சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வேலைதேடும் பட்டதாரிகளின் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ,யுவதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதை காணமுடிகிறது.இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதை கொஞ்சம் விவரமாக ஆராய்வதே இந்த பத்தியின் நோக்கம்.
குறிப்பாக யாழ்மாவட்டத்தில் பல பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் படிப்பினை முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சூழ்நிலையிலேயே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படித்த படிப்புக்கு வேலை அல்லது வாழ்க்கை செலவீனங்களை சமாளிப்பதற்கான வேலை கிடைக்காத பட்சத்திலேயே அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள்.

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை ! என்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல உலகில் எங்குமே படித்த படிப்புக்கு வேலை என்பது இலகுவான விடயம் அல்ல.அதற்காக நிறைய தடைகளை தாண்டி பல வருடங்களை கடந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.இந்த முயற்சியில் தோல்வி அடைந்தவர்களோ அல்லது சலிப்பு அடைந்தவர்களோ அடுத்த கட்ட முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
அடுத்த கட்டம் என்ன?
குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது வாழ்க்கை செலவீனங்களை நிவர்த்தி செய்யவோ அவர்கள் ஒரு வேலையை தேடவேண்டிய நிலை உருவாகும். அது அவர்களின் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லையென்ற போதும், அந்த வேலையை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அப்படி அந்த வேலையில் அரைமனதோடு சேர்ந்த பலர்; பின்னர் அதில் முழு ஈடுபாட்டுடன் வேலைசெய்து நல்ல நிலையை அடைந்தும் உள்ளார்கள். இன்னும் ஒரு சிலர் தங்களின் சுய தொழிலில் ஈடுபட்டு ஓரளவுக்கு நிதியை சேகரித்துவிட்டு அந்த நிதியை முதலீடு செய்து நல்ல வேலையை பெற்றும் உள்ளார்கள்.இன்னும் ஒரு சிலர் குறுக்குவழிகளில் “நல்ல” வேலையை பெற்று தங்களின் வாழ்வை முன்னேற்றியும் உள்ளார்கள். இன்னும் ஒரு சிலர் வேலை தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இந்த வேலையில்லாப்பிரச்சினை ஏன் இப்போது வந்தது?
யாழ்ப்பாணத்தில் படித்து முடித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை வருடாவருடம் கூடிக்கொண்டே போகிறது.யாழ் மாவட்டத்தில் இதற்குமுன்னரும் படித்து முடிந்த பட்டதாரிகளுக்கான வேலைநியமனங்களில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான பட்டதாரிகள் ஒரு சில வருடங்களுக்குள் ஒரு வேலையை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது.
ஆகக்குறைந்தது அரச அலுவலங்களிலோ அல்லது பாடசாலைகளிலோ அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.
ஆகக்குறைந்தது அரச அலுவலங்களிலோ அல்லது பாடசாலைகளிலோ அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் உண்மையில் “வேலைகள்” இல்லையா?
2009 இக்கு முற்பட்ட காலத்தில் யாழ்குடாநாட்டில் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும் வேலைவாய்ப்பின் அளவும் மிக மிக குறைவாகவே காணப்பட்டது.ஏனெனில் அந்தக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தயங்கினார்கள். ஆனால் 2009 இக்குப்பின்னர் தனியார் நிறுவனங்களும் வெளிநாட்டு விறுவனங்களும் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள்.அதன்பின்னர் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை யாழ்குடாநாட்டு இளைஞர்கள்,யுவதிகள் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் பெருமாலும் தனியார் நிறுவனங்களில் நியமனம் பெற்றுக்கொண்ட பெரும்பாலானோர் “சிபார்சின்” அடிப்படையிலும் “லஞ்சம்” கொடுத்துமே வேலைக்கு சேர்ந்தார்கள் என்பது கசப்பான உண்மை. திறமையின் அடிப்படையிலும் படித்த படிப்பின் அடிப்படையிலும் வேலையை பெற்றுக்கொண்டவர்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவே.
ஆனால் தற்போது யாழ்குடாநாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு கூடியுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.காரணம் போரின் பின்னரான இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் யாழ்குடாநாட்டில் முதலீடுகள் பெரும் லாபத்தை தருகின்றன. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட இலங்கையில் யாழ்குடாநாட்டையே குறிவைத்து தங்களின் வியாபாரங்களை விஸ்தரிக்கிறார்கள்.
வேலைவாய்ப்புகள் அதிகமாக காணப்படும் இந்த நிலையில்; எதற்காக வேலைதேடும் பட்டதாரிகள் தங்களுக்கு வேலையில்லையென வீதியில் இறங்கி போராடுகிறார்கள்? என்ற ஒரு சாமானியனின் கேள்விக்கு பதில் தரவேண்டிய பொறுப்பு அரசுக்கும் மாகாணசபைக்கும் இருக்கிறது.
பொறுப்புக்கூறல் என்ற சிக்கலான விடயத்துக்குள் கால்வைக்க முன்னர் முக்கியமான அடுத்த கேள்விக்கு செல்வோம்

யாருக்கு வேலையில்லா பிரச்சினை?
யாழ்ப்பாணத்தில் கல்வி கற்ற எந்திரவியல்,மருத்துவவியல் மாணவர்கள் இலகுவில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டார்கள்.
இலங்கைமுழுவதும் பெரும்பாலான எந்திரவியல்,மருத்துவவியல் பட்டதாரிகள் இலகுவில் வேலையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் தகுதியான படித்த படிப்புக்கு வேலை கிடைத்துவிட்டதா? என்று கேட்கும் போது “இல்லை” என்றுதான் கூறவேண்டும். ஆனால் மற்ற பட்டதாரி மாணவர்களோடு ஒப்பிடும் போது 90% ஆனவர்களுக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது என்பதே உண்மை.
யாழ்ப்பாணத்திலும் பிற மாவட்டங்களிலும் தமிழ் மொழி மூலம் கற்ற வணிகபீட மற்றும் கலைப்பீட பட்டதாரிகளுக்கான “படிச்ச படிச்ச படிப்புக்கான” வேலை கிடைப்பது மிகவும் கஸ்ரமாக உள்ளது. அதுவும் அரச உத்தியோகத்தை முக்கியமாக குறிவைக்கும் இவர்களுக்கு “வேலை” கிடைப்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது.
(அதற்காக வணிக மற்றும் கலைப்பிட படிப்புகள் குறைவானது என்றோ வேலைஎடுக்கிறது கஸ்ரம் என்றோ தவறான கருத்துருவாக்கத்தினை யாரும் செய்யக்கூடாது)
சம்பளம் குறைவெண்டாலும் “அரச வேலை”தான் செய்யவேண்டும் என்ற “சமுதாய மனநிலை” இன்னும் யாழ்குடாநாட்டில் மாறவேயில்லை. இந்த மனநிலையின் தாக்கம் அவர்களின் “கலியாண” வாழ்வில் கூட முக்கிய பங்குவகிக்கிறதை கண்கூடாக காணமுடிகிறது.
இன்னொருபுறத்தில்; கவர்ச்சியான சம்பளங்களுடன் குளிரூட்டிய அறைகளில் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் அவர்களின் உறவினர்கள்,நண்பர்களின் வாழ்க்கை முறையை பார்க்கும் போது ஒருவித “மனவிரக்திக்கும்” ஆளாகுறார்கள்.

குடும்பதொழிலையோ அல்லது சுய தொழிலையோ அவர்களுக்கான ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை செய்யும் அளவுக்கு அவர்கள் எல்லோரும் தயாராகவில்லை.மேலும் அந்த வேலைகளை செய்துகொண்டே இன்னொரு வேலையை தேடுவதில் உள்ள “மன உளைச்சலை” தாங்கும் சக்தியும் எவருக்கும் இல்லை.
வேலைதேடும் பட்டதாரி மாணவர்கள் மட்டுமல்ல; யாழ்ப்பாணத்தில் பல ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. உயர்தரத்தில் நல்ல முறையில் தேர்வாகி பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகாத மாணவர்கள் ஆயிரக்கணக்கில் யாழ்குடாநாட்டில் உள்ளார்கள். அவர்களும் “வேலைதேடும் இளைஞர்கள்” தான். அவர்களும் கூட “வேலையில்லா பிரச்சினையின்” அங்கத்தவர்களே.
வீதியில் இறங்கமுதல் பட்டதாரிகள் செய்திருக்கவேண்டியவை:
1.யார் யார் என்ன படித்துள்ளார்கள்?
எவ்வளவு காலம் வேலை தேடுகிறார்கள்?
எத்தனை வேலைகளுக்கு விண்ணப்பம் செய்தார்கள்?
எத்தனைதரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன?
வேலைதேடி விண்ணப்பித்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் விபரங்கள்.
வேலைதேடி விண்ணப்பித்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் விபரங்கள்.
வேலைதேடும் பட்டதாரிகளின் சுயவிபரக்கோவைகள்.
வேலைதேடும் பட்டதாரிகளின் நியாமான கோரிக்கைகள்.
வேலைவாய்ப்பை உருவாக்க அவர்களின் ஆலோசனைகள் அல்லது உகந்த திட்டங்கள்.
இவை எல்லாம் அடங்கிய ஒரு “தகவல் திரட்டை” அவர்கள் செய்து முடித்திருக்கவேண்டும்.
வேலைதேடும் பட்டதாரிகள் அனைவருக்கும் இடையில் ஓரளவுக்கேனும் ஒரு “பிணைப்பும் இணைப்பும்” இருக்கவேண்டும்.
2.வேலைதேடும் பட்டதாரிகள் முதலில் தங்களின் கோரிக்கைகளை வடக்கு மாகாணசபைக்கு அனுப்பவேண்டும்.
நியாயமான கோரிக்கைகளை ஒரு குறித்த கால அவகாசத்துக்குள் அவர்கள் பரிசீலிக்க தவறிய பட்சத்தில்;
3. ஆளுநருக்கு தங்களின் கோரிக்கையை நேரடியாக தெரிவித்திருக்கவேண்டும்.

அங்கேயும் அவர்களுக்கான நம்பிக்கை தரக்கூடிய பதில் ஒரு குறித்த கால அவகாசத்துக்குள் வழங்கப்படாத பட்சத்தில்;
4.யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களிடம் தங்களின் கோரிக்கையை முன்வைத்திருக்கவேண்டும்.
4.யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களிடம் தங்களின் கோரிக்கையை முன்வைத்திருக்கவேண்டும்.
அவர்களும் ஒரு நம்பிக்கை தரும் பதிலையோ அல்லது நடவடிக்கையையோ குறித்த போதிய கால அவகாசத்துக்குள் தராதபட்சத்தில்;
5.ஜனாதிபதிக்கு தங்களின் கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது கடிதமூலமாகவோ தெரிவித்திருக்கவேண்டும்.
அதற்கும் உரிய பதிலோ அல்லது நடவடிக்கையோ கிடைக்காத பட்சத்தில் ;
அதற்கும் உரிய பதிலோ அல்லது நடவடிக்கையோ கிடைக்காத பட்சத்தில் ;
6.ஒரு ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை ஆரம்பிக்கப்போகிறோம் என்ற ஒரு ஊடக அறிவிப்பை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.
மேற்கூறிய ஆறு முக்கியமான விடயங்கள் அனைத்தையும் செய்யவேண்டும்.அவற்றில் ஒன்றையேனும் செய்யத்தவறியிருக்கும் பட்சத்தில் அவர்கள் “வீதியில் இறங்கி” சும்மா போராட்டம் நடாத்தமுடியாது.அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லையென்றே கொள்ளப்படவேண்டும்.
ஆனால்;
மேற்கூறிய விடயங்கள் அனைத்தையும் அவர்கள் செய்தபின்னரும் அவர்களுக்கான “நீதி” கிடைக்கவில்லையெனும் கையறு நிலையிலேயே அவர்கள் தங்களின் போராட்டத்தை தொடங்கினார்கள் எனும் ஒரு எடுகோளுடன் அடுத்த விடயங்களுக்குச்செல்வோம்.

வேலைதேடும் பட்டதாரிகளின் போராட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?
போராட்டம் ஆரம்பமாகி ஒரு சில நாட்களுக்குள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அரசியல்வாதிகளின் “பிரசன்னத்தை” காணக்கூடியதாகவிருந்தது. அதிலும் குறிப்பாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. சரவணபவன் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியது.
வடக்கு மாகாணசபைக்கு எதிராகவும் கெளவர முதலமைச்சர் திரு. விக்கினேஸ்வரனை நேரடியாக குறிவைத்தும் எதிர்ப்பு பதாகைகள் காணப்பட்டன.
வடக்கு மாகாணசபையினால் ஒரு கணிசமான அளவு வெற்றிடங்களை நிரப்பும் வளமும் வசதியும் இருந்தும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வேலைதேடும் பட்டதாரிகள் அலைக்கழிக்கப்படுவது வேதனையான விடயம்.
ஒரு காத்திரமான திட்டம் ஒன்றை “”வேலைதேடும் பட்டதாரிகளுக்காக" குறிப்பாக வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சும் பிற அமைச்சுகளும் செயற்படுத்தவில்லை என்ற நேரடியான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. இதற்கான ஒட்டுமொத்த பொறுப்புக்கூறலை கெளரவ முதலமைச்சர் திரு. விக்கினேஸ்வரன் அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன் பின்னணியினை ஆழமாக ஆராய்வதை இந்த இடத்தில் நிறுத்திக்கொள்வதே நல்லது. ஏனெனில் எந்த ஒரு மக்கள் போராட்டத்தையும அரசியல் பின்னணியோ அல்லது குறைந்தபட்சம் மறைமுக ஆதரவோ இல்லாமல் செய்யமுடியாது என்பது யதார்த்தம். ஆனால் அரசியல் சுய இலாபங்களுக்காக உண்மையான மக்களின் போராட்டங்கள் பல வழிமாறிப்போன பல கசப்பான கடந்த கால அனுபவங்கள் பல இருந்தும் ஏன் ஒரு அரசியல் கலப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்? என்ற கசப்பான சாமனியனின் கேள்விக்கு அவர்களிடம் பதில் இருக்காது என்றே நினைக்கிறேன்.

அரசியல்வாதிகளால் பேசியும் தீர்க்கமுடியாத ஒரு விடயத்துக்காக “நீதி” கோரியே அவர்கள் வீதியில் இறங்கினார்கள் என்ற கசப்பான உண்மையின் முகத்தை பார்க்கும் போது கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சரவணபவனுக்கு வெட்கம் வந்திருக்கவேண்டும். ஆனால் அந்த “நியாயமான வெட்கம்” அவருக்கு வந்ததாக தெரியவில்லை.
மேலும் அவர் நடாத்தும் பத்திரிகை கூட வேலைதேடும் பட்டதாரிகளின் “வேலை வாய்ப்புகளுக்காக” காத்திரமான முறையில் பங்காற்றியிருக்கமுடியும். அது எத்தகைய பங்களிப்பாக இருக்கவேண்டும் என்பதை பற்றிய தெளிவான விளக்கத்தை தரமுடியும். ஆனால் அதற்கான பத்தி இதுவல்ல என்பதால் அடுத்த விடயத்துக்கு வருவோம்.
வேலைதேடும் பட்டதாரிகளுக்கு முன்வைக்கப்படும் கேள்விகள்:
சமூக வலைத்தளங்களிலும் பிற ஊடகங்களிலும் பல்வேறான ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பல வாதபிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.அவற்றில் சில முக்கியமான கேள்விகளை இங்கே பார்ப்போம்.
1.வேலைதேடும் முயற்சியில் நீங்கள் எவ்வளவு உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் செயற்படுகிறீர்கள்?
2.உங்களிடம் முறையான வேலைதேடும் திட்டம் எதுவும் உள்ளதா?
3.சுயதொழில் முயற்சியில் உங்களின் “படிச்ச படிப்பை” வைத்து முன்னேற வாய்ப்புகள் இருக்கிறதா? என ஆராய்ந்தீர்களா?
4.எல்லோரும் ஒன்றுசேர்ந்தோ அல்லது குழுக்களாகவோ ஒருங்கிணைந்து “வேலைவாய்ப்புக்களை தரும்” திட்டங்களை வகுத்துவைத்துள்ளீர்களா?
5.உங்கள் யாரிடமாவது குறைந்தது 50பேருக்கு யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு இடங்களிலோ வேலைகிடைக்கும் அளவுக்கு ஒரு “அபிவிருத்தி திட்ட வரைபு” உள்ளதா?
6.அரச வேலைதான் உங்களின் முக்கியமான கோரிக்கையா? அல்லது ஏதோ ஒரு இடத்தில் நிலையான வேலையா?
7.தனியார் நிறுவனங்களில் வேலைகிடைத்த பலர் அந்த வேலைகளை ஒழுங்காக செய்யாமல் அதைவிட்டுவிட்டு; அரச வேலை தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதில் எந்தளவு உண்மை இருக்கிறது?
8.வேலைதேடுவோருக்கான அரச மர்றும் தனியார் வலையமைப்புகளில் எத்தனைபேர் உங்களின் பெயர்களினையும் சுயவிபரக்கோவையினையும் பதிந்துவைத்துள்ளீர்கள்?
9.வேலைதேடுவோருக்கான ஒரு தனியான வலைஅமைப்பு உங்களிடம் இருக்கிறதா? இல்லையெனில் அதை ஏன் செய்யவில்லை?
10.உங்களில் எத்தனைபேர் சுயதொழிலில் அல்லது குடும்பத்தொழிலில் ஈடுபடுகிறீர்கள்?
11.உங்களில் எத்தனைபேர் “வேலைவாய்ப்பை அதிகரிக்கும்” மேற்படிப்புகளை தொடர்கிறீர்கள்?
12.உங்களில் எத்தனைபேர் “தன்னார்வ தொண்டர்களாக” வேலை செய்கிறீர்கள்?
இந்தக்கேள்விகளுக்கான விடைகளை “வேலைதேடும் பட்டதாரிகளின்” நியாயமான சிந்தனைக்கு விட்டுவிடுவோம்.
வேலையில்லாப்பிரச்சினை இலங்கையில் மட்டும் தான் உள்ளதா?
இந்தப்பிரச்சினை இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் மட்டும் அல்ல அவுஸ்திரேலியா,ஐரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் கணிசமான அளவு உள்ளது. அவுஸ்திரேலியாவில் வேலையில்லாப்பிரச்சினை என்பது இப்போது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதை அந்த நாட்டு அரசும் வேலைதேடுவோரும் எப்படி எதிர்நோக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
(இலங்கையின் நிலமைகளை அவுஸ்திரேலியாவுடன் ஒப்பிடமுடியாது என்றபோதும் கூட சில தீர்வுகள் என்பது பிரயோசனமாக இருக்கக்கூடும்)
(இலங்கையின் நிலமைகளை அவுஸ்திரேலியாவுடன் ஒப்பிடமுடியாது என்றபோதும் கூட சில தீர்வுகள் என்பது பிரயோசனமாக இருக்கக்கூடும்)
வேலைதேடுவோருக்கு அவர்களுக்கான ஒரு வேலை கிடைக்கும்வரை அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு ஒரு உதவி தொகை வழங்குகிறது. அந்த உதவித்தொகை மாதா மாதம் வழங்கப்படும்.ஆனால் வேலைதேடுவோர் வாராவாரம் குறைந்தது ஐந்து இடத்தில் வேலைதேடிய ஆதாரத்தினை சமர்ப்பித்தாலோ அல்லது தகுந்த காரணங்களை ஊறினாலோ மட்டுமே உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
வேலைதேடுவோருக்கான “வேலைவாய்ப்பு கற்கைநெறிகள்” அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.
வேலைதேடுவோருக்கான “வேலைவாய்ப்பு கற்கைநெறிகள்” அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு மையங்கள் பல அரசாலும் தனியாராலும் நடத்தப்படுகின்றன.
சுயதொழில் வேலைவாய்ப்புக்காக கடனுதவிகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
தன்னார்வ வேலைகளில் பலர் ஈடுபடுத்தப்பட்டு அதன் மூலம் “வேலைசெய்யும் தகுதி” அதிகரிக்கப்படுகின்றன.
எனவே மேற்கூறிய காத்திரமான ஆலோசனைகளை இலங்கையிலும் பின்பற்றவோ அல்லது அங்கே இருக்கும் “வேலை தேடும் பொறிமுறையை” மறுசீராய்வு செய்யவோ இலங்கை அரசும் வேலைதேடுவோரும் முன்வரவேண்டும்.
இறுதியாக;
எல்லாவர்றுக்கும் வீதியில் இறங்கித்தான் போராடவேண்டும் என்ற மனநிலையில் இருந்து ஆக்கபூர்வமாக சிந்திப்பதன் மூலமும் கூட பல பிரச்சினைகளுக்கான “திர்வுகளை” பெற்றுக்கொள்ளமுடியும். தீர்வுகள் கிடைப்பதில் காலதாமம் ஏற்படும் போது உண்டாகும் “மன உளைச்சலை” தவிர்க்க உறுதியுடன் தொடர்ந்தும் முயற்சிப்பது மிக அவசியம்.

ஒரு போராட்டத்தின் வெற்றி என்பது ஒட்டுமொத்த வேலைதேடும் பட்டதாரிகளுக்கும் கிடைக்கவேண்டும். அப்போதுதான் அது உண்மையான வெற்றியாகும்.
வேலைதேடும் பட்டதாரிகளின் போராட்டத்துக்கான “தீர்வு” என்பது வெறுமனே அவர்களின் நியமனகடிதங்களால் பெற்றுக்கொள்ளமுடியாது. அதற்கும் மேலாக ஒரு ஆக்கபூர்வமான “வேலைதேடும் பொறிமுறை” உடனடியாக அமைக்கபடவேண்டும். அதுவே இந்தப்போராட்டத்தின் “நிரந்தர தீர்வாக” அமையும்.
ஆக்கம்:தமிழ்ப்பொடியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக