ஞாயிறு, ஜூலை 02, 2017

"எல்லாப்புகழும் மனிசிக்கே!!!" -சனிக்கிழமைசாமியார்










🔱
🗣பொதுவாக சனிக்கிழமை சாமியார் ஏச்சு வாங்காத நாள் இல்லை.
கொடியில உடுப்பு போட்டனான் . எடுத்துவைச்சனியளே?👗


🚗Parking fine வந்திருக்கு. அடிச்சு கதைச்சனியளே?


🌿கருவேப்பிலை வாடுது. தண்ணி இறைச்சனியளோ?


👖மூண்டு நாளா மூலையுக்க கழட்டி எறிஞ்ச உடுப்புகள் நாறுது. தோய்ச்சனியளே?

🚓கார் vacuum பிடிக்கச்சொன்னன். பிடிச்சியளோ?

💵போனமாதம் என்னிட்ட வாங்கின 100$ ஐ என்ர account இக்கு மாத்திட்டியளோ?
புடுங்கித்தின்னிறதிலேயே குறியா இருங்கோ!

📵உதுகள் எல்லாத்தையும் விட்டிட்டு சும்மா "ரசனி, யாழ்ப்பாணம்,விக்கி,கடல்நீர்,சுமந்திரன்,சம்பந்தன்,மாவை" எண்டு பேஸ்புக்கில எந்தநேரமும் தொங்கிக்கொண்டிருக்கத்தான் தெரியும். அவனவன் வாழ்க்கையில எப்பிடி முன்னேறலாம் எண்டு ஜோசிச்சு எங்கையோ போய்க்கொண்டிருக்கிறாங்கள். 
உப்பிடியே உந்த போனுக்குள்ள கிடந்து நாசமாப்போங்கோ😡"

இப்படியாக பல "ஏச்சுகளை" தாண்டியே என் பதிவுகள் இந்த உலகின் வெளிச்சத்துக்கு வருகிறது என்பதை யார்தான் அறிவார்களோ?

🤧அப்படி கஸ்ரப்பட்டு துன்பப்பட்டு அவமானப்பட்டு எழுதும் பதிவுகளுக்கு நீங்கள் like போடாதபோது ;
அறையை பூட்டிப்போட்டு நான் கதறிக்கதறி அழுவதை நீங்கள் அறிய வாய்ப்பில்லைத்தான்!

இவ்வளவு கஸ்ரங்களை கடந்து எழுதும் பதிவுகளுக்கு like போட்டா குறைஞ்சே போடுவியள்?
நன்றி கெட்ட சனமப்பா 😢
இவை எல்லாவற்றுக்கும் மேலாக..
சனிக்கிழமை ஆனால் மட்டும்;
"என்ன சனிக்கிழமை சாமியாரை காணவில்லை?" எண்டு மனிசி கேக்கும் போது மட்டுமே நான் "பேரானந்தம்"அடைகிறேன்!

"ஆஸ்கார் விருது" கிடைத்தது போல!!!😝
பேசாமால் பேரை மாத்திடலாமோ எண்டு கூட "லூசுத்தனமா" யோசிப்பன்!

"நீங்கள் எலெக்சனில நிண்டால் நான் கூட ...வாக்குப்போடன்"எண்டு சொல்லும் என்ர மனிசி சனிக்கிழமை சாமியாரின் பதிவுக்கு like போடும் போது ...
ஏன் நான் எலெக்சன் கேக்கக்கூடாது எண்டு கூட "கேணைத்தனமா" ஜோசிப்பன்!

"எல்லாப்புகழும் மனிசிக்கே!!!" 😝

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge