அரசியல் பத்திகளை எழுதும் போது எங்களை திருப்திப்படுத்தவோ அல்லது அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தவோ எழுதக்கூடாது.
எனக்கு சரியென்று பட்டதையும் எழுதமுடியாது.
அரசியல் பத்தி எழுத்தாளர்கள் நடுநிலையாகவும் இருக்கமுடியாது.
ஏனெனில் உண்மைகளை எழுதும் போது அது ஒரு பக்கச்சார்பாகவே இருக்கும்.
செய்திகளை எழுதும் போது சம்பந்தப்பட்ட இரு தரப்புகளோடும் நேரடியாக பேசவேண்டும்.
ஒரு நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் நடந்த காரண காரியங்களை உன்னிப்பாய் அவதானிக்கவேண்டும்.
ஒரு அரசியல் பத்தி எழுதும் போது Follow up மிக மிக அவசியம்.ஆனால் அதை யாரும் செய்வதில்லை. எழுதிய பத்தி பிரசுரமானதா ? அதோடு சரி. அடுத்த பத்தியை எழுத ஆரம்பித்துவிடுவோம். இது ஆரோக்கியமான எழுத்தியல் அல்ல.
மீண்டும் சொல்கிறேன்..
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது எனது கொள்கை.
வன்முறைகளை பொதுவெளியில் பிரயோகிப்பது தவறு.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது எனது கொள்கை.
வன்முறைகளை பொதுவெளியில் பிரயோகிப்பது தவறு.
"காடைத்தனம்" என்ற வார்த்தை சிலவேளைகளில் அரசியல் பத்தி எழுத்தாளர்களின் பத்திகளை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வாகவும் நான் பார்க்கிறேன்.
(மேலெ கூறப்பட்ட விடயங்கள் சுயவிமர்சனமாக எனக்கும் பொருந்தும்.)
© தமிழ்ப் பொடியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக