vanee நல்லாத்தான் இருக்கு....
கதிரமலை யசோதரன் கேக்கேக்க நல்லாத்தான் இருக்கு பாருங்கோ ...
Nivetha Uthayan உந்தக் கதை வாசிச்சு எல்லாம் வரிசையா வருது. ஒரேயடியா எழுதியிருக்கலாம் ....
Rajaratnam Sriganeshwaran Malarum ninaivugal.... Waiting for climax
Vimaleshwara Sabaratnam Suren Kanapathippillai
வாடா என் மாப்பு.

Vimalathevi Rajasundaram ethir patththuk karthiruppom
Aseervatham Thananchayan நல்லாத்தான் இருக்கு....
Rajadurai Mahintharaj Machchi Mayuran public.......
Sssssssshhhhhhhh

Sathiya Kumar
Sathiya Kumar

Yogini Vishnuraj Very interesting and super the way you told
வன்னி நாச்சியார் நல்லாயிருக்கு !எழுதுங்கோ .....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge