வெளிநாட்டு வாழ்வை ஒட்டுமொத்தமாக வெறுத்து ஒதுக்கிவிட முடியாது.
ஊரில் இல்லாத பல அனுபவங்களை, வசதிகளை வெளிநாடுகளில் அனுபவிக்கிறோம் என்பதும்;
வெளிநாட்டுல் இல்லாத பல அனுபவங்கள், சுகங்கள், வசதிகள் ஊரில் இருக்கிறது என்பதும் யதார்த்தம்.
நானெல்லாம் கிழிஞ்ச காச்சட்டையோடு ஒரு சின்ன கிராமத்தின் குச்சொழுங்கையால் ஓடித்திரியும் போது;
அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து வீதிகளில் நடந்து திரிவேன் என கனவு கூட கண்டதில்லை.
இருந்தாலும் காலம் என்னை தன் வழியில் இழுத்து பல கனவுகாண முடியாத விடயங்களை என் கைகளில் தந்தது.
அதிஸ்டம் என்பதை தாண்டி(எனக்கு நம்பிக்கை இல்லை); இக்கட்டான சந்தர்ப்பங்களில் எடுத்த முடிவுகள் சரியானதாக அமைந்தது என் வாழ்வில் நான் கண்ட உண்மை.
பணம் ஈட்டல், சுக வாழ்வு, ஆடம்பரம் என்பதற்கு அப்பால் சுமார் 10 வருடங்கள் வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவித்திருக்கிறேன் என்ற பூரண திருப்தி எனக்குண்டு.
வெளிநாட்டு வாழ்கையிலும் பல கஸ்ரங்கள் இருந்தாலும்; மனம் இருந்தால் சந்தோசமாக வாழலாம்.
பணம் ஒரு பெரிய விசயமே இல்லை!!!!
🔘தமிழ்ப்பொடியன்®









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக