திங்கள், ஜூலை 11, 2016

காலக்கொடுமை!!!





முந்தி ஊரில...
திருவிழாவுக்கு அப்புவோட போட்டுவந்தபிறகு ..

அம்மா கேப்பா..

" தம்பி எப்பிடியடா திருவிழா?
"என்ன பாத்தனி?"

அதுக்கு நான் சொன்னன்
" ஒரே வெள்ளையும் கறுப்புமாத்தான் இருந்தது " எண்டு!!

ஏனெண்டா ...

அப்புவின்ர குண்டிக்குப்பின்னால திரிஞ்சா அப்பு கட்டின வேட்டியின்ர வெள்ளையும் அப்புவின்ர கறுத்த கோமணமும் தானே தெரியும்!!!

அது மாதிரித்தான் ...
ஊரில கொஞ்சம்
எம்.பி மாரின்ர குண்டிக்குப்பின்னால திரியுதுகள்.

"தம்பியவை ஊரில என்னடா பிரச்சினை??" எண்டு கேட்டால்...

வெள்ளையும் சிவப்புமாத்தான் தெரியுது அண்ணை எண்டுறாங்கள்!!!

மாவீரர்களையும் தமிழையும் தாய்நிலத்தையும் போற்றிப்பாடிய மண்ணில்....

கொஞ்சப்பேர் கட்சியை வாழ்த்தி கவிதை எழுதுறாங்கள்...

இன்னும் கொஞ்சப்பேர் எம்.பி மாரை வாழ்த்தி கவிதை எழுதுறாங்கள்....

இன்னும் கொஞ்சப்பேர் மாகாண சபை உறுப்பினர்களையே வாழ்த்தி கவிதை எழுதுறாங்கள்....

இந்த கண்றாவிகளை எல்லாம் பாக்கவோ கேக்கவோ கூடாது எண்டுதான் எங்கட பிள்ளைகள் கனபேர் எங்கட வீட்டு சுவர்களில் படமாய் தொங்குறாங்கள்!!!
காலக்கொடுமை!!!


🔴தமிழ்ப்பொடியன்®

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge