செவ்வாய், ஜூலை 05, 2016

கடவுளும் போர்க்குற்றவாளி...!!!!






ஒரு இனத்தின் கொடுஞ்சாபம்
ஒரு பெற்றதாயின் ஒப்பாரி
விழிநீராய் வடிந்தோடும் செந்நீர்
அடுத்த தலைமுறையும் அனுபவிக்கும் வலி
மனிதாபிமானம் வன்புணர்வுக்கு ஆளான பூமி!
விடுதலை விசம் வைத்து கொல்லப்பட்ட நிலம்!
நம்பிக்கை எரியூட்டப்பட்ட சுடுகாடு!!
சாட்சியமற்ற இனப்படுகொலை!!
திட்டமிட்ட இன அழிப்பு!!
அவலச்சாவுகள் வெறும் எண்ணிக்கையாகி செய்தியான கொடுமை!!
ஒரு இனத்தின் வலி...
ஆறாத ரணங்கள்
ஊமைக்காயங்களாய் ஆறாத வடுக்கள்!!
கல்லாய்ப்போன கடவுளே
கண்ணில்லாத கடவுளே
கொன்றவனையும்
கூட நின்றவனையும்
வாழ வைக்கும் கடவுளே....
நீயும் போர்க்குற்றவாளிதான்!!!
🔘தமிழ்ப்பொடியன்®



Comments
Shankeetha Rasikanthan உண்மை தான். இன்றும் கூட வற்றாப்பளை கண்ணகை அம்மன் பல அற்புதங்களை நிகழ்த்துகிறா என்பது அங்குள்ள மக்களின் கணிப்பு. ஆனால் அன்று எம் இனம் கொத்துக் கொத்தாய் அழிந்த போது அவா என்ன அற்புதத்தை நிகழ்த்தினா? கல்லாய் தானே இருந்தா. அன்று சீதை இட்ட சாபம் தான் எம் இன அழிவுக்கு காரணம் எண்டால்...இன்று எத்தனை சீதைகளின் சாபம்... கண்டிப்பாக காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge