புதன், மார்ச் 08, 2017

தமிழக மீனவர்கள் வீணாக சாவது எதற்காக???



இந்தவாரம் ஒரு தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது மீண்டும் ஒரு பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏனெனில் ஒரு அப்பாவி மீனவனின் உயிரை குடிக்கும் அளவுக்கு இலங்கை கடற்படையின் துப்பாக்கிகள் இன்னமும் கோபத்துடன் இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. பல ஆண்டுகளாக அவர்கள் செய்யும் கொலைகளுக்கு பல்வேறான காரணங்களை சொன்னார்கள். ஆனால் இப்போது இதற்கு என்ன காரணம் சொல்லப்போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

ஏற்கனவே இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை சென்ற வருடம் நடந்தேறியது.
இதில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். இந்த பேச்சுவார்த்தையில் பல விடயங்கள் பேசப்பட்டபோதும்; முக்கியமாக “”எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின்" பிரச்சினை சம்பந்தமாக பேசப்பட்டதாய் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின.

தமிழக மீனவர்கள் ஏன் எல்லைதாண்டி வருகிறார்கள்?
இந்தியாவின் தெற்குப்பகுதியில் குறிப்பாக இராமேஸ்வரம் பகுதிக்கும் இலங்கையின் வடமுனைக்கும் இடையில் இருப்பது வெறும் 28 கிலோமீற்றர்தான். அதாவது யாழ்ப்பாணத்துக்கும் பருத்தித்துறைக்கும் இடையில் உள்ள தூரத்தைவிட குறைவான தூரம் இது.தமிழக மீனவர்களின் மீன்பிடி வள்ளங்கள் “உயர்வலுக்கொண்ட" இழுவை எந்திரத்தையும்; நவீன தொழில்நுட்ப படகுகளாகவும் இருக்கின்றன்.எனவே இலகுவில் அவர்கள் இலங்கையின் கடற்பரப்புக்குள் புகுந்துவிடுகிறார்கள். அத்தோடு சிலநேரம் சீரற்ற காலநிலையால் ஒரு சிலர் வழிமாறியும் வருகிறார்கள்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச கடற்பரப்பின் “எல்லைக்கோடு" இன்னமும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கடற்பரப்பில் ஒரு எல்லைக்கோடு கீறுவதில் இன்னமும் “”இழுபறி” நிலை இருநாட்டுக்கும் இடையில் இருந்துகொண்டே இருக்கிறது. “ கச்சதீவு" பிரச்சினை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.


2009 இக்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழக மீனவர்கள் ஓரளவுக்கு இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தவிர்த்துக்கொண்டார்கள். ஆனாலும் அவர்களில் பலர் இலங்கை கடற்படையால் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். சுமார் 700 இக்கும் அதிகமான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றுவிட்டதாக ஆதாரமான குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. இதற்கான எதிர் நடவடிக்கையை இந்திய மத்திய அரசு எடுக்கவேயில்லை. இந்திய மத்திய அரசானது இலங்கை ஆழும் அதிகார அரசுகளுடன் காலத்துக்கு காலம் நல்லுறவை பேணி ஒரு நெகிழ்ச்சியான போக்கையே கடைப்பிடித்துவருகின்றன.

விடுதலைப்புலிகள் மீதான இரு அரசுகளின் கடும்போக்கும் அவர்களின் ஒத்த மனநிலையும் தான் தமிழக மீனவர்களின் கொலைகளுக்கு முக்கிய காரணம் என தமிழக அரசியல்வாதிகளின் கடும் குற்றாச்சாட்டு இருக்கிறது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழக மீனவர்கள் பலர் அவர்களுடன் இணைந்து இயங்கினார்கள் என்ற குற்றச்சாட்டும்; ஆயுதங்களையும் பொருட்களையும் கடத்தினார்கள் என்ற குற்றாட்டுமே தமிழக மீனவர்களின் கொலைகளுக்கான காரணங்களாக இரு அரசாலும் சொல்லப்பட்டது.

2009 இக்குப்பிறகு கணிசமான அளவு “வன்முறைச்சம்பவங்கள்" குறைந்துவிட்டன என்ற நிலையில் மீண்டும் இந்த வாரம் ஒரு “சூட்டுச்சம்பவம்" தமிழக எல்லைக்கடற்பரப்பில் நிகழ்ந்து ஒரு அப்பாவி “தமிழக மீனவனின்" உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக இலங்கையின் வடக்கு கடற்பரப்புக்குள் அதிகமாக ஊடுருவுவதன் பின்னணியில் பல குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுகின்றன.
1.இலங்கையின் வடக்கு கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா,வடமராட்சிக்கிழக்கு,வடமராட்சி) அதிகளவான மீன்வளம் உள்ளது.
2.யாழ்ப்பாணத்தில் பழையபடி “இந்தியாவில் இருந்து பொருட்களை கடத்தும்" தொழில் அதிகமாக நடக்கிறது.
 (வரி இல்லாமல் பொருட்களை கடத்துவதால் அதிக இலாபத்துடன் யாழ்ப்பாணத்தில் விற்கமுடியும்)
3.இலங்கை -இந்தியாவுக்கான விமான பயணச்சீட்டை விட மிக குறைந்த பணத்துக்கு இந்தியாவுக்கு ஆட்களை கொண்டுசெல்லமுடியும்.
4.போதைப்பொருட்கள்(கஞ்சா) மிக அதிகளவில் அண்மைக்காலமாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வடபகுதி கடற்கரைப்பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன.

கஞ்சா வியாபாரத்துக்கும் தமிழக மீனவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
2009 இக்குப்பின்னர் யாழ்குடாநாட்டில் கஞ்சா பாவனையும் விற்பனையும் மிகவும் அதிக இலாபம் தரும் தொழிலாக மாறிவிட்டது. யாழ்ப்பாணத்தின் வடபகுதில் கோடிக்கணக்கான கஞ்சா இலங்கை பொலிசாரால் பறிமுதல் செய்யப்படுகிறது. பலர் கைதாகி பின்னர் விடுதலையாகி பின்னர் கைதாகி பின்னர் மீண்டும் விடுதலையாகி “கஞ்சா வியாபாரத்தை” செய்கிறார்கள்.ஒரு சில முக்கிய அரசியல் புள்ளிகளின் ‘’அநுசரணையோடுதான்" இந்த கஞ்சா வியாபாரம் இன்னமும் பலகோடிக்கணக்கில் நடைபெறுவதாய் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
இதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஏனெனில் யாழ்குடாநாட்டில் மிக இலகுவாக “கஞ்சாவை”குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ளமுடியும். கரையோர குக்கிராமங்களில் வாழ்ந்த ஒரு சில கடத்தல்காரர்கள் இன்று கோடீஸ்வரர்களாக வலம்வருவதன் பின்னணியும் இதுதான்.

தமிழகத்தில் இருந்து பெரும்தொகை “கேரள கஞ்சா” இலங்கை இந்திய கடற்பரப்பில் கைமாற்றப்படுகிறது. இதில் ஒரு சில தமிழக மீனவர்களின் பங்களிப்பு இருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தோடு இந்த கடத்தலில் “இந்திய-இலங்கை” கடலோர எல்லைக்காவல்த்துறைக்கும் கணிசமான “”லஞ்சம்" கிடைக்கிறது என்பதும் உண்மை. இவற்றை ஆதாரத்துடன் நிரூபிப்பது கடினம். ஆனால் இதுதான் நடக்கிறது என்பதை எல்லோரும் அறிவார்கள்.

ஆக;
ஒரு சில தமிழக மீனவர்கள் கடத்தல் தொழிலுக்காக இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகிறார்கள். இன்னும் ஒருசிலர் பேராசையில் அதிக மீன்களை பிடிக்க வருகிறார்கள். மிகக்குறுகிய அளவு மீனவர்கள் மாத்திரம் பாதைமாறி வருகிறார்கள்.

எல்லைதாண்டும் மீனவர்களுக்கான நடவடிக்கை என்ன?

பொதுவாக எல்லைதாண்டி அத்துமீறி கடற்பரப்புக்குள் நுழையும் குற்றச்சாட்டு தமிழக மீனவர்கள் மீதுதான் இருக்கிறது. ஒப்பீட்டளவில் இலங்கை மீனவர்கள் யாரும் இந்தியாவின் கடற்பரப்புக்குள் எல்லை மீறி நுழைந்து இந்திய கடலோர காவல்படையால் கைதுசெய்யப்பட்ட சம்பவங்களோ அல்லது தாக்கப்பட்ட சம்பவங்களோ மிக அரிது.



அண்மைக்காலமாக இந்திய தமிழக மீனவர்கள் தங்களின் “உயர்வலு" கொண்ட “றோலர்" படகுகளால் இலங்கையின் வடபகுதி மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து சேதமாக்கிய சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. பல லச்சம் பெறுமதியான சொத்துஇழப்பை யாழ்க்குடாநாட்டு மீனவர்கள் எதிர்நோக்கியிருந்தும் அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை. யாழ்குடாநாட்டு மீனவர்களை தமிழக மீனவர்கள் தாக்கி காயப்படுத்திய ஒரு சில சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இது சம்பந்தமாக யாழ்குடாநாட்டின் மீனவர்களும் மன்னார் மீனவர்களும் பல முறைப்பாடுகளை செய்தும் அவற்றுக்கு எந்தப்பலனும் இல்லை.

வெறுமனே இந்திய மீனவர்களை கைதுசெய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும் பின்னர் அவற்றை விடுவிப்பதும் ; மீண்டும் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் அத்துமீறி நுழைவதுமாக “திருடன் - பொலிஸ்" விளையாட்டு மிக நீண்ட நாட்களாக நடந்துவருகிறது.

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதும்; மீனவர்களின் மீன்பிடி வலைகளை “றோலர்களால் அறுத்தெறிந்து" சேதப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயல்கள். இவை அப்பட்டமான குற்றச்செயல்கள். இதற்கான தண்டனையை ‘’எல்லைமீறும் தமிழக மீனவர்கள்" அனுபவித்தே ஆகவேண்டும்.

தண்டனை என்பது ‘’சுட்டுக்கொல்வது அல்ல". அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மீண்டும் ஒருமுறை தவறை செய்யாமல் இருக்க “கடுமையான தண்டனை” வழங்கப்படவேண்டும்.

இலங்கை-இந்திய கடல் எல்லை ஒரு தெளிவான நிலைப்பாட்டோடு நவீன தொழில்நுட்ப முறையில் உடனடியாக “வரையறை” செய்யப்பட்டு அதற்கான “எல்லைக்கோடு" கீறப்படவேண்டும். அந்த எல்லைக்கொடு பற்றிய விழிப்புணர்வை இருநாட்டு மீனவர்களுக்கும் தெளிவாக விளங்கப்படுத்தவேண்டும்.

இல்லையேல்;
மீண்டும் மீண்டும் இந்திய தமிழக மீனவர்களின் இரத்தம் இலங்கை-இந்திய கடற்பரப்பில் கலப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது;
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சத்தங்களை நிறுத்தவும் முடியாது!!!


ஆக்கம்:தமிழ்ப்பொடியன்





திங்கள், மார்ச் 06, 2017

வேலைதேடும் பட்டதாரிகளின் போராட்டம்!





சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வேலைதேடும் பட்டதாரிகளின் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ,யுவதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதை காணமுடிகிறது.இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதை கொஞ்சம் விவரமாக ஆராய்வதே இந்த பத்தியின் நோக்கம்.

குறிப்பாக யாழ்மாவட்டத்தில் பல பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் படிப்பினை முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சூழ்நிலையிலேயே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படித்த படிப்புக்கு வேலை அல்லது வாழ்க்கை செலவீனங்களை சமாளிப்பதற்கான வேலை கிடைக்காத பட்சத்திலேயே அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள்.

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை ! என்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல உலகில் எங்குமே படித்த படிப்புக்கு வேலை என்பது இலகுவான விடயம் அல்ல.அதற்காக நிறைய தடைகளை தாண்டி பல வருடங்களை கடந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.இந்த முயற்சியில் தோல்வி அடைந்தவர்களோ அல்லது சலிப்பு அடைந்தவர்களோ அடுத்த கட்ட முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்

அடுத்த கட்டம் என்ன?

குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது வாழ்க்கை செலவீனங்களை நிவர்த்தி செய்யவோ அவர்கள் ஒரு வேலையை தேடவேண்டிய நிலை உருவாகும். அது அவர்களின் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லையென்ற போதும், அந்த வேலையை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அப்படி அந்த வேலையில் அரைமனதோடு சேர்ந்த பலர்; பின்னர் அதில் முழு ஈடுபாட்டுடன் வேலைசெய்து நல்ல நிலையை அடைந்தும் உள்ளார்கள். இன்னும் ஒரு சிலர் தங்களின் சுய தொழிலில் ஈடுபட்டு ஓரளவுக்கு நிதியை சேகரித்துவிட்டு அந்த நிதியை முதலீடு செய்து நல்ல வேலையை பெற்றும் உள்ளார்கள்.இன்னும் ஒரு சிலர் குறுக்குவழிகளில்நல்லவேலையை பெற்று தங்களின் வாழ்வை முன்னேற்றியும் உள்ளார்கள். இன்னும் ஒரு சிலர் வேலை தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

 இந்த வேலையில்லாப்பிரச்சினை ஏன் இப்போது வந்தது?

யாழ்ப்பாணத்தில் படித்து முடித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை வருடாவருடம் கூடிக்கொண்டே போகிறது.யாழ் மாவட்டத்தில் இதற்குமுன்னரும் படித்து முடிந்த பட்டதாரிகளுக்கான வேலைநியமனங்களில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான பட்டதாரிகள் ஒரு சில வருடங்களுக்குள் ஒரு வேலையை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது.
ஆகக்குறைந்தது அரச அலுவலங்களிலோ அல்லது பாடசாலைகளிலோ அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் உண்மையில்வேலைகள்இல்லையா?

2009 இக்கு முற்பட்ட காலத்தில் யாழ்குடாநாட்டில் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும் வேலைவாய்ப்பின் அளவும் மிக மிக குறைவாகவே காணப்பட்டது.ஏனெனில் அந்தக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தயங்கினார்கள். ஆனால் 2009 இக்குப்பின்னர் தனியார் நிறுவனங்களும் வெளிநாட்டு விறுவனங்களும் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள்.அதன்பின்னர் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை யாழ்குடாநாட்டு இளைஞர்கள்,யுவதிகள் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் பெருமாலும் தனியார் நிறுவனங்களில் நியமனம் பெற்றுக்கொண்ட பெரும்பாலானோர்சிபார்சின்அடிப்படையிலும்லஞ்சம்கொடுத்துமே வேலைக்கு சேர்ந்தார்கள் என்பது கசப்பான உண்மை. திறமையின் அடிப்படையிலும் படித்த படிப்பின் அடிப்படையிலும் வேலையை பெற்றுக்கொண்டவர்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவே.

ஆனால் தற்போது யாழ்குடாநாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு கூடியுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.காரணம் போரின் பின்னரான இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் யாழ்குடாநாட்டில் முதலீடுகள் பெரும் லாபத்தை தருகின்றன. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட இலங்கையில் யாழ்குடாநாட்டையே குறிவைத்து தங்களின் வியாபாரங்களை விஸ்தரிக்கிறார்கள்.

வேலைவாய்ப்புகள் அதிகமாக காணப்படும் இந்த நிலையில்; எதற்காக வேலைதேடும் பட்டதாரிகள் தங்களுக்கு வேலையில்லையென வீதியில் இறங்கி போராடுகிறார்கள்? என்ற ஒரு சாமானியனின் கேள்விக்கு பதில் தரவேண்டிய பொறுப்பு அரசுக்கும் மாகாணசபைக்கும் இருக்கிறது.
பொறுப்புக்கூறல் என்ற சிக்கலான விடயத்துக்குள் கால்வைக்க முன்னர் முக்கியமான அடுத்த கேள்விக்கு செல்வோம்


யாருக்கு வேலையில்லா பிரச்சினை?

யாழ்ப்பாணத்தில் கல்வி கற்ற எந்திரவியல்,மருத்துவவியல் மாணவர்கள் இலகுவில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டார்கள்.
இலங்கைமுழுவதும் பெரும்பாலான எந்திரவியல்,மருத்துவவியல் பட்டதாரிகள் இலகுவில் வேலையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் தகுதியான படித்த படிப்புக்கு வேலை கிடைத்துவிட்டதா? என்று கேட்கும் போதுஇல்லைஎன்றுதான் கூறவேண்டும். ஆனால் மற்ற பட்டதாரி மாணவர்களோடு ஒப்பிடும் போது 90% ஆனவர்களுக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது என்பதே உண்மை.

யாழ்ப்பாணத்திலும் பிற மாவட்டங்களிலும் தமிழ் மொழி மூலம் கற்ற வணிகபீட மற்றும் கலைப்பீட பட்டதாரிகளுக்கானபடிச்ச படிச்ச படிப்புக்கானவேலை கிடைப்பது மிகவும் கஸ்ரமாக உள்ளது. அதுவும் அரச உத்தியோகத்தை முக்கியமாக குறிவைக்கும் இவர்களுக்குவேலைகிடைப்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது.
(அதற்காக வணிக மற்றும் கலைப்பிட படிப்புகள் குறைவானது என்றோ வேலைஎடுக்கிறது கஸ்ரம் என்றோ தவறான கருத்துருவாக்கத்தினை யாரும் செய்யக்கூடாது)

சம்பளம் குறைவெண்டாலும்அரச வேலைதான் செய்யவேண்டும் என்றசமுதாய மனநிலைஇன்னும் யாழ்குடாநாட்டில் மாறவேயில்லை. இந்த மனநிலையின் தாக்கம் அவர்களின்கலியாணவாழ்வில் கூட முக்கிய பங்குவகிக்கிறதை கண்கூடாக காணமுடிகிறது.

இன்னொருபுறத்தில்; கவர்ச்சியான சம்பளங்களுடன் குளிரூட்டிய அறைகளில் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் அவர்களின் உறவினர்கள்,நண்பர்களின் வாழ்க்கை முறையை பார்க்கும் போது ஒருவிதமனவிரக்திக்கும்ஆளாகுறார்கள்.

குடும்பதொழிலையோ அல்லது சுய தொழிலையோ அவர்களுக்கான ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை செய்யும் அளவுக்கு அவர்கள் எல்லோரும் தயாராகவில்லை.மேலும் அந்த வேலைகளை செய்துகொண்டே இன்னொரு வேலையை தேடுவதில் உள்ளமன உளைச்சலைதாங்கும் சக்தியும் எவருக்கும் இல்லை.

வேலைதேடும் பட்டதாரி மாணவர்கள் மட்டுமல்ல; யாழ்ப்பாணத்தில் பல ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. உயர்தரத்தில் நல்ல முறையில் தேர்வாகி பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகாத மாணவர்கள் ஆயிரக்கணக்கில் யாழ்குடாநாட்டில் உள்ளார்கள். அவர்களும்வேலைதேடும் இளைஞர்கள்தான். அவர்களும் கூடவேலையில்லா பிரச்சினையின்அங்கத்தவர்களே.


வீதியில் இறங்கமுதல் பட்டதாரிகள் செய்திருக்கவேண்டியவை:


1.யார் யார் என்ன படித்துள்ளார்கள்
எவ்வளவு காலம் வேலை தேடுகிறார்கள்
எத்தனை வேலைகளுக்கு விண்ணப்பம் செய்தார்கள்
எத்தனைதரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன?
வேலைதேடி விண்ணப்பித்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் விபரங்கள்.
வேலைதேடும் பட்டதாரிகளின் சுயவிபரக்கோவைகள்.
வேலைதேடும் பட்டதாரிகளின் நியாமான கோரிக்கைகள்.
வேலைவாய்ப்பை உருவாக்க அவர்களின் ஆலோசனைகள் அல்லது உகந்த திட்டங்கள்.
இவை எல்லாம் அடங்கிய ஒருதகவல் திரட்டைஅவர்கள் செய்து முடித்திருக்கவேண்டும்.
வேலைதேடும் பட்டதாரிகள் அனைவருக்கும் இடையில் ஓரளவுக்கேனும் ஒருபிணைப்பும் இணைப்பும்இருக்கவேண்டும்.

2.
வேலைதேடும் பட்டதாரிகள் முதலில் தங்களின் கோரிக்கைகளை வடக்கு மாகாணசபைக்கு அனுப்பவேண்டும்.
நியாயமான கோரிக்கைகளை ஒரு குறித்த கால அவகாசத்துக்குள் அவர்கள் பரிசீலிக்க தவறிய பட்சத்தில்;

3.
ஆளுநருக்கு தங்களின் கோரிக்கையை நேரடியாக தெரிவித்திருக்கவேண்டும்.
அங்கேயும் அவர்களுக்கான நம்பிக்கை தரக்கூடிய பதில் ஒரு குறித்த கால அவகாசத்துக்குள் வழங்கப்படாத பட்சத்தில்;

4.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களிடம் தங்களின் கோரிக்கையை முன்வைத்திருக்கவேண்டும்.
அவர்களும் ஒரு நம்பிக்கை தரும் பதிலையோ அல்லது நடவடிக்கையையோ குறித்த போதிய கால அவகாசத்துக்குள் தராதபட்சத்தில்;

5.ஜனாதிபதிக்கு தங்களின் கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது கடிதமூலமாகவோ தெரிவித்திருக்கவேண்டும்.
அதற்கும் உரிய பதிலோ அல்லது நடவடிக்கையோ கிடைக்காத பட்சத்தில் ;

6.ஒரு ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை ஆரம்பிக்கப்போகிறோம்  என்ற ஒரு ஊடக அறிவிப்பை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

மேற்கூறிய ஆறு முக்கியமான விடயங்கள் அனைத்தையும் செய்யவேண்டும்.அவற்றில்  ஒன்றையேனும் செய்யத்தவறியிருக்கும் பட்சத்தில் அவர்கள்வீதியில் இறங்கிசும்மா போராட்டம் நடாத்தமுடியாது.அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லையென்றே கொள்ளப்படவேண்டும்.

ஆனால்;
மேற்கூறிய விடயங்கள் அனைத்தையும் அவர்கள் செய்தபின்னரும் அவர்களுக்கானநீதிகிடைக்கவில்லையெனும் கையறு நிலையிலேயே அவர்கள் தங்களின் போராட்டத்தை தொடங்கினார்கள் எனும் ஒரு எடுகோளுடன் அடுத்த விடயங்களுக்குச்செல்வோம்.


வேலைதேடும் பட்டதாரிகளின் போராட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?

போராட்டம் ஆரம்பமாகி ஒரு சில நாட்களுக்குள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அரசியல்வாதிகளின்பிரசன்னத்தைகாணக்கூடியதாகவிருந்தது. அதிலும் குறிப்பாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. சரவணபவன் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியது.

வடக்கு மாகாணசபைக்கு எதிராகவும் கெளவர முதலமைச்சர் திரு. விக்கினேஸ்வரனை நேரடியாக குறிவைத்தும் எதிர்ப்பு பதாகைகள் காணப்பட்டன.

வடக்கு மாகாணசபையினால் ஒரு கணிசமான அளவு வெற்றிடங்களை நிரப்பும் வளமும் வசதியும் இருந்தும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வேலைதேடும் பட்டதாரிகள் அலைக்கழிக்கப்படுவது வேதனையான விடயம். 

ஒரு காத்திரமான திட்டம் ஒன்றை “”வேலைதேடும் பட்டதாரிகளுக்காக" குறிப்பாக வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சும் பிற அமைச்சுகளும் செயற்படுத்தவில்லை என்ற நேரடியான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. இதற்கான ஒட்டுமொத்த பொறுப்புக்கூறலை கெளரவ முதலமைச்சர் திரு. விக்கினேஸ்வரன் அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது.

இதன் பின்னணியினை ஆழமாக ஆராய்வதை இந்த இடத்தில் நிறுத்திக்கொள்வதே நல்லது. ஏனெனில் எந்த ஒரு மக்கள் போராட்டத்தையும அரசியல் பின்னணியோ அல்லது குறைந்தபட்சம் மறைமுக ஆதரவோ இல்லாமல் செய்யமுடியாது என்பது யதார்த்தம். ஆனால் அரசியல் சுய இலாபங்களுக்காக உண்மையான மக்களின் போராட்டங்கள் பல வழிமாறிப்போன பல கசப்பான கடந்த கால அனுபவங்கள் பல இருந்தும் ஏன் ஒரு அரசியல் கலப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்? என்ற கசப்பான சாமனியனின் கேள்விக்கு அவர்களிடம் பதில் இருக்காது என்றே நினைக்கிறேன்.

அரசியல்வாதிகளால் பேசியும் தீர்க்கமுடியாத ஒரு விடயத்துக்காகநீதிகோரியே அவர்கள் வீதியில் இறங்கினார்கள் என்ற கசப்பான உண்மையின் முகத்தை பார்க்கும் போது கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சரவணபவனுக்கு வெட்கம் வந்திருக்கவேண்டும். ஆனால் அந்தநியாயமான வெட்கம்அவருக்கு வந்ததாக தெரியவில்லை.

மேலும் அவர் நடாத்தும் பத்திரிகை கூட வேலைதேடும் பட்டதாரிகளின்வேலை வாய்ப்புகளுக்காககாத்திரமான முறையில் பங்காற்றியிருக்கமுடியும். அது எத்தகைய பங்களிப்பாக இருக்கவேண்டும் என்பதை பற்றிய தெளிவான விளக்கத்தை தரமுடியும். ஆனால் அதற்கான பத்தி இதுவல்ல என்பதால் அடுத்த விடயத்துக்கு வருவோம்.

வேலைதேடும் பட்டதாரிகளுக்கு முன்வைக்கப்படும் கேள்விகள்:

சமூக வலைத்தளங்களிலும் பிற ஊடகங்களிலும் பல்வேறான ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பல வாதபிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.அவற்றில் சில முக்கியமான கேள்விகளை இங்கே பார்ப்போம்.

1.வேலைதேடும் முயற்சியில் நீங்கள் எவ்வளவு உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் செயற்படுகிறீர்கள்?
2.உங்களிடம் முறையான வேலைதேடும் திட்டம் எதுவும் உள்ளதா?
3.சுயதொழில் முயற்சியில் உங்களின்படிச்ச படிப்பைவைத்து முன்னேற வாய்ப்புகள் இருக்கிறதா? என ஆராய்ந்தீர்களா?
4.எல்லோரும் ஒன்றுசேர்ந்தோ அல்லது குழுக்களாகவோ ஒருங்கிணைந்துவேலைவாய்ப்புக்களை தரும்திட்டங்களை வகுத்துவைத்துள்ளீர்களா?
5.உங்கள் யாரிடமாவது குறைந்தது 50பேருக்கு யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு இடங்களிலோ வேலைகிடைக்கும் அளவுக்கு ஒருஅபிவிருத்தி திட்ட வரைபுஉள்ளதா?
6.அரச வேலைதான் உங்களின் முக்கியமான கோரிக்கையா? அல்லது ஏதோ ஒரு இடத்தில் நிலையான வேலையா?
7.தனியார் நிறுவனங்களில் வேலைகிடைத்த பலர் அந்த வேலைகளை ஒழுங்காக செய்யாமல் அதைவிட்டுவிட்டு; அரச வேலை தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதில் எந்தளவு உண்மை இருக்கிறது?
8.வேலைதேடுவோருக்கான அரச மர்றும் தனியார் வலையமைப்புகளில் எத்தனைபேர் உங்களின் பெயர்களினையும் சுயவிபரக்கோவையினையும் பதிந்துவைத்துள்ளீர்கள்?
9.வேலைதேடுவோருக்கான ஒரு தனியான வலைஅமைப்பு உங்களிடம் இருக்கிறதா? இல்லையெனில் அதை ஏன் செய்யவில்லை?
10.உங்களில் எத்தனைபேர் சுயதொழிலில் அல்லது குடும்பத்தொழிலில் ஈடுபடுகிறீர்கள்?
11.உங்களில் எத்தனைபேர்வேலைவாய்ப்பை அதிகரிக்கும்மேற்படிப்புகளை தொடர்கிறீர்கள்?
12.உங்களில் எத்தனைபேர்தன்னார்வ தொண்டர்களாகவேலை செய்கிறீர்கள்?

இந்தக்கேள்விகளுக்கான விடைகளைவேலைதேடும் பட்டதாரிகளின்நியாயமான சிந்தனைக்கு விட்டுவிடுவோம்.

வேலையில்லாப்பிரச்சினை இலங்கையில் மட்டும் தான் உள்ளதா?

இந்தப்பிரச்சினை இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் மட்டும் அல்ல அவுஸ்திரேலியா,ஐரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் கணிசமான அளவு உள்ளது. அவுஸ்திரேலியாவில் வேலையில்லாப்பிரச்சினை என்பது இப்போது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதை அந்த நாட்டு அரசும் வேலைதேடுவோரும் எப்படி எதிர்நோக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
(
இலங்கையின் நிலமைகளை அவுஸ்திரேலியாவுடன் ஒப்பிடமுடியாது என்றபோதும் கூட சில தீர்வுகள் என்பது பிரயோசனமாக இருக்கக்கூடும்)

வேலைதேடுவோருக்கு அவர்களுக்கான ஒரு வேலை கிடைக்கும்வரை அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு ஒரு உதவி தொகை வழங்குகிறது. அந்த உதவித்தொகை மாதா மாதம் வழங்கப்படும்.ஆனால் வேலைதேடுவோர் வாராவாரம் குறைந்தது ஐந்து இடத்தில் வேலைதேடிய ஆதாரத்தினை சமர்ப்பித்தாலோ அல்லது தகுந்த காரணங்களை ஊறினாலோ மட்டுமே உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.

வேலைதேடுவோருக்கானவேலைவாய்ப்பு கற்கைநெறிகள்அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு மையங்கள் பல அரசாலும் தனியாராலும் நடத்தப்படுகின்றன.

சுயதொழில் வேலைவாய்ப்புக்காக கடனுதவிகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

தன்னார்வ வேலைகளில் பலர் ஈடுபடுத்தப்பட்டு அதன் மூலம்வேலைசெய்யும் தகுதிஅதிகரிக்கப்படுகின்றன.

எனவே மேற்கூறிய காத்திரமான ஆலோசனைகளை இலங்கையிலும் பின்பற்றவோ அல்லது அங்கே இருக்கும்வேலை தேடும் பொறிமுறையைமறுசீராய்வு செய்யவோ இலங்கை அரசும் வேலைதேடுவோரும் முன்வரவேண்டும்.


இறுதியாக;
எல்லாவர்றுக்கும் வீதியில் இறங்கித்தான் போராடவேண்டும் என்ற மனநிலையில் இருந்து ஆக்கபூர்வமாக சிந்திப்பதன் மூலமும் கூட பல பிரச்சினைகளுக்கானதிர்வுகளைபெற்றுக்கொள்ளமுடியும். தீர்வுகள் கிடைப்பதில் காலதாமம் ஏற்படும் போது உண்டாகும்மன உளைச்சலைதவிர்க்க உறுதியுடன் தொடர்ந்தும் முயற்சிப்பது மிக அவசியம்.

ஒரு போராட்டத்தின் வெற்றி என்பது ஒட்டுமொத்த வேலைதேடும் பட்டதாரிகளுக்கும் கிடைக்கவேண்டும். அப்போதுதான் அது உண்மையான வெற்றியாகும்.

வேலைதேடும் பட்டதாரிகளின் போராட்டத்துக்கானதீர்வுஎன்பது வெறுமனே அவர்களின் நியமனகடிதங்களால் பெற்றுக்கொள்ளமுடியாது. அதற்கும் மேலாக ஒரு ஆக்கபூர்வமானவேலைதேடும் பொறிமுறைஉடனடியாக அமைக்கபடவேண்டும். அதுவே இந்தப்போராட்டத்தின்நிரந்தர தீர்வாகஅமையும்.


ஆக்கம்:தமிழ்ப்பொடியன்






Comments System

Recent Posts Widget

Facebook Badge