புதன், நவம்பர் 23, 2016

கடவுளே உனக்கு கண்ணில்லையா???


கடவுளுக்கும் கண்ணில்லையோ -அது
கல்லாகிப்போய் கன காலமோ!

குந்த ஒரு குடிநிலம் கேட்டது பிழையோ -அதுக்கு
தமிழீழம் எண்டு பெயரிட்டதுதான் தவறோ?

அடிச்சவனை திருப்பி அடிச்சால் குற்றமோ?-நாங்கள்
அழுதுகொண்டே செத்துபோவதுதான் விதியோ?

தமிழராய் பிறந்ததுதான் தவறோ?-தமிழன்
கேக்குறதுக்கு நாதியற்ற இனமோ?

இன்னும் எத்தின நாளுக்குதான் அழுவமோ?-இதை 
கேக்குறதுக்கு யாருமில்லா உலகமோ?

நாடு நாடாய் அலைவதுதான் கதியோ? அகதியாய்
செத்துப்போவதுதான் முடிவோ?

நீதி என்ன ஒரு நிறத்துக்கு மட்டுமோ? -அது 
தமிழருக்கு ஒரு நாளும் கிடைக்காதோ?

மனிதாபிமானம் செத்து கனகாலமோ? -அதை
குழிதோண்டிப்புதைத்தவர்கள் தான் பெரிய ஆக்களோ?

விடுதலை கேட்பது பயங்கரவாதமோ? -அதுக்கு
உயிர் கொடுத்து போராடுறவன் தீவிரவாதியோ?

முள்ளிவாய்க்காலோட எல்லாம் முடிஞ்சுபோட்டுதோ?-இல்லை
போராடிப்பெறுவதற்கு இன்னும் இருக்குதோ?

தனித்தனியா கத்திக்கொண்டு இருக்கப்போறமா? -இல்லை
கைகோத்துஒண்டா நடக்கப்போறமா?

ஊருக்குப் போறதுக்கா இத்தனை விலைகொடுத்தோம்? -எங்களின்
உரிமை கிடைக்க கனதூரம் போகவேணுமோ?

போராடிப்பெறுவதுதான் விடுதலையல்லவா? -அதை
சும்மா பெற்றால் அதுக்குப்பேர் பிச்சையில்லையா?????
கடவுளே உனக்கு கண்ணில்லையோ?-நீ
கல்லாகிப்போய் கனகாலமோ????


-தமிழ்ப்பொடியன்-
3 people like this

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge