ஞாயிறு, ஜூலை 24, 2016

நோ துறூ ஒழுங்கை-No through Road - பாகம் 2



கடிதம் அகல்யாவின் சைக்கிள் கூடைக்குள் போட்டாச்சு.

நாங்கள் நினைச்சம்...

1. அவள் அதை வாசிச்சு விட்டு முடிவு சொல்லுவாள்

2.வாசிச்சுவிட்டு கிழிச்சு எறிஞ்சிருப்பாள்

3.மாமியின்ர கையில அம்பிட்டிருக்கும்

இந்த மூண்டில ஒண்டுதான் நடந்திருக்கும் எண்டு நினைச்சம். ஆனால் நாங்கள் நினைக்காத நாலாவது தெரிவு தான் நடந்திச்சுது 

பொம்பிளைப்பிள்ளைகளின் மனசை புரிஞ்சுகொள்ளவே முடியாதுடா கதிர்காம கந்தா!!!

கடிதம் குடுத்து இரண்டாம் நாள்...

"மச்சான் ஒருக்கா வாறியா ... அவளின்ர ரியாக்சன் (reaction)என்னண்டு பாப்பம்" என கேட்டான் நண்பன்.

" மச்சான் மாமி சொன்னது உனக்கு நினைவு இல்லையோ... கொக்கத்தடி.... அறுத்துப்போடுவன்"

எனக்கு மாமியின் கோபமான ஏச்சும் முகமும் மறக்கவேமுடியவில்லை.
"எல்லா அம்மாவும் உப்பிடித்தான் சொல்லுவினம்... மச்சி நான் அவளை ஒருக்கா திரும்ப பாக்கவேணும்டா"

நண்பன் விடாப்பிடியாக கெஞ்சினான்.
(திருவிழாவில் மணிக்கடையில் அம்மம்மா குழல் வாங்கித்தா என கெஞ்சும் சின்னப்பிள்ளைபோல...  )

காதல் பித்தினதும்( love crazy) வயசுக்கோளாறினதும்(teenage)உச்சத்தில் இருந்தான் நண்பன்.

என்ன செய்ய ? கூடப்படிச்ச, பழகின குற்றத்துக்காய் மீண்டும் அவனை சைக்கிளில் ஏற்றி பருத்துறையில் இருந்து நெல்லியடிக்கு சைக்கிளை மிதித்தேன்.
எள்ளோட சேர்ந்த எலிப்புழுக்கை நான்.... 
"மச்சி .. எனக்கு லவ்லி கூல் பாறில ஸ்பெசல் ஐஸ்கிறீமும் ரோல்சும் வாங்கித்தருவியா?'"

சைக்கிள் ஓடிப்போறதுக்கு கூலி எனக்கு.
"மச்சி எல்லாம் முடியட்டும் வாங்கித்தாறன்"

" அடே நாதாரி உன்ர குணம் எனக்குத்தெரியும் .... எல்லாம் முடிய நாளைக்கு வாங்கித்தாறன் எண்டுவாய்... எனக்கு இப்ப வாங்கித்தா"
ஏற்கனவே உப்பிடி என்னை கனதரம் ஏமாத்தியிருக்கிறான் என் ஆருயிர் நண்பன்.

விடாப்பிடியாக லவ்லி கூல் பாருக்குள் சைக்கிளை விட்டு "ஸ்பெசல் ஐஸ்கிறீமும் ரோல்சும்" வயித்துக்குள்ள இறக்கி ஒரு பெரிய ஏவறையோடு சைக்கிளை ரியூசனுக்கு விட்டேன்.

இந்த முறை எங்கட செக்பொயின்ரை (check point)வேற இடத்தில அடிச்சம்.

எப்பிடியும் அகல்யா எங்கட செக் பொயின்ரை தாண்டித்தான் போகவேணும்.

எங்களை தாண்டி போகும் போது..

1.அகல்யா என் நண்பனை பார்த்து சிரிக்கலாம்

(சிரிச்சா எங்கட நடவடிக்கை வெற்றி)

2.அகல்யா என் நண்பனை பார்த்து முறைக்கலாம்

(முறைச்சா எங்கட நடவைக்கை தோல்வி)

3.எங்களை பாத்தும் பாக்காத மாதிரி போகலாம்

(எங்கட நடவைக்கையை மேலும் தொடராலாம்)

ரியூசன் முடிய அகல்யாவும் வந்தாள். அவள் சிநேகிதப்பெட்டைகளும் வந்தார்கள்.
அகல்யா நடுவில்...
இரு பக்கதிலும் சமாந்தரமாக (parallel) அவள் சிநேகிதிகள்....

நண்பன் குனிந்த தலை நிமிராமல்...


" டேய் மச்சி நிமிந்து அவளை பாரடா..."
" மச்சி நீ பாத்து சொல்லு என்ன செய்யுறாள் எண்டு?"

இந்த முறை நான் வடிவாக பார்த்தேன் அகல்யாவை.....

நான் மேலே சொன்ன மூண்டு விசயமும் நடக்கவில்லை.
மாறாக நாலாவது ஒரு விசயம் நடந்தது.

எங்களை கடக்கும் போது அகல்யாவின் சிநேகிதப்பெட்டைகள் "கிளுக்..." என வாய்பொத்தி ஏளனமாக எங்களைப்பாத்து சிரித்தார்கள்.

அகல்யாவும் சேர்ந்து சிரித்தாள். ஆனால் நண்பனை திரும்பி பாக்கவேயில்லை.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கைவேந்தன் எண்ட மாதிரி அவமானத்தால் அசிங்கப்பட்டோம்.

எனக்கு "வாயில.." நல்லா வந்துது. என்ன இருந்தாலும் நண்பனின் ஆள் எண்டதாலையும் மாமியின் ஏச்சு ஞாபகத்துக்கு வந்ததாலையும் நாவை அடக்கிக்கொண்டேன்.

ஒப்பிரேசன் அகல்யா தோல்வியில முடிஞ்சுது எண்டு மட்டும் எனக்கு தெளிவா விளங்கிட்டுது 

சைக்கிள் மீண்டும் நண்பனை ஏத்தியவாறு பருத்துறை நோக்கி பயணமானது.

அட முக்கியமான விசயம் ஒண்டை மறந்திட்டன்.
முதல் தரம் கடிதம் குடுக்க வரும் போது சலூனுக்கு போய் பவுடர் பூசி தலை இழுத்து ரிப் ரொப்பா (tip top) வந்த நண்பன் இந்த முறை வரும் போது அதை செய்யவேயில்லை.

எனக்கு வந்ததுக்கு "ஸ்பெசல் ஐஸ்கிறீமும் ரோல்சும் தான் " மிச்சம்.

என்னடா ......இவன் கதையை இழுக்கிறான் எண்டு கனபேர் புறுபுறுக்கிறது எனக்கு கேக்குது. விசயத்துக்கு வரன்.

இது நடந்து ஒரு கிழமையால நண்பனின் அம்மா என்னை பாக்கவேணும் என இன்னொரு பொடியன் ஊடாக ”அழைப்பாணை” வந்தது.

எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு நண்பனிடம் கேட்டன்.
" மச்சி ஏன் கொம்மா என்னை வரச்சொன்னவா?"

"தெரிய இல்லை மச்சி என்னிட்ட ஒண்டும் சொல்லயில்லை... நீ ஒருக்கா வா"
சிரிக்காமல் சீரியஸ்சா(serious) பொய் சொன்னான் நண்பன்.

நானும் நம்பிப் போனன்.
நண்பனின் அம்மாவின் கையில் நான் நண்பனுக்காக எழுதிய காதல் கடிதம்!!!
மாட்டுறதெண்டால் இப்பிடித்தானா மாடுப்படவேணும்.
எப்பிடி இந்த கடிதம் இவாட கையில????
பிறகு விசாரிச்சுப்பாத்ததில தான் தெரிஞ்சுது அகல்யாவின் வீட்டுக்கு பக்கத்தில் எங்கட பொடியன் ஒருத்தன்ர வீடு. அவனூடாக கடிதம் என் நண்பனின் அம்மாவின் கையில் கிடைத்திருக்கிறது.
(அவனுக்கும் அகல்யாவில ஒரு கண் (crush)
இருந்தது பிறகுதான் தெரியும் எங்களுக்கு...)

எல்லாக்கதையிலும் ஒரு எட்டப்பன்.
எங்கட கதையிலும் ஒரு எட்டப்பன்!!!
"விமலேஸ்வரா உன்னை நல்லா படிக்கிற பொடியன் எண்டுதான் நினைச்சன். அதனாலதான் என்ர பிள்ளையை உன்னோட சேர விட்டன், நீயும் கெட்டுப்போறது காணாமல் என்ர பிள்ளையையும் கெடுக்கிறியோ??" நண்பனின் அம்மா கோபத்தோட ஏசினா.

"நீ கடிதம் குடுக்கிறது எண்டா தனியா போயிருக்கலாம் தானே.. எதுக்கு என்ர பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போனனீர்??"

எனக்கு விளங்கிட்டுது ....
கதை தலை கீழாக போகுது எண்டு.
நான் முழி பிதுங்க அருகில் நிண்ட என் "ஆருயிர்" நண்பனை திரும்பி பார்த்தேன்.

நாதாரி...
சனியன் பிடிப்பான்...
தனக்கு ஒன்டும் தெரியாத மாதிரி கல்லுளி மங்கன் மாதிரி நிண்டான் 
" டேய் மச்சி..." ஈனக்குரலில் அவனை சுரண்டினேன்.
அவன் என் முகத்தை அழுவாரப்போல பார்த்தான்.
நண்பேண்டா....
நான் ஒண்டும் சொல்லாமல் நிண்டன்.
"விமலேஸ்வரா இந்த கடிதத்தை உங்கட அப்பா அம்மாட்ட குடுக்கவோ?""ஐயோ வேண்டாம் ... அம்மா.." இது நான் 

"சரி என்னிட்ட இருக்கட்டும் இந்த கடிதம்... இனிமேலும் இப்பிடி ஏதும் பிரச்சினை எண்டா கட்டாயம் இந்த கடிதம் உங்கட வீட்ட வரும்" நண்பனின் அம்மா கோபத்தோடு சொன்னா.

நிற்க...
அது எப்பிடி நான் தான் கடிதம் எழுதினன் எழுதினன் எண்டு நண்பனின் அம்மாவுக்கு தெரியும் எண்டு நினைக்கிறியளோ???
நல்ல சந்தேகம்.....!!
முப்பது பேரின்ர கையெழுத்திலையும் என்ர கையெழுத்தை அவா சரியா கண்டுபிடிப்பா..!!!
ரியூசனுக்கு கட் அடிச்சுப்போட்டு ஒற்றைகளை எண்ணி இடம் விட்டு என்ர கொப்பியை வாங்கிக்கொண்டு போய் எழுதும் போது நண்பனின் அம்மா வடிவா கவனிச்சு இருக்கிறா.
அதைவிட என்ர கையெழுத்து அவாவுக்கு என்ர சின்ன வயசில இருந்தே தெரியும்.(எப்பிடி எண்டு கேக்கப்படாது...!!!)

நான் ஒரு விசரன்... கொஞ்சம் கையெழுத்தை மாத்தி எழுதியிக்கலாம்.
அல்லது கடிதத்தின்ர கடைசியில அவன்ர பெயரை எழுதியிருக்கவேணும்.

கள்ளப்பயல் .....!!!
பெயரை எழுதாமல் கீழ இதயமும் ரோசாப்பூவும் கீறி விடு எண்டு சொல்லும்போதே என்ர மரமண்டைக்கு உறைச்சு இருக்கவேணும்.
(O/L இல விஞ்ஞான பாடத்துக்கு D எடுத்து என்ன பிரயோசனம்???”) 

இந்த துன்பியல் நிகழ்வு நடந்து 15 வருசத்துக்கு மேல...
இண்டுவரை நண்பனின் அம்மா நினைச்சுக்கொண்டு இருக்கிறா தன்ர பிள்ளை “பால்குடி” எண்டு...
அதுதான் என்ர பெருங்கவலை...
முக்கிய குறிப்பு:

1.போனகிழமை கதையை வாசிச்சுபோட்டு லண்டன்,கனடா,நியுசிலாந்து , சிறிலங்காவில இருந்து எங்களோட படிச்ச பிள்ளைகள் என்னில ஒரே அன்புமழை.
“தம்பு...(இது என்னோட இன்னொரு பெயர்) நீ பழைய நினைவுகளை எல்லாம் கிழறுறாய்... எழுதடா இன்னும்”
கனபெட்டைகள் என்ர முகப்புத்தகத்தில நீண்ட காலமா இருக்கிறாகள். பிரச்சினை என்னண்டா இப்பதான் ஆக்கள் யாரெண்டு கண்டுபிடிச்சம். profile படத்தில தங்கட புருசன் மாரின் படத்தையும் பிள்ளைகளின்ர படத்தையும் திரிசா, நயந்தாரான்ர படத்தையும் போட்டா நாங்கள் எப்பிடி கண்டு பிடிக்கிறது 

2.எங்களை விட வயது கூடின அண்ணை ஒருத்தர் போன் அடிச்சு சொன்னார்.
“ தம்பி நீ எங்கட பழைய காதல் கதைகளையெல்லாம் கிண்டுறாய்.
வீணா நான் அவுஸ்திரேலியாவில இருந்து கனடாவுக்கு ரிக்கற் போட வேண்டி வரப்போகுது”
பாவம் அந்த ஆளின்ர குடும்பத்தில கல்லெறிஞ்சு போட்டனோ எண்ட குற்ற உணர்வில (guilty) அண்னைக்கு அறிவுரை சொல்லி ஒரு மாதிரி ரிக்கற்றை ரத்துச்செய்ய(cancel) வைச்சுப்போட்டன்.

3.போன வெள்ளி வேலைக்கு போன என்ர மனிசி வேலை இடைவேளை (Break time) கோல் அடிச்சுது.
நானும் பின்ன என்னடா மத்தியானம் நான் சமைச்சு வைச்ச கறியில உப்பேதும் கூடிப்போச்சோ எண்டு பதறிப்போய் கேட்டன்.
“என்னப்பா என்ன பிரச்சினை..???”
“ இல்லை பேஸ்புக்கில தான் நிக்கிறன். ஏதோ கதை எழுதப்போறன் எண்டு பீற்றர் விட்டியள். எங்க இன்னும் காணயில்லை..??”இது என்ர மனிசி.

அப்பதான் தெரிஞ்சுது கனபேர் ஆர்வத்தில தான் இருக்கினம் எண்டு..!!!!




தொடரும்...!!! 

© தமிழ்ப் பொடியன்




https://www.facebook.com/photo.php?fbid=10153339681268002&set=a.378152818001.157658.786468001&type=3&theater




35 Comments
Comments

Jeya Karan Nanpendaa!! Very nice
Vimaleshwara Sabaratnamதெரியவில்லை தம்பி
கூகுளைத்தான் கேக்கவேணும் 
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Joisan Arulthasan ஐயோ கடவுளே இந்ததமிழ்ப் பொடியன் இன்னும் கொஞ்சம் வருஷம் உயிர் வாழனும், இருந்தாலும்  சந்தேகமே...
Jude Prakash "லவ்லி கூல் பாரில் விட்ட ஏப்பம்"..லவ் ஸ்டோரியில் இது தேவையா ? 🌹
Vimaleshwara Sabaratnam அதுவும் கதையில இடையில முக்கிய நிகழ்வு தானே...
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Sithamparappillai Ajanthan பாகம் 3ல் அகல்யாவின் தற்போதைய நிலை பற்றி அலசி ஆராயாவிடின், எழுத்தாளர் தமிழ்ப் பொடியன் மேல் எம் எரிச்சல் மிகவும் அதிகரிக்கும்
Vimaleshwara Sabaratnam வேணாம் அண்ணை இன்னும் கொஞ்ச காலத்துக்கு நான் உயிரோட இருக்க ஆசைப்படுறன்..
Krishanthy Nishanthakumarஅதெப்படி ....? கூழுக்கும் வேறு என்னத்துக்குமோ ஆசை எண்டு சொல்லுறமாதிரி ....கதை, சிறுகதை, கவிதை என எழுத்தாளர்கள் உலகத்திற்கு வந்திட்ட உங்களுக்கு உயிர் மேல ஆசை இருக்குன்னா சரியாயில்லாமல் என்னவோ ஒரு மாதிரி இருக்கே.......எது எப்பிடியோ உண்மையான கதையில் ஒரு கலப்படமும் இருக்காது என்று நம்புறம்.....
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Thanush Slk Semma 😭😭
கதிரமலை யசோதரன்மெய்யே,அண்ணை அப்ப அவர்ர லவ் வுக்கு என்ன முடிவு???
Guhendiraa Ganeshu சேர்ந்ததா ? சேரலையா??
கதிரமலை யசோதரன் இத தான் நானும் இன்பாக்ஸில கேட்டனான் ஏதோ
#சஸ்பெண்டாமே..
Guhendiraa Ganeshu அப்ப FB இல ஒரு மெகா தொடர் வரபோறதுக்கு அறிகுறி ....
கதிரமலை யசோதரன்எதிர்பார்ப்பு அதிகம் பாருங்கோ...
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Guhendiraa Ganeshu ஆனால் இந்த கதையோட கதையா உங்கட வீட்டில பிரதான சமையல் காரர் எண்டு சொன்னதுதான் ரொம்ப
கிளாஸ் bro .இந்த நேர்மை பிடிச்சிருக்கு
Vimaleshwara Sabaratnam தம்பி ... வீட்டுக்கு வீடு வாசல்ப்படி..
நாங்கள் சொல்லிட்டம்..
சொல்லாமல் உங்க கனபேர்....lol
Guhendiraa Ganeshu அது என்னவோ உண்மை தான் ...
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Nivetha Uthayan எழுத்தாழுமை உள்ள நீங்கள் தொடர்ந்து எழுதவேணும் பெடியன்
Vimaleshwara Sabaratnam நன்றி அக்கா
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Thevan San Kokka saththakam is highlights. . Innum niraiya ethir pakiram. .lol
Vimalaraj Kuddy · Friends with Krishna Kanthasamy
So very Nice
Pancha Gajaananan Super story -- Love it!
Ponnampalanathan Shangeev அண்ண தமிழ்ப் பொடியன் நீங்க இப்பத்த பொடியளுக்கு உல வைக்கிற மாதி கிடக்கு
Kalps Bala Interesting story well done!!!!!
Jega Srinivasan 2 பேரும் கடசியில சேந்தமாதிரி இருந்திருக்கலாம்...!
Ami Amirtharaj அது சரி... மச்சி, அந்த "திரேசா இல்லைன்னா தர்ஷனா" கதை எப்ப வரும்!?  
Vimalathas Subramaniam வாழ்த்துக்கள் பொடியன் நகைச்சுவையுடன் கூடவே பெற்றோரின் பயம் பெற்றோருக்குப்பயம் இரண்டையும் கலந்துஊட்டியமைக்கு நன்றி
Ravindran Keerthanan அண்ணா தொடர்ந்து எழுதுங்கள்;இப்போது தான் காதலின் அர்தமே புரிகிறது(சத்தியமா என்ர காதல் இல்லை).அடுத்த வெள்ளி எப்ப வரும்என்டு இருக்கு அண்ணா.
Mahes Tavarayan · 3 mutual friends
விருப்பின்மை(Dislike)
Venthan Ponniah Ha ha ha I am waiting. Bring it on.
Latha Suresh அட கடவுளே அது ஒன்னும் நஜந்தாரா கிடையாது, எங்கள அடையாளம் கண்டுகொள்ள முடியலையா?
Lisahna Keya Thodaraddum unkaludaya bani
Suren Kanapathippillai மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு. . .
ஈழ முற்றம் வாழ்த்துக்கள் தம்பு.
தொடரட்டும் உங்கள் பணி. மீண்டும் பள்ளிப் பராயத்திற்கே அழைத்துச் செல்லும் உங்கள் வார்த்தைப் பிரயோகம் தாய் நாட்டில் இருக்கும் உணர்வையும் ஏற்படுத்துகிறது.

Comments System

Recent Posts Widget

Facebook Badge