ஓலை குடிசை
ஓட்டை வழியே
மழைதுளிகள் உள்ளே
ஊத்தும்
குண்டுக்கோப்பை நிறைக்கும்
ஒழுக்குத்தண்ணீர்
நாய் குரைக்கும்
காகம் கரையும்
அம்மா அடிக்கடி எட்டிப்பாக்குறா
காணாமல் போன அண்ணா
வருவான் எண்டு...
அம்மாக்கு தெரியாது
அண்ணாவின்
மரணச்சான்றிதழை
விதானையார் அப்பாவிடம்
போன மாதம்
கொடுத்தது..!!!
🔘தமிழ்ப்பொடியன் ®
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக