அவுஸ்திரேலியா வந்து 8 வரியமாகுது.
இப்பவும் என்ன சாமான் வாங்கினாலும் டொலரை ($) நூறால பெருக்கித்தான் பாக்குறன்.
எனக்கு மட்டும் தான் உந்த பழக்கமோ அல்லது உங்களுக்கும் இருக்கோ??? 😋
அண்டைக்கு உப்பிடித்தான் ஒரு Adidas செருப்பின்ர விலை $199.99எண்டு இருந்திச்சு.
ஏனெண்டு கேட்டா branded shoes அந்த விலைதானாம்!!!!
ஏனெண்டு கேட்டா branded shoes அந்த விலைதானாம்!!!!
199.99x100= 19,999ரூபா!!!!!
எனக்கெண்டா அஞ்சு கெட்டு அறிவும் கெட்டு; மண்டை விறைச்சு அப்பிடியே வைச்சிட்டு வந்திட்டன்.
20,000 ரூபாக்கு செருப்பு வாங்கி போட்டு "லெவல்"காட்டத்தான் வேணுமோ....!!!😡🤔
🔘சனிக்கிழமை சாமியார்®
Comments
Melliyal Uma உண்மையா மண்டை விறைச்சுத்தான் போட்டுது. இண்டைக்கு வெள்ளிக்கிழமை எண்டது கூட நினைவில்லாமக் கிடக்கு !!!
Vimaleshwara Sabaratnam இஞ்சை சனியாகிட்டுது அக்கோய்....
"மழைக்கால இருட்டு எண்டாலும் சாமியார் கொப்பிழக்கப்பாயார்" 😋
"மழைக்கால இருட்டு எண்டாலும் சாமியார் கொப்பிழக்கப்பாயார்" 😋
Vimaleshwara Sabaratnam உங்களோட கதைச்சு வெல்லேலாது நான்.
அதனால வெள்ளிக்கிழமை சாமியார் எண்டு போடட்டே!!! ;-)
அதனால வெள்ளிக்கிழமை சாமியார் எண்டு போடட்டே!!! ;-)
Melliyal Uma Vimaleshwara Sabaratnam மரியாதையா தப்பை ஒத்துக்கொள்ள வேணும். உங்கையும் இப்ப வெள்ளிக்கிழமைதான். சனிக்கிழமையாக இன்னும் 1 1/2 மணித்தியாலம் இருக்கு.
Sara Sivam நானும் வந்து 19 வருடங்கள் இன்றும் இலங்கைப்பணத்தால்
தான் பெருக்கிப்பார்க்கிறேன் என்ன ஒரே வித்தியாசம்
வாங்கிய பின் 😂😁😀 கணக்குப் பார்ப்பது தவறு,( இலங்கையில்
செருப்பின் குறைந்தவிலையே 2,000ரூபாவாக இருக்கும்போது
எதனுடன் அவர்கள் ஒப்பீட்டுப்பார்க்கமுடியும் பழையகாலத்துடன்
தான் , 30,000 ரூபா உழைப்பவன் 2,000 ரூபாவுக்கு வாங்க முடியுமாயின்
20,000 ரூபாவுக்கு வாங்கும் தகுதி உங்களுக்கு இருக்காதா?😁😂😀😆

Vimaleshwara Sabaratnam அண்ணை என்ன சொன்னாலும்,
எவ்வளவுதான் உழைச்சாலும் உந்த நூறால பெருக்கும் குணம் போகுதில்லை அண்ணை!!!...See More
எவ்வளவுதான் உழைச்சாலும் உந்த நூறால பெருக்கும் குணம் போகுதில்லை அண்ணை!!!...See More
Sara Sivam தம்பி அதே குணம்தான் எனக்கும் , உங்களுக்கு எட்டுவருசமாத்தான்
எனக்கு 30 வருசத்துக்கு மேலாக (இங்கவந்து19 வருசந்தான்)
போனகிழமை படம்பாக்கப்போயிட்டு வந்து கணக்குப்பார்க்க...See More
எனக்கு 30 வருசத்துக்கு மேலாக (இங்கவந்து19 வருசந்தான்)
போனகிழமை படம்பாக்கப்போயிட்டு வந்து கணக்குப்பார்க்க...See More
Lingathasan Ramalingam Sornalingam நான் உங்கட பக்கம்Vimaleshwara Sabaratnam நீங்கள் 'சனிக்கிழமை சாமியார்' எண்டு எழுதினதும் அங்க(அவுஸ்திரேலியாவுல) சனிக்கிழமை ஆயிட்டுது எண்டு ஊகித்து விட்டேன். ஒரு வரியம் ரெண்டு வரியம் எண்டாப் பறுவாய் இல்லை. எட்டு வருஷம் ஆனாலும் இப்பவும் நூறால பெருக்கிப் பார்க்கிறியள் எண்டால் உங்களுக்கு வந்திருப்பது 'யாழ்ப்பாணி எக்கோனோமிக்கோ ஃபோபியா' எண்ட ஒரு பயங்கரமான நோய். குணப் படுத்திறது கொஞ்சம் 'கயிற்ரம்' தான் கண்டியளோ? :D :D :p
Lingathasan Ramalingam Sornalingam இல்லை இல்லை புலம் பெயர்ந்து வெளி நாட்டுக்கு செல்லும் போது எங்களோடையே நாங்க கொண்டு வாற ஒரு நோய். நம்ம இலங்கையர்களின்(தமிழர்களின்) மரபணுவில் உள்ள ஒரு நோய். இதை முற்றாக இல்லாதொழிக்க எங்கட இனத்திலேயே ஒரு மருத்துவ நிபுணன் பிறந்து வந்து 'மருந்து' கண்டு பிடிச்சு....நடக்கிற காரியமா சொல்லுங்கோ? :-)
Vijayakumar Nagarasa நான் இப்ப தான் வாங்கிட்டு வாறன் 170€ க்கு. இது லெவல் காட்ட இல்ல.. தொடர்ந்து நிண்டு வேலை செய்யிறவைக்கு கால் பாதம் வலி ஏற்படாம வைச்சிருக்கும் திறன் உள்ளது இது.
Vijayakumar Nagarasa கிட்டத் தட்ட 14 மணித்தியால வேலை... போக வர 3- 3 1/2 மணித்தியாலம் பயணம். எல்லாமே நிண்ட நிலை தான்....!!!
யோகா. எஸ். அண்ண நூறால பெருக்கத் தேவையில்ல..........ரெண்டு O(00) பக்கத்தில கூட்டிப் போட்டாக் காணும்...........
Senthoorvel Kanthashamy ஒரு கச்சான் பருப்பு பைக்கற் வாங்கிச் சாப்பிடுறது என்டாலே இலங்கைக் காசுக்கு மாத்தித் தான் பார்ப்பன். அது கஞ்சத்தனம் என்டதுக்கு அப்பாலை சிக்கனம் என்டதாய் அமையும்ண்ணே!
Ruthirakumar Jayaratnam இந்த நடைபேசியின் விலை 14,000 டொலர்களாம். விரும்பினால் வாங்கவும் தமிழ்ப்பொடியன். :-)Vimaleshwara Sabaratnam Kabi Irumpan
http://www.bbc.co.uk/programmes/p03wz8qt...
http://www.bbc.co.uk/programmes/p03wz8qt...
Ruthirakumar Jayaratnam மூன்று தினங்களுக்கு முன்னர் தான் அறிமுகம் செய்யப்பட்டது Solarin Smartphone என்பது இதன் பெயர். அந்திரொய்ட் செயலியில் இயங்குகிறது. முதலில் கோடீஸ்வரர்கள், அரச துறைகளுக்கே விற்கப்படும். சாதாரண பொது மக்களும் வாங்க எந்தத் தடையுமில்லை. எங்கு விற்பனையாகிறது என்ற தகவல் கிடைத்ததும் தருகிறேன்யோகா. எஸ்.
Ramanie Sinnadurai We forgot da rupee.. If u calculate like this u never feel like buying anything...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக