ஞாயிறு, ஜூலை 26, 2009

பொடியனின் வலி




1."முடிப்பேன்"
--------------------

துன்பங்கள் எனும் தூண்டிலில் மாட்டி தவிக்கிறது-வாழ்வு
அடி மேல் அடியாக இடி மேல் இடியாக தினம் தினம்- சோதனைகள்

வேதனையின் விளிம்புகளை விரக்தியின் சிகரங்களை தொட்டுப்பார்த்தாச்சு
வாழ்தலின் சவால்களை எல்லாம் சந்திச்சு கன நாள் ஆச்சு....

புழுவாய் பார்த்தவர்கள் என்னை பார்த்து புன்னகை புரியவும்
என் விலாசம் கேட்டு விசாரிக்கவும் நிமிர்ந்து நிற்கிறேன் - ஆனாலும்
இன்னும் ஓடும் நதியாய் தான் என் வாழ்தல்.

இலட்சியங்களை அகலமாக்கியதால் -இன்றும்
ஓடிக்கொண்டிருகிறது எனது கால்கள்

வாழ்தலின் மொத்த சந்தோசங்களையும் முழுதாய் உணர்ந்தவன் - இன்று
சின்ன சின்ன சந்தோசங்களையும் தொலைத்துவிட்டவன்.

விழுவதும் பின் எழுவதும் எனக்கு வேடிக்கை விளையாட்டு
கண்ணீர் என் வாழ்வில் கானல் நீர்
அழுது ஆண்டுகள் ஆச்சு.

விரக்தியின் விளிம்பில் நிண்டு விண்ணை தொடும்
கனவுகள் கண்டவன்
பல முடிவுரைகளின் பிறகுதான் அறிமுகவுரையே எழுதியவன்.

தோல்விகள் என்னை காதலித்ததால்
வெற்றிகள் எனக்கு வில்லன்கள் ஆனது.

விடியும் திசையில் தான் என் பயணம்- விரைவில்
முடிக்கும் வரைக்கும் இல்லை உறக்கம்.

வெடிக்கும் கனலாய் கருகுது மனது
உயிர் துடிப்பு இருக்கும் வரைக்கும் ஓயாது- எனக்குள்
இருக்கும் "முடிப்பேன்" எனும் நெருப்பு.

தமிழ்பொடியன்
24.03.2008
0000000000000










குழப்பம்...???
---------------------




மிகத்தெளிவாகத்தான் இருக்கிறேன்- ஆனால்
குழப்பங்களுக்கு நடுவில் இருக்கிறேன்.


ஆயிரம் கேள்விகள் என்னை துரத்துகின்றன, ஓடிக்கொண்டிருக்கிறேன் பதில்களை நோக்கி...!!!
சில பதில்களும் கேள்விகள் ஆக மாறி குழப்புகின்றன..!!!!


எது சரி? எது பிழை?
நேற்று பிழைகள் என்று தெரிந்தவை இன்று சரியாகலாம்.
இன்று சரியானவை என்று சொன்னவை நாளை பிழையாகலாம்.


சரியான வழிகளில் சென்றால் சில சமயம் பிழையான இடங்கள் வருகிறது.
பிழையான பாதைகள் சில சிலநேரம் சரியான இடங்களுக்கு மாற்றுவழிகளாகிறது.

ஆரம்பத்தில் அருகில் இருப்பது முடிவில் தொலைந்துபோகிறது.
தொலைந்ததை தேடி வந்தால் மீண்டும் "ஆரம்பம்" தெரிகிறது.
முடிவை காணமுடியவில்லையெனில் ஆரம்பத்தில் பிழை என்கிறார்கள்
ஆனால் ஆரம்பத்தில் பிழையானது முடிவில் சரியாக ஆகியிருக்கிறது.



"மாற்றங்கள்" வேணும் எனில் இருப்பவை எங்கே போவது?
இப்போது இருப்பதோடு சேர்ந்து மாறுதல் வந்தால் முழுமையான மாற்றம் ஆகுமா?


மாற்றம் வேண்டும் மனதுகளிலும் சிந்தனைகளிலும் மட்டுமே
மனிதர்களில் அல்ல....!!!


மனிதர்களை மாற்றினால் மனங்கள் மாறலாம்-மாறாக
மாற்றங்கள் சில வேளைகளில் மட்டுமே நிகழும்.


உதயத்தினை தேடி ஓடிக்கொண்டிருக்கும் போது
முடிவில் மேற்குவானம் தெரிகிறது.
காரணம் உலகம் உருண்டை என்கிறார்கள்.


மேற்கு வானில் விழுவது கிழக்கில் எழும்.
எழுவதும் விழுவதும் விழுந்துஎழுவதும் எழுந்துவிழுவதும் இயற்கை
எழுந்து கொண்டே போவது ஆச்சரியம்
விழுந்து கொண்டே கிடப்பது அவமானம்
தெளிவாக இருப்பது குழம்புவதும்
குழம்பியது பின் தெளிவதும் இயற்கை



தெளிவாக இருந்தபின் குழம்புவதும் தப்பு..!!
தெளிவாக இருப்பவர்களை குழப்புவதும் தப்பு..!!



இறந்தகாலம் நிகழ்காலத்தின் வழிகாட்டி
நிகழ்காலம் எதிர்காலத்தின் தீர்க்கதரிசனம்

எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமெனில் நிகழ்காலம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும்
இறந்தகாலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.



"விடிவுகள்" பிறக்கவேண்டுமெனில் விரைவினில் "முடிவுகள்" கருத்தரிக்கவேண்டும்.
தெளிவுகள் வேண்டுமெனில் விரைவினில் குழப்பங்கள் கூண்டோடு கொழுத்தப்படவேண்டும்.



எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்
"ஒற்றுமை" அனாதையாக அழுகிறது.



ஒற்றுமையாக ஓடவேண்டும்
குறுக்கு வழியில் அல்ல.


கேள்விகள் படையெடுக்கும் போது பதில்கள் சமாதானம் ஆகத்தான் வேண்டும்.
பதில்கள் சமாதானம் ஆனபின் கேள்விகளுக்கு வேலையே இல்லை.


பொதுவாக கேள்விகளின் கீழே தான் பதில்கள் இருக்கவேண்டும்.
இப்போது பதில்களுக்கு கேள்விகள் எழுதப்படுகிறது.


சில கேள்விகளுக்கு பதில் யாராலும் சொல்ல முடியாது
அந்த கேள்விகளிடம் மாத்திரமே பதில் இருக்கும்.


-தமிழ்ப்பொடியன்-
19.06.2006



-
குறிப்பு:இது என் கிறுக்கல்.புரிவது கடினம்.சில கிறுக்கல்கள் கிறுக்கியவனுக்கே புரியும்.
அன்புடன்
பொடியன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=60526

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge