என்னதான் உந்த தொடர்பாடல் தொழில்நுட்பம் (communication technology) வளர்ந்தாலும்...
உந்த sms, internet ,facebook வராத காலத்தில; எங்கட ஆக்களின் "செய்தி காவும் வேகம்" மிக மிக ஆச்சரியமானது.
"பிரியா மினிசினிமாவில்" களவா படம் பாத்து வெளிய வரமுதல் ;"உங்கட மோன் மினிசினிமாவில நிக்கிறார்" எண்டு வீட்ட சொல்லிப்போடுவாங்கள்!!!!
(இண்டு வரைக்கும் அந்த செய்தி காவிய பாண்பத்திர ஓணாண்டி ஒற்றன் யாரெண்டு தெரியவில்லை)
(இண்டு வரைக்கும் அந்த செய்தி காவிய பாண்பத்திர ஓணாண்டி ஒற்றன் யாரெண்டு தெரியவில்லை)
ரீயூசனில் பெட்டையளோட "சேட்டை" விட்டால்; ரியூசன் முடிய வாசலில அவளின் தகப்பன் , அதாகப்பட்டது "மாமா" காத்துநிப்பார்.
(என்னண்டுதான் செய்தி அனுப்பினாகள் எண்டு இண்டு வரை கண்டு பிடிக்க முடியவில்லை)
(என்னண்டுதான் செய்தி அனுப்பினாகள் எண்டு இண்டு வரை கண்டு பிடிக்க முடியவில்லை)
செம்மண் புட்டியில் கள்ளுவாங்கி குடிச்சு கொய்யா இலை சப்பி துப்பிப்போட்டு வந்தாலும்;
"என்ன பனைக்கு கீழ நிண்டனியாம்? ஊது பாப்பம்" எண்டு அண்ணா கேப்பான்.
(எவன் தான் போட்டு குடுத்தான் எண்டு இண்டு வரை தெரியவில்லை.)
"என்ன பனைக்கு கீழ நிண்டனியாம்? ஊது பாப்பம்" எண்டு அண்ணா கேப்பான்.
(எவன் தான் போட்டு குடுத்தான் எண்டு இண்டு வரை தெரியவில்லை.)
கோயில் திருவிழாவில "எங்கட ஆளோட" வடக்கு வீதியில பகிடி விட்டுப்போட்டு தெற்கு வீதி தாண்ட முதல்;
அவளின் அப்பாவோ அண்ணனோ !
அதாகப்பட்டது மாமாவோ மச்சானோ மறிச்சு "கேமை" கேப்பாங்கள்.
அவளின் அப்பாவோ அண்ணனோ !
அதாகப்பட்டது மாமாவோ மச்சானோ மறிச்சு "கேமை" கேப்பாங்கள்.
இந்தக்காலத்து 4G, 3G, WIFI , internet என்ன மூலைக்கு ?
எங்கட ஆக்களின் "செய்தி காவும்" speed ........இக்கு முன்னால்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக