"2025 இல இந்தியா வல்லரசாகும்"
எண்டு சொல்லுறவனுக்கு;
"காஞ்சுரோண்டியால தான் அடிப்பன்"!!!
அண்மையில் சென்னைக்கு போய்வந்த அனுபவத்தில சொல்லுறன்.
2050 ஆண்டு ஆனாலும் கொழும்பு அளவுக்கு கூட சென்னை வளராது!!!
சென்னையை நான் இப்ப இருக்கும் மெல்பேர்ண் நகரத்தோடு ஒப்பிடவில்லை. 2006 இல் நான் இருந்த கொழும்பு நகரத்தோட ஒப்பிட்டுச்சொல்லுறன்.
இந்த லட்சணத்தில வல்லரசு!!!!
🔘எங்கட ஊர் பஸ் டிப்போவில இரும்புக்கு எறிஞ்சிருக்கும் பஸ்தான் "அரச பேரூந்து சேவை"
🔘கோவில்களில் கடவுளை கும்பிடவும் லஞ்சம்.
🔘வீதிவிளக்கு சிவப்பா (red signal)எரிஞ்சாலும்; ஆர் முந்துறானோ அவன் போகவேண்டியதுதான்.
🔘சென்னையின் முக்கியதெருக்களில் தடக்கி விழுந்தா கட்சி போஸ்டர்களில் விழவேணும் அல்லது பிச்சைக்காரர்களில் விழவேணும்.
🔘குறைந்தது 10 பிச்சைக்காரர்களின் நச்சரிப்புகளை தாண்டியே ஒரு சாப்பாட்டுக்கடைக்கோ அல்லது உடுப்புக்கடைக்கோ உள்ளே செல்ல முடியும்.
🔘வீதி ஒழுங்கு என்பது 1% கூட கிடையாது.
வெளிநாடுகளில் இருந்து போறவையோ அல்லது சிறிலங்காவில் இருந்து போறவையோ ஒரு நிமிசம் வாகனம் ஓடிக்காட்டினால்;மொட்டை வழிச்சுப்போட்டு சரவணாஸ் ஸ்ரோர்ஸ் வாசலில பிச்சை எடுக்கிறன்.
Break the rules that is Road rules!!!
வெளிநாடுகளில் இருந்து போறவையோ அல்லது சிறிலங்காவில் இருந்து போறவையோ ஒரு நிமிசம் வாகனம் ஓடிக்காட்டினால்;மொட்டை வழிச்சுப்போட்டு சரவணாஸ் ஸ்ரோர்ஸ் வாசலில பிச்சை எடுக்கிறன்.
Break the rules that is Road rules!!!
🔘சிலோன்காரன் எண்டால்; அதுவும் வெளிநாட்டுத்தமிழன் எண்டு தெரிஞ்சால் ஆட்டோக்காரன் தொடக்கம் உடுப்புக்கடைக்காரன் வரை உன்ர மண்டையில மிளகாய் அரைச்சு உன்ர அறுணாக்கொடி காண உருவிப்போட்டுத்தான் விடுவாங்கள்!!!
சென்னையின் பயண அனுபவம் பற்றி ஒரு குறுங்கதை வரும் விரைவில்!!!
"சென்னை .... வலு கவனம்!!!"





























கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக