ஞாயிறு, ஜூலை 02, 2017

Facebook vs Wife-சனிக்கிழமைசாமியார்



Facebook vs Wife
ரண்டும் ஒண்டுதான்!!
Account திறந்தால் மூட மனம் வராது.
Deactivate செய்த கனபேர் திரும்பவும் activate பண்ணியிருக்கினம்.
எல்லாரும் தன்ர தன்ர Facebook தான் "திறம்" எண்டுவினம்.
Facebook வைச்சிருக்கிறவனும் கலியாணம் கட்டினவனும் நிம்மதியா நித்திரை கொண்டதா சரித்திரமே இல்லை.
என்னதான் திருகுதாளம் விட்டாலும்..
நாங்கள் போற வாற இருக்கிற இடங்களை சிம்பிளா மனிசியும் கண்டுபிடிச்சிடுவாள்.
Facebook உம் காட்டிக்குடித்திடும்.
என்னதான் கன Fake id ரண்டு மூண்டு வைச்சிருந்தாலும் கடைசியா original ID இக்கு வரத்தான் வேணும்.
போனவரிசம் என்ன செய்தன்?
அதுக்கு முதல் என்ன செய்தன் எண்டு Facebook உம் மனிசியும் அடிக்கடி குத்திக்காட்டுவார்கள்.
Facebook இலையும் அடிக்கடி சண்டை; மனிசியோடையும் சண்டை.
வெல்லுவது குறைவு. தோற்பதே அதிகம். அதுவே பேரின்பம்!
மனிசி என்ன செய்தாலும் ;
Facebook இல என்ன எழுதினாலும் கண்ணை மூடிக்கொண்டு இரண்டுக்கும் "like" ஒண்டை போட்டியள் எண்டாத்தான் வாழ்க்கை சிறப்பா இருக்கும்.
Facebook ஓட சண்டை பிடிச்சுப்போட்டு "இனிமேல் இந்தப்பக்கம் வரமாட்டன்"எண்டு சொல்லிப்போட்டு வெக்கமே இல்லாமல் திரும்ப வாறதும்;
மனிசியோட சண்டை பிடிச்சுக்கொண்டு இந்த வாசல்ப்படி மிதிக்கமாட்டன் எண்டு சொல்லி "சூடு சுறணை இல்லாமல்" திரும்பவும் வந்து இருக்கிறதும் ஒண்டுதான்!!
(வயது வந்தவர்களுக்கு மட்டும்: விடியக்காலமை இரண்டையும் நோண்டாமல் விடியாது. இரவில நித்திரை வராது)
ஓம் பேஸ்புக்காயே நமக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge