புதன், நவம்பர் 23, 2016

நாங்களும் மனிசர்தான்!!!!






அண்ணாவை காணவில்லை என 
அழுதாள் "தங்கச்சி"
அவளும் காணாமல் போனாள்..!!!

என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என
கதறினாள் ஒரு "தாய்"
அவளும் காணாமல் போனாள்..!!!

இதயமே இல்லாத 
இரும்புமனிதர்கள் தேசத்தில்
கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய "குற்றம்"!

மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில்
விழி நீரின் "வலி" தெரியாது
அழுபவனுக்கு மரண "தண்டனை"!


நாக்குகள் அறுக்கப்படும் நரக பூமியில்
கேள்வி கேட்பவன் "தீவிரவாதி"

நீதியே இல்லாத "நிர்வாண" நாட்டில்
கோமணத்தோடு திரிபவன் "குற்றவாளி"!

கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால்
நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் "நரக தேசம்"!

விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம்
வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீருக்குப் பயம்!

இரத்தக்காட்டேறிகளின் தேசத்தில்
இரத்தமே "குடிபானம்"!-தமிழனின்
கண்ணீரே கறை கழுவும் தண்ணீர்!

என் அண்ணா எங்கே? என கேட்டவளும் இல்லை...
அவர்களை பெற்றவளும் இல்லை...

உலக மனிதாபிமான கனவான்களே!!!
மலேசியன் விமானத்தை தேடும்போது
இவர்களையும் கொஞ்சம் தேடுங்கள்....
ஏனெனில்.........
தமிழர்களும் "மனிதர்கள் தான்"!!!


-தமிழ்ப்பொடியன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge