மரணம்!
ஆண்டுத்திவசத்தோடு மறந்துவிடுகிறோம்
விபத்து!
காயத்துக்கு கட்டுப்போட்ட கையோடு மறந்துவிடுகிறோம்
இழப்பு!
நிவாரணம் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம்
தேர்தல்!
விரல் மை காயமுன் மறந்துவிடுகிறோம்
விடுதலை!
அற்ப சொற்ப சலுகைகள் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம்
தியாகம்!
நவம்பர் 27 இல் தீபங்கள் அணைத்ததும் மறந்துவிடுகிறோம்
ஒற்றுமை!
கூட்டம் முடித்து காரில் ஏறியதும் மறந்துவிடுகிறோம்
துரோகம்!
செய்தவனையே மறந்துவிடுகிறோம்
மறதி!!!
ஈழத்தமிழனுக்கு கிடைத்த
வரமும்...
சாபமும்...!!!
-தமிழ்ப்பொடியன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக