ஓம் ஃபேஸ்புக்காகே நமக!!!
சனிக்கிழமை சனியன் ... சனிக்கிழமை சனியன் எண்டு ஒரு பிரச்சினை(தோசம்) வெளிநாடுகளில் இருக்கு.
அதுவும் தமிழாக்களின் குடும்பத்தில இந்த சனிக்கிழமை சனியன் எண்டுறது பெரிய பிரச்சினை பாருங்கோ.!!
இந்த சனிக்கிழமை சனியனை தீர்க்க என்னிடம் பல பக்தகோடிகள் வேண்டினார்கள்.
எல்லாம் வல்ல ஃபேஸ்புக் ஆண்டவரின் துணை கொண்டு அதற்கான பரிகாரத்தை சொல்லுறன் ...
விரும்பின ஆக்கள் படிச்சு பலன் பெற்று; வாழ்க்கையில் நிம்மதி அடையலாம். முடிஞ்சா முத்தியும் அடையலாம்.
குடும்பப்பெண்கள்;
1. சனிக்கிழமை அதிகாலையே எழும்பி குசினியை கூட்டி ; சுத்தமாக்கி சிங்கில(sink) கிடக்கும் சாப்பாட்டு கோப்பைகளை கழுவி சுத்தம் செய்யவேணும்.
2. குசினியில் இருக்கும் சின்ன குப்பை வாளியை(kitchen bin) சுத்தமாக்கி; மறக்காமல் புது பையை (bin bag)மாற்றிவைக்கவேணும்.
3.குளிர்சாதனப்பெட்டியை திறந்து அதில் அதிகுளிரூட்டியில்(freezer) இருக்கும் ஆட்டிறைச்சியை வெளியில் எடுத்து தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும்.
4.தேத்தண்ணி வைச்சிட்டு; பிள்ளைகளையும் புருசனையும் எழுப்பி அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.
முடிந்தால் பாணை சூடாக்கி ஜாம் பூசிக்குடுத்தால் இன்னும் சிறப்பு!
5. சனிக்கிழமை தமிழ் பள்ளிக்கூடம் என்பதால்; பிள்ளைகளை வெள்ளனயே எழுப்பி அதுகளை வெளிக்கிடுத்திக்கொண்டே பள்ளிக்கூடத்தில விட்டுட்டு வரவேணும். ஏலுமெண்டால் திரும்பவும் ஏத்திக்கொண்டு வந்தால் "சனிக்கிழமை சனியன்" கெதியில போக வாய்ப்பிருக்கு.
6.பிள்ளைகளை சனிக்கிழமை பள்ளிக்கூடத்துக்கு விட்டுட்டு வரும் வழியில்; தமிழ்கடைக்குப்போய் யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூளும் இரவுக்கு இடியப்பமும் சொதியும் வாங்கிவரவேணும்.
7.பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிக்கூடத்தால வரமுதல்; அதுகளின்ர அறையை கூட்டி சுத்தமாக்கி முடிஞ்சா பிள்ளைகளின் உடுப்புகளையும்; மறக்காமல் புருசனின் உடுப்புகளையும் washing machine இல போடவேணும். அதுக்குள்ள இருக்கும் தோய்ச்ச உடுப்புகளை எடுத்து கொடியில காயப்போடவேணும். கொடியில உள்ள உடுப்புகளை எடுத்துவந்து மடிச்சு அடுக்கிவைக்கவேணும்.
8.முடிஞ்சால் உங்களின் காரையும்; புருசனின் காரையும் சுத்தமாக்கி vacuum பிடிச்சால் நன்மைகள் பல கிடைக்கும்.
9.வெள்ளிக்கிழமை இரவு புருசன் குடிச்சுப்போட்டு வைச்ச வைன் கிளாசை(wine glass) எடுத்து கழுவிப்போட்டு; மிச்ச சொச்ச மிக்சர் பைக்கற்றை எடுத்து சொப்பிங் பாக்கால வடிவா இறுக்கமா சுத்திக்கட்டி வைக்கவேணும்.
10. கடைசியா விடியக்காலமை அதிகுளிரூட்டியில் (freezer)இருந்து எடுத்து தண்ணி ஊத்திவைச்ச ஆட்டிறைச்சியை சின்ன சின்ன துண்டா( note this important point) வெட்டி ;சும்மா அந்தமாதிரி கறி ஒண்டு வைக்கவேணும்.மறக்காம பாஸ்மதி அரிசியை குழையவிடாமல் ஒரு சோறும் காய்ச்சவேணும்.
மிக முக்கியமா இதுகள் எல்லாம் செய்யும் போது; கண்டிப்பாக உங்களின் தொலைபேசியை OFF பண்ணி வைக்கவேணும். அப்பிடிசெய்யயில்லையெண்டால் சனிக்கிழமை சனியன் உச்சத்தில நிண்டு ஆட அதிக வாய்ப்பிருக்கு.
மேல சொன்ன விசயங்களை மூண்டு மாதம் ...
மூண்டு மாதம் என்ன? வாழ்க்கைபூரா செய்தியள் எண்டா..
சனிக்கிழமை சனியன் உங்களை அண்டாது.
ஓம் ஃபேஸ்புக்காகே நமக!!!!
🔴சனிக்கிழமை சாமியார்®
மிக மிக முக்கியகுறிப்பு: "குடும்பப்பெண்கள்"எண்டு இருக்கிற இடத்தில் குடும்ப ஆண்கள் எண்டும்;
”புருசன்” எண்ட இடத்தில் பொஞ்சாதி (மனிசி) எண்டும் மாத்திப்போட்டு திரும்பவும் ஒருக்கா மனசுக்குள்ள வாசிக்கவும்.
முக்கியமா அப்பிடி மாத்தாமல்;சத்தமா மனிசியின் காதுக்கு விழும்படி வாசிக்கவேண்டாம்.
அப்படி சத்தமா வாசிச்சு வரும் விளைவுகளுக்கு சனிக்கிழமை சாமியார் பொறுப்பெடுக்கமாட்டார்.
(அடி பலமெண்டால் உடனடியா ஆசுப்பத்திரிக்கு ஓடவும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக