புதன், ஜூலை 20, 2016

புத்தியை தீட்டுங்கோ!!!





செய்தி:
யாழ்.பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக மாணவர்கள் 3பேர் கைது செய்யப்படலாம்.
-வலம்புரி-
புறுபுறுப்பு:
அடியடடா
நொருக்கடா
தமிழண்டா
யாழ்ப்பாணம்டா
பண்பாடுடா
கலாச்சாரம்டா
நெருப்புடா
பருப்புடா..!!!
எண்டு கூவித்திரிஞ்சு; கொம்பு சீவுறவை யாராவது இந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கு பதில் சொல்லமுடியுமா??
நாளைக்கு அந்தப்பொடியளை நாலுமாதம் ஜெயிலுக்க போட்டு; கோட்டு கீட்டு எண்டு அலைக்கழிச்சுப்போட்டு விட்டால்; அவங்கள் வெளியில வந்து மனம் உடைஞ்சு போவாங்கள்.
நாளைக்கு அந்தப்பொடியள் திரும்பவும் பல்கலைக்கழகத்தில் ஒரு பிரச்சினை எண்டால் "பேசாமல்" ஒதுங்கிப்போவாங்கள்.
மற்றப்பொடியளும் இதையே செய்வாங்கள்.
சரியோ பிழையோ ; என்னெண்டாலும் எங்கட பொடியளின்ர பக்கம் நிக்கவேணும்.
பிழையெண்டா தலையில ரண்டு குட்டுப்போட்டு திருத்தவேணும்.
சரியெண்டா கடைசிவரையும் கூட நிக்கவேணும்.
இந்தப்பிரச்சினைக்கு மூல காரணம் பல்கலைக்கழக நிர்வாகம்.
அவை யாரெண்டு பிடிச்சு; பச்சைமட்டையால நாலு சாத்தினா எல்லாம் சரிவரும்.
சிங்களவனோட சொறியிறதை விட்டுப்போட்டு ; எங்கட ஆக்களுக்கு நாலு விளாசினா எல்லாம் சரிவரும்.
"பாம்புக்கு வாலைக்காட்டி; மீனுக்கு தலையை காட்டும்" அந்த கறுப்பாடுகள் ஆரெண்டு பாத்து களுத்தாங்குத்தியில ரண்டு இறுக்கிப்போட்டாத்தான் திருந்துவாங்கள்.
"யாழ்ப்பாண கம்பசில இன்னும் புலி இருக்கு.அதை இழுத்து மூடு" எண்டு தென்னிலங்கையில் இருந்து குரல் வருவது ஆபத்தான அறிகுறி!!
ராணுவ பலமும் இல்லை!!
அரசியல் பலமும் இல்லை!!
ஏன் ஒரு கோதாரியும் எங்கட கையில இல்லை.
"கல்வி" எண்ட ஆயுதம் மட்டும் தான் இப்ப எங்கட கையில மிஞ்சிப்போய்க்கிடக்கு.
அதையும் துலைச்சுப்போட்டு என்ன செய்யப்போறியள்???
அதுவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் ஆழமா அகலாமா வேர்விட்டு நிக்குது.அந்த வேரை கறையான் மாதிரி சிங்களம் அழிக்கப்பாக்குது. நீங்கள் என்னண்டா அது தெரியாமல் கொப்புகளில ஏறி தொங்கிவிளையாடுறியள்.
அடியடா.. நொருக்கடா...
எண்டு கத்தியை தீட்டாமல்;
புத்தியை தீட்டுங்கோ!!!

"மோட்டுத்தமிழன்" எண்டு நாளைக்கு சிங்களவன் எங்களைப்பாத்து சிரிக்கிறமாதிரி நடவாதையுங்கோ!!!

"கவனமடா பொடியள்!!!"😢😢🤔🤔


🔴தமிழ்ப்பொடியன்®

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge