வெள்ளி, ஜூலை 31, 2009

அவுஸ்திரேலியா நீயுமா...???



அவுஸ்திரேலியா நீயுமா...???



Australiya you too...!!!

"Neither Australia nor the international community believed this could be solved by the creation of an independent Tamil state, Mr Smith said." [Sydney Morning Herald]

"We want to see the Tamil Tigers lay down their arms," he said.

http://news.ninemsn.com.au/national/807496/australia-boosts-sri-lanka-aid-by-4-5m

http://www.abc.net.au/news/breakfast/


"சுதந்திரமான தமிழர் தாயகம் அமைவதால் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என அவுஸ்திரேலிய அரசோ சர்வதேச சமூகமோ நம்பவில்லை.தமிழ்ப்புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே போடுவதை தாங்கள்(அவுஸ்திரேலியாவும் சர்வதேச சமூகமும்) பார்க்கவேண்டும்.-அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் சிமித்"

இன்று காலை அவுஸ்திரேலிய ABCஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் சிமித் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

அப்படியானால் 30 வருட காலமாக கிட்டத்தட்ட 1லட்சத்து 50 ஆயிரம் உயிர்களை இழந்து தன் சுயநிர்ணய உரிமைக்காக சுதந்திரப் போராட்டம் புரிந்துகொண்டிருக்கின்ற ஈழத்தமிழினத்துக்கு என்ன முடிவு?என்ன தீர்வு?

ஒரு இன விடுதலைக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 25 ஆயிரம் போராளிகளின் உயிர்களை தியாகம் செய்து சுதந்திர போரட்டத்தினை புரிந்து கொண்டிருக்கும் விடுதலை இயக்கத்தினை பார்த்து அவர்களது பாதுகாப்பு ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயமான கோரிக்கை??

தமிழ்மக்களால் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு ஆயுதங்களை வேறு யாரும் காரணமின்றி கீழே போடுங்கள் என்று சொல்ல உரிமை இல்லை.இதைப்பற்றி பேச தமிழீழ மக்களுக்கு மாத்திரமே உரிமை இருக்கிறது.

இன்று சீனா,யப்பான்,இந்தியா போன்ற வல்லாதிக்க அரசுகள் வெளிப்படையாகவே பேரழிவு ஏற்படுத்தும் இராணுவ ஆயுதங்களையும் போர்த்தளபாடங்களையும் இராணுவ ஆள் உதவிகளையும் சிறிலங்கா அரசுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கின்றன.தமிழினத்துக்கு எதிராக இத்தனை வல்லாதிக்க அரசுகளும் சிறிலங்காவோடு சேர்ந்து இனப்படுகொலையையும் மனிதநேயம் இல்லாத போரையும் புரிந்து கொண்டிருப்பது அவுஸ்திரேலிய அரச கண்களுக்கு தெரியவில்லையா??

சர்வதேச போர்விதிமுறைகளை மீறி இரசாயண ஆயுதங்களை சிறிலங்கா இராணுவம் பாவித்து தமிழர்களை கொல்வது இவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?

தமிழீழத்திலும்,சர்வதேச நாடுகளில் புலம்பெயர் தமிழர்களாலும் "தமிழீழமே எங்களின் நிரந்தரமான தீர்வு,தமிழீழ விடுதலைப்புலிகளே எமது ஏகப்பிரதிநிதிகள்,அவர்களே தமிழினத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள்" என உரத்து குரல் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில்,

" சுதந்திர தமிழர் தயகம் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது,தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை போடுவதை தாங்கள் பார்க்கவேன்டும்" என்பது தனிப்பட்ட ஸ்டீவன் சிமித்தின் கருத்து என்றால் நாங்கள் அதைப்பற்றி கவனத்தில் கொள்ளமாட்டோம்.ஆனால் அவர் அவுஸ்திரேலிய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பான பதவியில் உள்ளவர்.அதுமட்டுமல்ல சர்வதேச சமூகத்தினையும் தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக இழுத்திருப்பது மன வேதனை தருகிறது.சர்வதேச சமூகம் எப்போது சொன்னது அப்படி?யார் இந்த சர்வதேச சமூகம்????

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நடைபெற்று முடிந்த உண்ணாவிரத போராட்டத்தின் முடிவில் தெரிவித்த வாக்குறுதிகளுக்கும் கருத்துகளுக்கும் நேர் எதிரான நிலைப்பாடும் கருத்தும் வெளிவந்திருப்பது அவுஸ்திரேலிய தமிழர்களின் வேதனையை மேலும் அதிகரிக்க வைக்கிறது.ஒட்டுமொத்த தமிழினத்தையும் விசனம் அடைய வைக்கிறது.

"உண்ணாவிரத போராட்டம்" என்பது வன்முறையான போராட்டம்(உணர்ச்சிப் பயமுறுத்தல்- emotional threat)எனவும்,தமிழர்கள் வன்முறையான போராட்டத்தினை இங்கே(அவுஸ்திரேலியா) செய்வதை தாங்கள் விரும்பவில்லை எனவும், அமைதிப்பேரணிகளை தமிழர்கள் அழகாக ஒழுங்காக செய்கிறார்கள் என்ற கருத்துப்படவும் கூறியவர்கள் உண்ணாநிலைப்போராட்டத்தினை கைவிடவேண்டும்,தங்களுக்கு செயற்படுவதற்கான கால அவகாசத்தினை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதின் பின்னரே உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டது.இல்லை இதனையும் மீறி உண்ணாவிரத போரட்டத்தினை தொடருவதகவிருந்தால் "உங்கள் உண்ணாவிரத போரட்டதுக்கு நல்வாழ்த்துக்கள்-good luck for your hungerstrike" என கூறப்பட்டு உண்ணாவிரதிகள் அனுப்பப்பட்டார்கள்.

மேலும் தாங்கள்(அவுஸ்திரேலியா) நேரடியானதும் மறைமுகமானதுமான அழுத்தங்களை சிறிலங்கா அரசின் மேல் மேற்கொள்வதாகவும்,தமது நேச நாடுகளான அமெரிக்கா,பிரித்தானியா,பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் கலந்து ஆலோசித்து கூட்டு நடவடிக்கைகளையே மேற்கொள்ளமுடியும் எனவும் தொனிப்பட கருத்து தெரிவித்தார்கள்.இப்போது என்னவென்றால் திடீரென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கருத்தினை கூறியிருப்பது பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்திநிற்கிறது.

இப்போது சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பு போர் பற்றிய அவுஸ்திரேலியாவின் உண்மையான நிலைப்பாடு என்ன?

சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குரிமை உடைய,அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்ற ஈழத்தமிழர்களும் அதேயளவு தொகையான மலேசிய,சிங்கப்பூர்,இந்திய தமிழர்களும் அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றார்கள்.

சிறிலங்காவின் இனப்பிரச்சினை பற்றி கருத்து கூற முன் இங்குள்ள தமிழர்களின் விருப்பத்தினை அறிய பகிரங்க வாக்கெடுப்பு நடத்த அவுஸ்திரேலிய அரசு தயாரா?

ஒரு சனநாயக நாட்டில் அதன் குடிமக்களின் பிரச்சினை சம்பந்தமான கருத்தினையோ முடிவையோ தெரிவிக்கமுன் அவர்களின் அபிலாசை என்ன?அவர்களின் உணவுகள் என்ன?என்பவற்றை அவர்களிடம் கேட்டு அறியவேண்டியது ஒரு சனநாயக அரசின் கடமை.அதை அமெரிக்காவானது ஈராக்கிய பிரச்சினையில் செய்யவில்லை! கொசோவா பிரச்சினையில் செய்யவில்லை! அவுஸ்திரேலியா அரசு கிழக்குதீமோர்,ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் செய்யவில்லை! இந்திய மத்திய அரசும் சீனாவும் ரஸ்ஸியாவும் ஜப்பானும் பாகிஸ்தானும் ஈழத்தமிழர் பிரச்சினையில் செய்யவில்லை!

சர்வதேச சமூகம் ஈழத்தமிழர் பிரச்சினையில் எத்தகைய அடிப்படையில் செயற்பட்டுகொண்டிருக்கிறது என்பது இப்போது கூட குழப்பமாகத்தான் இருக்கிறது.ஈழத்தமிழர் பிரச்சினையை உள்நாட்டு பிரச்சினையாக சர்வதேசம் பார்க்குமானால் இந்தியா,சீனா,ரஸ்சியா போன்ற வல்லதிக்க அரசுகள் வெளிப்படையாகவே சிறிலங்கா இராணுவதுக்கு உதவி செய்து போரை நடாத்த பின்புலத்தில் செயற்படுவது அவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?

யார் இந்த சர்வதேச சமூகம்?
அமெரிக்காவா?பிரித்தானியாவா?இல்லை வல்லாதிக்க சக்திகளா?இல்லை சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களா?

சர்வதேச சமூகம் என்ற மாயையான ஒரு தோற்றப்பாட்டை நம்பி தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது.

2006 ம் ஆண்டு காலப்பகுதியில், தமிழீழம் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தின் 85% இக்கும் அதிகமான நிலப்பரப்பையும் அதற்கான உட்கட்டுமான அமைப்புகளையும் கட்டியெழுப்பிவிட்டு இந்த சர்வதேச சமூகத்திடம் தான் "தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரியுங்கள்" என்று தமிழ்மக்கள் கேட்டார்கள்.தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்ததா சர்வதேச சமூகம்?இல்லை.
இப்போது தமிழீழத்தின் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு தமிழ்மக்கள் சாவின் விளிம்பில் நிண்டுகொண்டிருக்கும் போது இந்த சர்வதேச சமூகம் தமிழீழத்தை அங்கீகரிக்கும் என்று தமிழர்கள் நம்பவில்லை.

ஆனால் சுதந்திர விடுதலைப்போராட்டங்களின் வலிகளையும்,ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமைகளையும் உணர்ந்த பல நாடுகள் இந்த பூமிப்பந்தில் இருக்கின்றன.அதனிலும் மேலாக தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகள் இருக்கிறார்கள்.

ஈழத்தமிழர் பற்றியும் அவர்களின் சுதந்திர விடுதலைப்போராட்டம் பற்றியும்
யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்.சுதந்திர விடுதலைப்போரட்டத்தின் மூலம் விடுதலை பெற்ற நாடுகளும் அதன் தலைவர்களும் மக்களும் அதனிலும் மேலாக தமிழக தொப்புள் கொடி உறவுகளின் ஆத்மார்த்தமான ஆதரவு உள்ளவரை உலகின் எந்த வல்லாதிக்க சக்திகளாலும் ஈழத்தமிழனின் விடுதலைப்போரட்டத்தினை நிறுத்தவும் முடியாது.தமிழர்களுக்கான சுதந்திர தமிழீழ தனியரசு மலர்வதை தடுக்கவும் முடியாது.

தமிழ்ப்பொடியன்-






AUSTRALIA YOU TOO...!!!!
"Neither Australia nor the international community believed this could be solved by the creation of an independent Tamil state, Mr Smith said." [Sydney Morning Herald]


It is a great disapointmet for Australian Tamils"....!!!!!

we feel,we had wasted our time and energy to open Australian Government's eyes and heart..!!!

Australia and IC be as a dump and blind..!!!

They don't understand tamil australian's real feelings...!!!

Australia and IC wants to see tamil tigers lay down their arms...!!!

Australia and IC not believed "independent Tamil state -tamileelam" is not a solution for the tamils who are sufferring more than 30years...!!!!


0000000000000000000000000000000000


This morning, in an interview to Australia's ABC, Australian Foreign Minister Stephen Smith said Australia was to donate $4.5 million to Sri Lanka towards humanitarian work AND also said:

"Neither Australia nor the international community believed this could be solved by the creation of an independent Tamil state, Mr Smith said." [Sydney Morning Herald]

So let's call Mr Smith and ask him to tell us what the solution is. Since he seems to know what will and will not work.


We need to resend this out and get the phones ringing.


KEVIN RUDD
Tel: (02) 6277 7700

STEPHEN SMITH
Tel: (02) 6277 7500


Please introduce yourself in the beginning - "I am ... calling from ....", "I want to make a urgent request to the prime minister/foreign minister...". Please Give your real name and number if you are asked for it.


We also want their phones to be ringing ALL DAY. AND FOR US TO KEEP CALLING.

keep these quotes in mind:
HOW CAN WE LIVE UNDER THE CONTROL OF SUCH A GOV'T???


"I strongly believe that this country belongs to the Sinhalese but there are minority communities...They can live in this country with us. But they must not try to, under the pretext of being a minority, demand undue things."
[Sri Lankan Army Commander Lt. Gen. Sarath Fonseka, National Post - Canada, Sept 2008]




--

தமிழ்ப்பொடியன்
Wednesday, 29 April 2009 at 22:11

என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி.!

வணக்கம் உறவுகளே...!!!!

ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.
புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது.

இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை,இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை,ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது.கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள்.இதற்குமேல் சர்வதேச அளவில் கவனயீர்ப்பையோ பரப்புரையையோ செய்யமுடியாது என்பதுசர்வதேச மனித நேய கனவான்களுக்கு தெரிந்த உண்மை.

கொழுத்தும் வெய்யிலில் தீக்குளித்தார்கள் மெல்பேர்ன் நகரில் 5000 தமிழர்கள்.பட்டிணியிருந்து உடல் வருத்தி கருணை காட்டுங்கள் என இளையோர் மன்றாடிக்கேட்டார்கள் சிட்னியில்.கன்பராவில் 4000 தமிழர்கள் என்றுமில்லாதவாறு அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார்கள்.ஆனாலும் என்ன பயன்?என்ன நடந்தது?ஒன்றுமேயில்லை.வெறும் காகிதத்தில் உப்புச்சப்பில்லாத பதில் அறிக்கைகள்.அதுகூட சிறிலங்கா அரசாங்கத்தின் மனம் நோகக்கூடாது என்று கஸ்ரப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்பது எல்லோரும் அறிந்த கசப்பான உண்மை.ஆனால் கண்துடைப்புக்காக சில தாமதமான வாக்குறுதிகள் வழங்பட்டது ஏனோ மனதுக்கு ஆறுதல்.அவைகூட கானல் நீர்தான்.
வாழ்க்கை தேடி வந்த நாட்டையும் மக்களையும் குறை சொல்வதாய் சிலர் முணுமுணுப்பது என் காதுகளுக்கு கேட்கிறது.அடைக்கலம் தந்த நாட்டை ஆலயங்காளாக நினைக்கும் ஆயிரம் ஆயிரம் தமிழர்களில் நானும் ஒருவன்.நாயிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட இந்த அகதிகளுக்கு கொடுக்கிறார்கள் இல்லையே என்று நினைக்கும் போதுதான் மனதின் ஒரு ஓரத்தில் வலிக்கிறது.

உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் இதை ஒரு சீனாக்காரனோ இல்லை அவுஸ்ரேலிய பழங்குடியினரோ செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?அவுஸ்ரேலிய குடியுரிமை உடைய அவுஸ்ரேலிய இளையோர் 4 பேர் உண்ணாவிரத போராட்டம் என்று ஒரு 5 நிமிடத்துக்கு இருந்தால் என்ன ஆகியிருக்கும்?அதுவே இந்த நாட்டின் முக்கிய பிரச்சினையாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகியிருக்கும்.நாடே திரும்பிப்பார்த்து கேள்வி கேட்டிருக்குமா? இல்லையா?ஆனால் அவுஸ்ரேலிய மண்ணின் குடியுரிமை பெற்ற இளையோர் 72மணிநேரத்துக்கு மேலாக பட்டினியிருந்து குரல் எழுப்பி என்ன பலன்?கடைசியில் அவர்கள் அந்த புனிதமான அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து நடத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டதுதான் வேதனை தருகின்றது.மகாத்மாகாந்தி மேல் கொண்ட வெறுப்பும் கோபமும் இன்னும் வெள்ளைக்காரர்களுக்கு போகவில்லை என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களையும் சமத்துவமாக சரிசமானமாக வேறுபாடின்றி பார்க்கவேண்டியது ஒரு நல்ல மாந்தை நேய அரசின் கடமையாகும்.மனிதநேயம் என்பதை வெறும் வாயினால் பேசினால் மட்டும் போதாது.மனச்சாட்சியோடு அதை செயல் வடிவத்திலும் காட்டவேண்டும்.

அவ்வாறு வேறுபாடு காட்டப்படும் இடத்து அதை தட்டிக்கேட்க வேண்டியது எமது உரிமை.ஆனால் இது நமது வேலையல்ல.தாயகத்தில் நாள்தோறும் 50,100 என நரபலி எடுக்கிறது சிறிலங்கா பேரினவாத இராணுவம்.இதற்கு துணைபோகிறது இந்திய ராணுவமும் சர்வதேச நாசகார படைகளும்.

புலம்பெயர் தமிழர்கள் நாங்கள் இப்போது ஒரு தீர்மானத்தை ஒருமனதாக எடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.
விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா?தலைவர் பிரபாகரன் வன்னியை விட்டு ஓடிவிட்டாரா?விடுதலைப்புலிகளுக்குள் பிளவு ஏற்பட்டு வலிமை குன்றிவிடார்களா?காடுகளுக்குள் ஓடி ஒழிந்துவிடார்களா?இன்னும் சில நாட்களில் ஆயுதங்களை எல்லாம் போட்டுவிட்டு சரணடையபோகிறார்களா?இப்படியெல்லாம் பலகேள்விகளை கேட்டுக்கொண்டிக்கிறார்கள் பலபேர்.அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் தான்.புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
ஒரு மாதமாக 1500 அப்பாவி பொதுமக்களை நரபலி எடுத்து 5000 விடுதலைப்புலிகளை கொன்றொழித்துவிட்டதாக சர்வதேசத்துக்கு கணக்கு காட்டியிருக்கிறது மகிந்த அரசாங்கம்.அதை அப்படியே மண்டையை ஆட்டி ஏற்றுக்கொண்டிருக்கிறது சர்வதேசமும் மனித நேய அமைப்புக்களும்.கோடிக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழர்கள் கொட்டும் வெய்யிலிலும் உறைபனியிலும் நின்று "எங்களுக்கு நீதி வேண்டும்,எங்கள் சொந்தங்களை மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்" என்று கதறிக்கூக்குரல் கொடுத்தும் சர்வதேசம் இறுக கண்மூடி தூங்குகின்றது.இல்லை தூங்குவதுபோல் நடிக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் 2000 உயிர்கள் அநியாயமாக காவுகொள்ளப்பட்டுள்ளது.2500 இக்கும் அதிகமானவர்கள் உடல் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள்.

கோவில்கள்,தேவாலயங்கள்,வைத்தியசாலைகள் என அடைக்கலம் தேடி புகுந்த மக்களையும் சர்வதேச போர்விதிமுறைகளையும் மதிக்காது குண்டு வீசி கொன்றொழித்து கொண்டிருக்கிறது சிங்கள பேரினவாதம்.இதை கைகட்டி வாய்பொத்தி மெளனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.அதுமட்டுமா கொல்லப்படுவது புலிகள்தான் என்று அறிக்கையும் வேறு.வெள்ளைப்புறா வேசம் போட்ட குளிர் நாடும் அதற்கு ஆமாம் என்று தலையாட்டுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

வயிறுபிளந்து குடல் சிதறிக்கிடக்கும் சின்னக்குழந்தையும் தள்ளாத வயதில் தலை இல்லாமல் துண்டுதுண்டாய்க்கிடக்கும் அப்புவும் ஆச்சியும் விடுதலைப்புலிகளா?இல்லை இரண்டு கைகளையும் இழந்து வலியால் குழறும் சின்னப்பொடியன் புலியா?என்னடா உங்கள் நீதி?காசாவில் நாலு வயது குழந்தை இறந்து விட்டால் வாய் கிழிய கத்துகிறீர்கள்.நாய் ஒன்று நடுவீதியில் அடிபட்டால் நாலு பக்கத்துக்கு அனுதாப கட்டுரை எழுதும் சர்வதேச மனிதநேய வாதிகளே கொஞ்சம் மனச்சாட்சியோடு எங்கள் மக்களை திரும்பி பாருங்கள்.இல்லையென்றால் நீங்கள் எடுத்திருக்கும் சில இறுக்கமான தீர்மானங்களையும் மனச்சாட்சி இல்லாத முடிவுகளையும் போல நாங்களும் அவசரமாக எடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருக்கிறோம்.

தமிழர்கள் இழிச்சவாயர்கள்,குட்டக்குட்ட குனியும் மடையர்கள்.!,எது செய்யினும் ஏன் என்று கேட்பதற்கு நாதியற்றவர்கள்.!.தமிழன் உயிர் நாயிலும் கேவலமானது.!.மதிப்பில்லாதது.தமிழன் என்ற இனம் இனிமேல் இருக்கக்கூடாது.அவனுக்கென்று ஒரு நாடு வரலாற்றில் இருக்கவேகூடாது.இப்படியெல்லாம் நினைக்கும் சிங்களப்பேரினவாதத்துக்கும் சர்வதேச சண்டியர்களுக்கும் ஒன்றை மட்டும் கடைசியாய் கூறுகிறோம்.என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்று எதிரியே தீர்மானிக்கிறான் என்று யாரோ ஒருவன் சொன்னான்.முல்லைத்தீவிலும் புதுக்குடியிருப்பிலும் கொத்துக்குண்டுகளையும் கிளஸ்ரர் குண்டுகளையும் எரிகுண்டுகளையும் வீசியும் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை கொன்றொழித்தும் போராட்டத்தின் வடிவத்தையும் பாதையையும் மாற்றி விட்டான் எதிரி.வன்னியில் கேட்கின்ற அழுகுரல்களைப்போல் ஆயிரம் மடங்கு சிறிலங்காவின் மூலை முடுக்கேல்லாம் கேட்க வைப்பதற்கு தமிழர்களால் நினைத்தால் அரை நொடியில் முடியும்.இதைத்தான் சிங்களப்பேரினவாதமும் மகிந்த அரசும் மனிதநேய அமைப்புக்களும் சர்வதேசமும் எதிர்பார்க்குமானால் அது வெகுவிரைவில் நடக்கும்.அப்போதும் புலம் பெயர் தமிழர்களின் கைகளில் தான் இன்னொரு பணியும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இப்போது சர்வதேசமே கண்திறந்து பார் என கூக்குரலிட்டு கதறும் நாங்கள்,சிங்கள தேசம் கூக்குரலிட்டு அழும்போது கொடுக்கு கட்டிகொண்டு ஓடிவரும் சர்வதேச சண்டியர்களை நடப்பதை பொத்திக்கொண்டு வேடிக்கை மட்டும் பார் என்று அடக்கிவைக்கவேண்டியதும் நாம்தான்.





என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி.!

உனக்கு வேண்டுமானால் பிரான்ஸ் கொடியோ அவுஸ்ரேலியக்கொடியோ தேசியக்கொடியாகலாம்

எனக்கு என் அப்பு கட்டிய கொவணத்துணியே தேசியக்கொடி
ஒடியல் புட்டும் மீன்கறியும் தான் எனக்கு எப்பொதும் தேசிய உணவு.

பிசாவும் மக்கசும் ருசிதான் -ஆனாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆக்கிய நண்டுக்குழம்புக்கு கீழ்தான்

கொள்ளை அழகுதான் பாரிஸ் கோபுரம்-ஆனாலும்
நெடிதுயர்ந்த பனையை விட கொஞ்சம் குறைவுதான்.!

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது
கடல் கடந்தாலும் கலாச்சாரம் மாறாது

நாகரிகம் என்று உன் நல்ல பெயரை நறுக்கி மாற்றலாம்
உன்னுள் ஒடும் உன் தாயின் குருதியை மாற்றலாமோ?

ராப்பும்(துள்ளிசை) பப்பும்(கேளிக்கை விடுதி) உனக்கு அந்த மாதிரி
உடுக்கோசையும் காவடிஆட்டமும்தான் என்றும் எனக்கு முன்மாதிரி

அடையாளங்களை தொலைத்து விட்டு அசிங்கமாய் வாழ்வதைவிட
அம்மணமாக வாழ்வது மேல்.!

அன்புடன்
தமிழ்ப்பொடியன்
சபா ரமணா
09/02/2009

திங்கள், ஜூலை 27, 2009

உரிமைக்குரல்




உறவுகள் கருகுதையோ...!!!
உலகமே திரும்பிபாரடா....!!!
----------------------------------------

அட கடவுளே...!
என் உறவுகள் சுமக்கும் 'வலி" சொல்ல என்னிடம்
வார்த்தைகளும் இல்லைஇ வழியும் இல்லையே..!
என் தாய்மண் கண்முன்னே கயவர்களால் கற்பழிக்கப்படும்போது...
என் நெஞ்சு பிழந்து குருதி கசிந்து உணர்வுகள் ஓலமிடுகிறது.
என் உடன்பிறப்புக்கள் உயிர்பிழிந்து உடல் மெலிந்து
வானம் கிழிய "காப்பாற்றுங்கோ" என அவலக்குரல் எழுப்ப...
என் குருதி கொதித்து விழியில் நீர் கசிந்து
ஓடிவந்து உங்களின் கைபிடிக்க துடிக்குது என் கரங்கள்.

ஆனாலும்
இயலாமையின் விழிம்பிலும்....!
சுயநலத்தின் போர்வையாலும்....!
காலத்தின் தீர்ப்புகளாலும்....!
கட்டாய புலப்பெயர்வாலும்....!
என் கைகள் கட்டப்பட்டு வாய்மூடி வாழாது 'சும்மா' இருக்கிறேன்.
'தாய்' அழும்போது துடைத்துவிடும் தூரத்தில் என் கைகள் இல்லையே...!
உறவுகள் கலங்கி துணை தேடும் போது தோள் கொடுக்க எனக்கு 'நாதி' இல்லையே...!
இதை நினைக்கையிலே வெட்கிதலைகுனிந்து விம்மி அழுகுதடா நெஞ்சு...!

உறவுகள் கருகுதையோ...!!!
உலகமே திரும்பிப்பாரடா....!!!

சின்னத்தங்கச்சி 'பெரியவளாகி'
"குட்டிஅண்ணா வருவியா?"என்றவளுக்கு
"கெதியில வருவன்" என்று
பிஞ்சு மனத்தில் பொய் சொன்னவன்
ஆசையாய் வளத்த அம்மாச்சிக்கு 'பந்தம்' பிடிக்கக்கூட
இந்த பேரனுக்கு பாக்கியம் இல்லை.
என்னைப்பெற்ற அம்மா ஆருமற்ற அனாதையாக ஆசுப்பத்திரியில் படுத்திருந்து
"தம்பி எப்படா பாக்கபோறன்"எனும்போது
சொல்ல 'பதில்' இல்லாதுஏங்கி நின்றவன்.
இப்போதும் மட்டும் என்ன உணர்வு துடிக்கிறதோ?
உள்ளம் கலங்குதோ?
உணர்வு 'பொங்கி' புளியங்குளம் கடக்கவா போகிறேன்...???
இல்லவே இல்லை.
ஆனாலும்......

எனக்குள் இருக்கும் 'மனச்சாட்சி' குத்துகிறது.
தமிழ்பொடியன் என்ற 'தன்மானம்" தவிக்கிது.
'இனவிடுதலை' என்ற 'தாகம்' குருதியில் சுண்டி இழுக்குது.
'மனிதாபிமானம்' என் மனதை குடைகிறது.

என் சனத்துக்காக எவனெவனோ 'நீலிக்கண்ணீர்' வடிக்க
நான் மட்டும் விழியிருந்தும் விசரனாகவா வாழ முடியும்?
எவனோ வருவான் எமக்கு 'விடிவு' தருவான் என
என் இனம் என் சனம் ஏங்கி வாழவில்லை.
கப்பலில் உணவு வருமென காத்துக்கிடக்கவும் இல்லை.

என் தங்கச்சியின் பாவாடை கிழிந்து கிடந்தால்
எனக்குத்தான் 'வெட்கம்'
என் தாயின் சேலையில் பொத்தல் இருந்தால்
எனக்குத்தான் 'அவமானம்'
என் அப்புவின் கோவணம் களவுபோனால்
நான்தான் பொறுப்பு.
என் தம்பி பட்டினியால் அழுதால்
அடுப்பினில் 'உலை' வைக்கவேண்டியதும் நான்தான்.
இதற்காக பக்கத்து வீட்டுக்காரனையா அழுது கூப்பிடமுடியும்?
வேணுமெண்டால் எனக்காக 'ஐயோ பாவம்' என கவலைபட மட்டுமே இயலும்.
அது இருக்க...

உறவுகள் கருகுதையோ...!!!
உலகமே திரும்பிப்பாரடா....!!!

பாரததேசத்தை நாங்கள் பாசத்தோடுதான் பல காலமாக பார்க்கிறோம்.
எமக்கான 'ஆறுதல் கரங்களும் சுமைதாங்கிகளும்'
அங்கே 'ஆயிரம்' உண்டு.
யார் செத்தாலும் எவன் ஆண்டாலும் உறுதியோடு 'கொள்கை சாயாத'
கோபுரங்களும் சில உண்டு.
இருந்தாலும்...
பதவிக்கும் பகட்டுக்கும் 'முதலை கண்ணீர்' வடிப்பவரும் உண்டு.
'எல்லாம்' முடிந்ததும் 'சுயரூபம்' காட்டுபவரும் உண்டு.
எதுவாயினும்....
நாம் எப்போதும் பாரதமாதாவை எங்கள் 'பெரியம்மாவாகவே' நினைக்கிறோம்.
எங்கள் வீட்டில் சாவீடோ? கல்யாணவீடோ?
கட்டாயம் ஒரு அழைப்பு அவர்களுக்கு எப்போதும் உண்டு.
அது இருக்க...

உறவுகள் கருகுதையோ...!!!
உலகமே திரும்பிப்பாரடா....!!!

வான்வழி வரும் 'வல்லூறு' எங்கள் பிஞ்சுகளின் நெஞ்சு பிழந்து
நெருப்பெறிந்து போகிறான்.
கர்ப்பிணிப்பெண்களின் கருக்கலைத்து சிசுக்களின் சின்ன உயிர் தின்கிறான்.
பள்ளி செல்லும் வெள்ளைச்சிட்டுக்களை செங்குருதியில் குளிக்க வைக்கிறான்.
செருக்கோடும் சீரும் சிறப்போடும் பேரோடும் உறவுகளோடு ஊரேறி வாழ்ந்தவர்
தெருவோடு மரநிழலோடும் பசியோடும் நிதம் சாவோடும் வாழ்கிறார்....
தாய்முலை வறண்டு போனதால் சின்னப்பிஞ்சு பசியால் துடித்துச் சாகுது.
பிஞ்சு துடிப்பதை பார்த்து தாய்நெஞ்சு கதறிஅழுகுது
மானுடம் காக்கவல்ல 'மருத்துவம்' கூட எம் மக்களுக்கு
'மருந்துக்கும்' கூட இல்லையே...!

இருப்பினும்......
எங்கள் இனம்...! எங்கள் சனம்...!
'மானம்' இழக்கவில்லை...!!!
'ஈரம்' இழக்கவில்லை...!!!
'வீரமும்' இழக்கவில்லை...!!!

கட்டினால் 'கொண்டை'
வெட்டினால் 'மொட்டை'
எதுவானாலும் எம்தலையிலாகட்டும் என
இறுமாப்போடு வாழும் சனம் எம் சனம்.

இருந்தாலும்.....
எங்கள் சனம் ஏங்கிநிற்பது ஒன்றே ஒன்றுக்குத்தான்.
புலம்பெயர்ந்து புதுவாழ்வு வாழும் தன்னினம்
தனக்காக 'உரிமைக்குரல்' எழுப்பாதா?
தனக்காக 'உதவிக்கரம்' நீட்டாதா?
இதைதவிர்த்து எதையுமே எப்போதுமே கேட்டதில்லை அவர்கள்.

குண்டுச்சத்தங்களும் மரணஓலங்களும் தாயகமண்ணில் கேட்கிறது.
அங்குதான் கேட்கவேண்டும்.
எழுச்சியும் விடுதலைகுரல்களும் உதவிக்கரங்களும் இங்கிருந்து செல்லவேண்டும்.
இங்கிருந்து மட்டும்தான் செல்லவேண்டும்.

உறவுகள் கருகுதையோ...!!!
உலகமே திரும்பிப்பாரடா....!!!
00000000000000000000000000000






என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி.!

உனக்கு வேண்டுமானால் பிரான்ஸ் கொடியோ அவுஸ்ரேலியக்கொடியோ தேசியக்கொடியாகலாம்

எனக்கு என் அப்பு கட்டிய கொவணத்துணியே தேசியக்கொடி
ஒடியல் புட்டும் மீன்கறியும் தான் எனக்கு எப்பொதும் தேசிய உணவு.

பிசாவும் மக்கசும் ருசிதான் -ஆனாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆக்கிய நண்டுக்குழம்புக்கு கீழ்தான்

கொள்ளை அழகுதான் பாரிஸ் கோபுரம்-ஆனாலும்
நெடிதுயர்ந்த பனையை விட கொஞ்சம் குறைவுதான்.!

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது
கடல் கடந்தாலும் கலாச்சாரம் மாறாது

நாகரிகம் என்று உன் நல்ல பெயரை நறுக்கி மாற்றலாம்
உன்னுள் ஒடும் உன் தாயின் குருதியை மாற்றலாமோ?

ராப்பும்(துள்ளிசை) பப்பும்(கேளிக்கை விடுதி) உனக்கு அந்த மாதிரி
உடுக்கோசையும் காவடிஆட்டமும்தான் என்றும் எனக்கு முன்மாதிரி

அடையாளங்களை தொலைத்து விட்டு அசிங்கமாய் வாழ்வதைவிட
அம்மணமாக வாழ்வது மேல்.!

அன்புடன்
தமிழ்ப்பொடியன்
09/02/2009

உறவுகளின் வலி



"தவிப்பு"
---------------


வணக்கம்!!!
மனிதாபிமானம் மரித்த மண்ணில்
மறுக்கப்பட்ட வழ்வை தொலைத்து
தொட்டழைந்த மண்ணையும் விட்டு
உடன் இருந்த உறவுகளையும் தொலைத்து
முளையோடு பிடுங்கி எறியப்பட்ட "விதையாய்"
ஊன்ற நிலம் கேட்டு வந்திருக்கும்
தமிழ் பொடியனின் தவிப்பு இது!

தலை நிமிர்ந்து வாழ்ந்த "தாய்மண்ணை"
உயிர் காக்கும் "உறங்காத விழிகளை"
தலை சாய்ந்துறங்கும் "தாய்மடியை"
என் உயிராய் நேசித்த "நண்பர்களை"
இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு "வலியோடு"
வந்திருக்கிறேனே!-நான்
வாழ்வதற்கா? இல்லை வாழ வைப்பதற்கா???

ஆழக்கடல் கடந்து "வாழ்வு" தேடி
வந்தவனை "அகதி" எண்டு அடையாளம் இட
"ஆயிரம்" கேள்விகள்!

அழகான பூந்தோட்டத்திலிருந்து
பிடுங்கி எறியப்பட்ட சின்னஞ்சிறு செடி நான்
என் வேர்களில் இப்போதும் ஒட்டி இருப்பது-என்
தாய்மண்ணின் "புளுதி மண்" வாசம்தான்!

இங்கே நிரந்தரமாய் வேரூண்டி விழுதுகள் விட
ஆசையில்லை எனக்கு!
ஆணிவேரும் அடிக்கட்டைகளும் அங்கே இருக்க-இங்கே
ஆழ வேரூண்ட எவனுக்கும் ஆசை இல்லை.
என் ஒவ்வொரு கிளைகளும் கொடுக்கின்ற "நிழலில்"
இளைப்பாற வேண்டும் என் இனம்! என் சனம்!

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு
தங்கத்தட்டில் தரமான உணவாம்!
என்ன கொடுத்தாலும் என் தாய் கொடுக்கும்
"புட்டுக்கும்" "நண்டுக்கறிக்கும்" ஈடாகுமா?

ஓலைப்பயில் ஒழுகும் மழைத்துளியில்
நனைந்து உறங்கியவனுக்கு-இங்கே
ஓசியாய் கிடைக்கிறது "ஏசி"


என்ன வேன்டும்?எண்டு கேட்டபின் கொடுக்கும் இவர்களுக்கு தெரியாது
கொடுத்தபின்இ இன்னும் வேண்டுமா? எண்டு கேட்கும் "இனம்" நான் எண்டு.

வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எல்லாம்-அங்கே
வீடு கட்டி வாழ்வதில்லை!
காலநிலை மாற்றம் அவற்றை கடல் கடக்க வைக்கிறது.

இப்போது எங்கள் மண்ணில் இலையுதிர்காலம்-நாளை
வசந்தகாலம் வரும்போது மீண்டும் வானமேறுவோம்
எங்கள் மண்ணில் நிரந்தரமான "வாழ்வை" தேடி!

அன்புடன்
தமிழ்பொடியன்


அன்பர் ஒருவர் "வாழ வந்த மண்ணையும் மக்களையும் குறை சொல்கிறேன்" என்று ஆதங்கப்பட்டார்.தட்டிகொடுப்பவர்களை விட தட்டிகேட்பவர்களை நேசிப்பவன் நான். இருந்தாலும் என் பதிலும் உணர்வும் இங்கே....!
0000000000000000000000000000000000000000





"வாழ்ந்து பாருங்கள் "வலி" தெரியும்.....!!!!
------------------------------------------------------------------

ஐயா..!
காவியம் படைக்க நான் கம்பனும் இல்லை!
மரபுக்கவிதை எழுத எனக்கு "மண்டையும்" இல்லை!
புதுக்கவிதை புனைய நான் "புதுவை அண்ணாவும்" இல்லை!

விரக்தியின் விளிம்பிலும்! வேதனையின் வேக்காட்டிலும்!
விம்முகின்ற உனர்வுகளை
"கவிதை" எனும் கட்டுக்குள் அடங்காமல்
விழி வழி வழியும் நீர்துளிகளைப்போல
வலியின் உச்சத்தில் வரும் என் வாய் "பிதற்றல்"
என் விரல் கிறுக்கும் கிறுக்கல் இது!

வாழ்ந்த மண்னை விட்டு
"வாழ்க்கை" தேடி வாழ வந்த மண்ணை
"பழிக்கும்" பாவம் செய்யும் பாவி நான் இல்லை!
"அடைக்கலம்" தந்த வீடுகளை "ஆலயங்களாய்"
நினைக்கும் ஆயிரம் தமிழர்களில் நானுமொருவன்!


ஐயா...!
"தமிழன்" என்ற செருக்கோடு தலை நிமிர்ந்து
வாழ்ந்த நாங்கள்....
"அகதி" என்ற அவமானத்தோடு அவலப்படுகிறோமே.!
அந்த "ஆதங்கம்" தான் எனக்கு!

"சிற்றிசன்" தந்தாலும் "சிம்மசனம்" எமக்கெல்லாம்
எங்ககள் தாயகத்தில் தான்.
அன்னை மண்ணில் ஆறடிக்குள் புதைந்து "துயிலும்"
அற்புதம் நம்மில் எத்தனைபேருக்கு கிடைக்கும்?
"ஆயிரம்" சொன்னாலும் "அகதி" என்ற பேரோடுதான் - இங்கே
"அடக்கம்" செய்யப்படும் அவலம்!

சொந்த மண்ணிலும் "அகதி"
வந்த மண்ணிலும் "அகதி"


ஐயா...!
அழுதாலும் விழங்காது..!
எழுதினாலும் புரியாது...!
"அகதி" எனும் சொல்லின் அவமானத்தின் "அசிங்கம்"
வாழ்ந்து பாருங்கள் "வலி" தெரியும்...!
15.06.2006



புதுப்பானை எடுத்து புத்தாடை உடுத்தி பொங்கலாம் வா.!
-----------------------------------------------------------------------------------------------------







புதுப்பானை எடுத்து புத்தாடை உடுத்தி பொங்கலாம் வா.!
வன்னியில் வயிறு கிழித்து குடல் எடுத்து தின்னுகிறான் சிங்களவன்
எங்களுக்கென்ன நீ வா.!
சக்கரைப்பொங்கல் பொங்கி நாங்கள் தின்னலாம் வா.!

சதைத்துண்டங்களாய் சிதறிக்கிடக்கிறது சின்னப்பிஞ்சு
அது என்ன எங்கள் பிள்ளையா?இல்லை எங்கள் தங்கையா?

சிரழிந்து சின்னாபின்னமாய் அழிந்து போகிறது தமிழன் வாழ்வு
எமக்கென்ன நீ வா நாவுக்கு ருசியாய் பொங்கி தின்னாலாம்.

இனமே அழியுது.! இன்னல் பெருகுது.!
இங்கே நாங்கள் தமிழனின் பண்பாடு அழியாமல்
இந்து மதம் இடிந்து போகாமல் இருக்க
பொங்கலாம் வா

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அழுபவனுக்காக அழிபவனுக்காக
இங்கிருந்து அழுது என்ன பலன்?

பிள்ளை குட்டி எல்லம் பொன்சரில வந்தாச்சு
சிற்றிசனும் எடுத்தாச்சு
பிறகெதுக்கய்யா பயப்பிடவேணும்?
நீ வா பொங்கலாம்.!

ஆயிரம் பேர் கூடி ஆர்ப்பாட்டம் செய்வதிலும் பார்க்க
ஐந்து பேர் சேர்ந்து ஆரவாரமாய் பொங்கினால்
அழிந்து போகாமல் நம் இனம் வாழும்
விழுந்து போகாமல் நம் சனம் எழும்.!

புலத்தில் உள்ள தமிழரெல்லாம் பொங்கி புத்தாண்டை கொண்டாடுக
தமிழீழத்தின் மானமும் வீரமும் நீங்கள் பொங்குவதில்தான் இருக்கிறது
இது நிலத்தில் வாழும் வீரத்தமிழனின் வேண்டுதல்

"காடுகளுக்குள் கால் கடுக்க கையில் உயிரைப்பிடித்து கொண்டு
கண்ணீரோடு ஓடிக்கொண்டு இருக்கிறோம்

கையில் என் கடைசி மகளின் கண்மூடிய சடலம்.!
அடக்கம் செய்யவே அவகாசம் இல்லை.
ஒடிக்கொண்டிருக்கிறோம்....!!

அதற்காக மரணவீடு மெல்பேணிலா வைக்க முடியும்?

தை பிறந்து தமிழனுக்கு வழி பிறக்க வேண்டும்
அதற்கு நீங்கள்தான் தைபொங்கல் பொங்கவேண்டும்
அதை நாங்கள் வானத்தில் இருந்து பார்த்து ரசிக்க வேண்டும்.
மறக்காமல் சக்கரை சேர்த்து பொங்குங்கள்
என் சின்ன மகளுக்கு சரியான ஆசை

மறக்காமல் கொஞ்சம் எங்களுக்காய்
மண்ணை நினைத்து மனதார நெஞ்சுருகி அழுகின்ற
மறத்தமிழனின் விழி சிந்தும் கண்ணீர் விட்டுப்பொங்குங்கள்
உப்புக்குப்பதிலாய்".

Sunday, 11 January 2009 at 22:08

ஞாயிறு, ஜூலை 26, 2009

தாயகம்




கார்த்திகை பூ எடுத்து வாடா..!
-----------------------------------------------

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!

இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.!
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..!
உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்?
உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..!
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும்.
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள்
ஆணிவேரான ஆலமரங்களே..!
ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம்
இல்லை
தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும்.
கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக்
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும்.
கண்களிலே கண்ணீர் கவி எழுதும்
கையிரண்டும் உமை நோக்கி கூம்பி எழும்.


கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!

துயிலும் இல்லங்கள் எங்கள் தேசத்தின் ஆலயங்கள்-அதில்
வாழும் நீங்கள் எங்கள் ஆதிமூலங்கள்.
சாவினை கழுத்தினில் கட்டிக்கொண்டீர்-அந்த
சாவினை சரித்திரமாய் ஆக்கிக்கொண்டீர்.
விடுதலைத்தீயினை விழி சுமந்தீர்
வீர வித்துக்காளாய் மண்ணுக்குள் நீர் புதைந்தீர்.
கண்முன்னே கணப்பொழுதில் கரைந்துது போனீர்-அந்த
காலனுக்கே கணக்கெழுதி வைத்துப்போனீர்.
மண்ணின்று மறத்தமிழர் மானம் காத்தீர்-பின்
விண் சென்றும் மங்காத விடிவெள்ளியானீர்.

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!

எவன் சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று?
கூட்டிவா அவனுக்கு உமைக்காட்டுகிறேன்.

சுட்டெரிக்கும் புழுதிமணல் வெளியில் உங்கள் 'கால்த்தடம்'
கத்தும் கடலோசையில் உங்கள் 'உயிர்மூச்சு'
காண்டாமணி ஓசையில் உங்கள் 'கணீர்க்குரல்'
மூண்டெரியும் தீயினில் உங்கள் 'பூமுகம்'
கல்லறையில் பூத்திருக்கும் பூக்களில் உங்கள் 'புன்னகை'
எவனடா சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று?

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!

இப்போது கொஞ்ச நாளாய் எங்கள் வானம் கறுத்துக்கிடக்கிறது.
எப்போதும் இல்லாமல் 'வெயில்' கொளுத்தித்தியும் எறியுது.
ஏறுக்குமாறாய் ஏதேதோ நடக்கிறது..!
எவருக்குமே விளங்கவில்லை..!
எங்கள் தேசம் எப்போதும் சுமக்காத 'சிலுவை' சுமக்கிறது..!
எங்கள் சனமும் எப்போதும் சுமக்காத 'வலி' சுமக்கிறது..!
எதிரி எம்மண் ஏறி ஏறி வந்து 'எல்லாம்' முடிந்த்தாய்
எக்காளம் போட்டு 'இறுமாப்பு' காட்டுகிறான்.

கண்மணிகளே..!
கல்லறை வந்து உமைக்கட்டித்தழுவி-எங்கள்
கவலைகள் சொல்லி கண்ணீர் வடிக்கிறோம்
என்ன நடக்கிறது எங்கள் தேசத்தில் இன்று?
எவனுக்குமே விளங்கவில்லை..!
யார் சொன்னது?
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகளே உமக்குத்தெரியும்.!
காற்றோடு கலந்திருக்கும் கருவேங்கைகளுக்குத்தெரியும்.!
காலம் கனியகாத்திருக்கும் 'கரிகாலனுக்கும்' தெரியும்.!

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா..!

மூன்று சாகாப்தமாய் தேசத்தாய் 'விடுதலைக்கரு' சுமக்கிறாள்
எப்போது வேண்டுமானாலும் 'விடுதலைக்குழந்தை' பிறக்காலாம்
இது கார்த்திகை மாதம்.! பெரும்பாலும் விடுதலைக்கு 'பேறுகாலம்'.!
நம்பிக்கை இல்லாதவன் நாற்பதடி தள்ளி நில்லு
நாளை பிறக்கும் நம் தேசத்தில்
நம்பிக்கை இல்லாதவனுக்கு இடமே இல்லை.!

'முடியும்' என நினைத்தால் மூன்று யுகங்களானாலும் காத்துக்கிடக்கலாம்
விதைத்து முடிந்ததும் 'அறுவடை' கிடைக்காது.
விடிந்து எழுந்ததும் 'கனவு' பலிக்காது.
விடுதலை என்பது 'உயிர்விலை' கொடுத்துப்பெறுவது.
விடுதலை என்பது 'நீண்ட நெருப்பாறு'
கடக்கும்போது கால் சுடலாம்.! தடக்கியும் விழலாம்.!
விழுவது என்பது வெட்கமல்ல.!
விழுந்து கிடப்பதுதான் வெட்கம்.!
எழுவது பெரிதல்ல.!
எழுந்து அடிப்பதுதான் பெரிது.!
உயிர்களை விதைத்துவிட்டு உலைவைத்து காத்திருக்கிறோம்
எங்கள் வானம் திறந்து மழை பொழியும்.!
எங்கள் வயல் செழிக்கும்.!
காய்ந்து கிடக்கும் எங்கள் 'பூவரசு' பூப்பூக்கும்.!
நம்பு உன்னை நம்பு
உன் தேசத்தை நம்பு
தேசத்தின் புயல்களை நம்பு
அண்ணனை நம்பு அவன் நெஞ்சினில் எரியும் நெருப்பினை நம்பு.!
எவ்வளவோ செய்த அவன் இனியும் செய்வான் என நம்பு.!
எத்தனை 'வலி' சுமந்தோம்?
எத்தனை 'உயிர்' கொடுத்தோம்?
எல்லாமே வீண்தானா?
இல்லை
கல்லறைகளுக்குள் தமிழனின் 'கனவுகள்' கருக்கொண்டு கிடக்கின்றன.!
சிந்திய குருதியின் சூடு தணியாமல் கிடக்கிறது.!
மனங்களில் மாறாத வடுக்கள் கிடக்கிறது.!
நாம் செய்வது வேள்வி-தியாகவேள்வி- நீண்ட வேள்வி.!
முடிவதற்கு மாதங்கள் ஆகலாம்.! வருடங்களும் ஆகலாம்.!
ஆனால்
தமிழன் செய்த வேள்வி வீணானதில்லை-அதைச்
சரித்திரம் சொல்கிறது.

இது கார்திகைமாதம்..!
கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்
கல்லறைகள் பூப்பூக்கும் மாதம்
களமாடி வெல்லும் மாதம்

கட்டுக்கதைகளையும் கற்பனைகளையும் எண்ணி காலம் கழிக்காதே.!
பூநகரி என்ன புதுக்குடியிருப்பையும் சேர்த்துப்பிடிக்கட்டும்
புலியின் 'குணம்' அறிந்தவனுக்கு 'புதிர்' புரியும்.!!!
நீ
கார்த்திகை பூ எடுத்து வா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போ..!

27.11.2008




\



00000000000000000000

2."வன்னி வளையாது..!!!"
------------------------------------

"வடக்கில" ஆயத்தம் "பலமா" நடக்குது.
"கிழக்கில" கெதியா "வெளிக்கப்"போகுது.

என்ன செய்யுறாங்கள் "உவங்கள்" இவ்வவளவு நாளா? எண்டவையும்,
"இரண்டா" உடைஞ்சிட்டினம் எண்டு"இளக்காரம்" பேசினவையும்,
கட்டுநாயக்காவில பறக்கும்புலி "வாணவேடிக்கை"வரிசையாக காட்ட வாயடைச்சுப்போனவை.

கிழக்கிலையும் மன்னாரிலையும் "பூச்சாண்டி" காட்டினவைஇவன்னியுக்கிள்ள வந்தும் "வாலாட்ட" போகினமாம்.
"வீரம்" அங்கதான் "விளைஞ்சு" கிடக்கென்ற விபரம் அறியாமல்,
"வீராப்பு" காட்டுறார் வீணாப்போன "கோதபய".

"எவன்" வந்தாலும் எதிர்த்து நிற்க ஏரம்பு அப்புவின்ர கையிலயும் "ஏ.கே47”
என்ன "நடக்குது" என்டு எவனுக்கும் விளங்காது.
"எது" வந்தாலும் "மிச்சம்" இருக்காது.

"உரிமைப்போர்" இனி "உச்சக்கட்டம்"
"எச்சில் கூட்டம்" எல்லாம் இனி "தப்பிஓட்டம்".
"மறத்தமிழன்" எல்லோரும் இனி "மக்கள் படை".
"சுய மானம்" ஒன்றுதான் எங்கள் "அடிப்படை".

"உலகத்துக்கு" இப்பதான் "உண்மை" விளங்குது.
"பயங்கரவாதம்" எண்ட பதத்துக்கு "அர்த்தம்" துலங்குது.
கண்காணிப்பு குழு "கண்கள்" திறக்குது.
கவலைப்பட்டு "அறிக்கையும்" விடுகுது.

"விடுதலை" ஒன்றும் "விலைப்பொருள்" இல்லை.
"விரும்பினவன்" எல்லாம் "விலைபேசி" விற்க.

"சுயநிர்ணயம்" தமிழன்ர "சுய கெளரவம்".
"சுந்தர தமிழ்" எங்கள் சுட்டும் "விழிகள்".

தமிழன்ர "தலைவிதி"யை "தறுதலைகள்" தீர்மானிக்க,
"தலைவர்" பார்த்து "சும்மா" இருப்பாரோ?
விடுதலை களத்தினிலே "விதையான வேங்கைகளின்"
நினைவோடு "வேள்வித்தீ" எரித்து "முடிவு" உரைத்திடுவார்.


26.11.2007

பொடியனின் வலி




1."முடிப்பேன்"
--------------------

துன்பங்கள் எனும் தூண்டிலில் மாட்டி தவிக்கிறது-வாழ்வு
அடி மேல் அடியாக இடி மேல் இடியாக தினம் தினம்- சோதனைகள்

வேதனையின் விளிம்புகளை விரக்தியின் சிகரங்களை தொட்டுப்பார்த்தாச்சு
வாழ்தலின் சவால்களை எல்லாம் சந்திச்சு கன நாள் ஆச்சு....

புழுவாய் பார்த்தவர்கள் என்னை பார்த்து புன்னகை புரியவும்
என் விலாசம் கேட்டு விசாரிக்கவும் நிமிர்ந்து நிற்கிறேன் - ஆனாலும்
இன்னும் ஓடும் நதியாய் தான் என் வாழ்தல்.

இலட்சியங்களை அகலமாக்கியதால் -இன்றும்
ஓடிக்கொண்டிருகிறது எனது கால்கள்

வாழ்தலின் மொத்த சந்தோசங்களையும் முழுதாய் உணர்ந்தவன் - இன்று
சின்ன சின்ன சந்தோசங்களையும் தொலைத்துவிட்டவன்.

விழுவதும் பின் எழுவதும் எனக்கு வேடிக்கை விளையாட்டு
கண்ணீர் என் வாழ்வில் கானல் நீர்
அழுது ஆண்டுகள் ஆச்சு.

விரக்தியின் விளிம்பில் நிண்டு விண்ணை தொடும்
கனவுகள் கண்டவன்
பல முடிவுரைகளின் பிறகுதான் அறிமுகவுரையே எழுதியவன்.

தோல்விகள் என்னை காதலித்ததால்
வெற்றிகள் எனக்கு வில்லன்கள் ஆனது.

விடியும் திசையில் தான் என் பயணம்- விரைவில்
முடிக்கும் வரைக்கும் இல்லை உறக்கம்.

வெடிக்கும் கனலாய் கருகுது மனது
உயிர் துடிப்பு இருக்கும் வரைக்கும் ஓயாது- எனக்குள்
இருக்கும் "முடிப்பேன்" எனும் நெருப்பு.

தமிழ்பொடியன்
24.03.2008
0000000000000










குழப்பம்...???
---------------------




மிகத்தெளிவாகத்தான் இருக்கிறேன்- ஆனால்
குழப்பங்களுக்கு நடுவில் இருக்கிறேன்.


ஆயிரம் கேள்விகள் என்னை துரத்துகின்றன, ஓடிக்கொண்டிருக்கிறேன் பதில்களை நோக்கி...!!!
சில பதில்களும் கேள்விகள் ஆக மாறி குழப்புகின்றன..!!!!


எது சரி? எது பிழை?
நேற்று பிழைகள் என்று தெரிந்தவை இன்று சரியாகலாம்.
இன்று சரியானவை என்று சொன்னவை நாளை பிழையாகலாம்.


சரியான வழிகளில் சென்றால் சில சமயம் பிழையான இடங்கள் வருகிறது.
பிழையான பாதைகள் சில சிலநேரம் சரியான இடங்களுக்கு மாற்றுவழிகளாகிறது.

ஆரம்பத்தில் அருகில் இருப்பது முடிவில் தொலைந்துபோகிறது.
தொலைந்ததை தேடி வந்தால் மீண்டும் "ஆரம்பம்" தெரிகிறது.
முடிவை காணமுடியவில்லையெனில் ஆரம்பத்தில் பிழை என்கிறார்கள்
ஆனால் ஆரம்பத்தில் பிழையானது முடிவில் சரியாக ஆகியிருக்கிறது.



"மாற்றங்கள்" வேணும் எனில் இருப்பவை எங்கே போவது?
இப்போது இருப்பதோடு சேர்ந்து மாறுதல் வந்தால் முழுமையான மாற்றம் ஆகுமா?


மாற்றம் வேண்டும் மனதுகளிலும் சிந்தனைகளிலும் மட்டுமே
மனிதர்களில் அல்ல....!!!


மனிதர்களை மாற்றினால் மனங்கள் மாறலாம்-மாறாக
மாற்றங்கள் சில வேளைகளில் மட்டுமே நிகழும்.


உதயத்தினை தேடி ஓடிக்கொண்டிருக்கும் போது
முடிவில் மேற்குவானம் தெரிகிறது.
காரணம் உலகம் உருண்டை என்கிறார்கள்.


மேற்கு வானில் விழுவது கிழக்கில் எழும்.
எழுவதும் விழுவதும் விழுந்துஎழுவதும் எழுந்துவிழுவதும் இயற்கை
எழுந்து கொண்டே போவது ஆச்சரியம்
விழுந்து கொண்டே கிடப்பது அவமானம்
தெளிவாக இருப்பது குழம்புவதும்
குழம்பியது பின் தெளிவதும் இயற்கை



தெளிவாக இருந்தபின் குழம்புவதும் தப்பு..!!
தெளிவாக இருப்பவர்களை குழப்புவதும் தப்பு..!!



இறந்தகாலம் நிகழ்காலத்தின் வழிகாட்டி
நிகழ்காலம் எதிர்காலத்தின் தீர்க்கதரிசனம்

எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமெனில் நிகழ்காலம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும்
இறந்தகாலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.



"விடிவுகள்" பிறக்கவேண்டுமெனில் விரைவினில் "முடிவுகள்" கருத்தரிக்கவேண்டும்.
தெளிவுகள் வேண்டுமெனில் விரைவினில் குழப்பங்கள் கூண்டோடு கொழுத்தப்படவேண்டும்.



எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்
"ஒற்றுமை" அனாதையாக அழுகிறது.



ஒற்றுமையாக ஓடவேண்டும்
குறுக்கு வழியில் அல்ல.


கேள்விகள் படையெடுக்கும் போது பதில்கள் சமாதானம் ஆகத்தான் வேண்டும்.
பதில்கள் சமாதானம் ஆனபின் கேள்விகளுக்கு வேலையே இல்லை.


பொதுவாக கேள்விகளின் கீழே தான் பதில்கள் இருக்கவேண்டும்.
இப்போது பதில்களுக்கு கேள்விகள் எழுதப்படுகிறது.


சில கேள்விகளுக்கு பதில் யாராலும் சொல்ல முடியாது
அந்த கேள்விகளிடம் மாத்திரமே பதில் இருக்கும்.


-தமிழ்ப்பொடியன்-
19.06.2006



-
குறிப்பு:இது என் கிறுக்கல்.புரிவது கடினம்.சில கிறுக்கல்கள் கிறுக்கியவனுக்கே புரியும்.
அன்புடன்
பொடியன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=60526

செவ்வாய், ஜூலை 14, 2009

மொத்த சனத்தொகையில் 1.5 வீதமானவர்கள் சிறைகளில்





இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் சுமார் 1.5 சத வீதமானோர் சிறைச்சாலைகளில் இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

“பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 25 சிறைச்சாலைகளில் 31 ஆயிரத்து 653 பேர் தற்போது வைக்கப்பட்டுள்ளார்கள். 260 பேர் மரண தண்டனைக் கைதிகள். 184 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகள்” என தெரிவித்துள்ள அவர் இந்தக் கைதிகளில் 541 பேர் தங்களுடைய தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


“இந்தக் கைதிகளின் வயதைப் பொறுத்த வரை 46 சத வீதமானோர் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 36.5 சதவீதமானோர் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள். 3.6 வீதமானோர் பொது இடங்களில் மது போதை குறித்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.


அதேநேரம், தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் 15,000 பேரின் விசாரணை அறிக்கைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதால் அவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறினார்

Comments System

Recent Posts Widget

Facebook Badge