"சிங்கள நண்பா” எனும் கவிதைக்கு பலவிதமான கருத்துக்கள் எல்லா ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்படுவதை காணமுடிகிறது.
முதலில் அதை எழுதியவன் என்ற அடிப்படியில் ஒரு சில கருத்துக்களை பகிரவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
இது வெறும் தன்னினலை விளக்கமோ அல்லது நியாயப்படுத்தலோ அல்ல என்பதை முதலில் பதிவு செய்கிறேன்.
இந்த கவிதை எழுதியதன் முதல் நோக்கம் என்னை நான் பிரபலப்படுத்துவதோ அல்லது முகப்புத்தகத்தில் அதிக விருப்புகளையும் பகிர்வுகளையும் பெறுவது அல்ல.
மேலும் முகம் தெரியாமல் என்னை ஒழித்து “புனைபெயரில்” எழுதப்பட்ட கவிதையும் அல்ல.
ஒரு சாதாரண தமிழனாக முப்பது வருட வலிகளை அனுபவித்தவனாக ,எனக்குள் ஆறாத வடுக்களாக இருக்கும் வலிகளை மொழிபெயர்த்துள்ளேன்.
இந்த கவிதையை எழுதும் போது ஒரு சிங்கள சகோதரனின் கைகளுக்காவது போய்ச்சேராதா என்ற ஆதங்கத்துடன் தான் எழுதினேன்.
ஆனால் இந்தக்கவிதை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கையின் சிங்கள ஊடகங்களில் வந்திருக்கிறது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
காரணம் சிங்கள ஊடகங்கள் எப்போதும் எங்களின் வலிகளை எப்போதுமே மொழிபெயர்த்தது இல்லை.
ஆனால் இன்று இந்த கவிதையை அவர்கள் பிரசுரித்துள்ளார்கள்
என்பது என்னைப்பொறுத்தவரையில் ஆச்சரியமாகவே உள்ளது.
என்பது என்னைப்பொறுத்தவரையில் ஆச்சரியமாகவே உள்ளது.
சரி கவிதையின் உள்ளடக்கத்துக்கு வாறன்.
கவிதையின் எந்த ஒரு இடத்திலும் காழ்ப்புணர்ச்சியை அல்லது பழிவாங்கலை தூண்டும் சொற்களை நான் கவனமாக தவிர்த்திருக்கிறேன்.
ஒரு கவிஞனுக்கு நியாயமாக வரும் “ அறச்சீற்றத்தை” மென்மையான வார்த்தைகளால் சொல்வது மிக மிக கடினம்.
அப்பிடி இருந்தும் என்னால் ஒரு சில இடங்களில் மறைமுகமாக “ நியாயமான கோபத்தை” என்னால் அடக்கிவைக்க முடியாமல் வெளிப்படுத்தியிருக்கிறேன்.
கடந்த காலத்தில் குறிப்பாக 2009 களின் பிறகு “ தமிழர்களின் தீராத சோகம் , வலிகள்” என்பவற்றை தென்னிலங்கை சமூகம் புரிந்துகொள்ளவேயில்லை
எனும் கோபம் எனக்குள் இருக்கிறது.
எனும் கோபம் எனக்குள் இருக்கிறது.
ஒரு இனம் அழிக்கப்பட்டு போரின் வடுக்களை சுமந்து நாளாந்தம் கண்ணீர் சிந்திநிற்கிறது.
போரை நடத்தியது அரசின் ராணுவ எந்திரங்களாக இருந்தபோதும் போரின் பின்னரான காலப்பகுதிகளில் சாதாரண
தென்னிலங்கை மக்கள் “தமிழர்களின் வலிகளை”மனதார புரிந்துகொள்ளவேயில்லை.
தென்னிலங்கை மக்கள் “தமிழர்களின் வலிகளை”மனதார புரிந்துகொள்ளவேயில்லை.
ஆகக்குறைந்தது புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை என்ற கசப்பான உண்மையை ;
நாம் கண்ணுக்கு முன்னே நடந்த
“மே மாத போர்வெற்றிக்கொண்டாட்டங்கள்”
கன்னத்தில் அறைந்து சொல்கின்றன.
நாம் கண்ணுக்கு முன்னே நடந்த
“மே மாத போர்வெற்றிக்கொண்டாட்டங்கள்”
கன்னத்தில் அறைந்து சொல்கின்றன.
2009 களின் பின் தமிழர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு அவலத்திலும் தென்னிலங்கை சமூகம் பாராமுகமாகவே இருந்தது. இருக்கிறது.
உதாரணத்துக்கு பல விடயங்களை சுட்டிக்காட்டலாம்.
2009 இல் எத்தனையோ தமிழர்கள் முள்வேலிக்குள் அனுபவித்த “ கொடுமைகளைகளை” “ மிகப்பெரிய அவலங்களை” யாரும் கண்டுகொள்ளவேயில்லை.
2009 இல் எத்தனையோ தமிழர்கள் முள்வேலிக்குள் அனுபவித்த “ கொடுமைகளைகளை” “ மிகப்பெரிய அவலங்களை” யாரும் கண்டுகொள்ளவேயில்லை.
மழைவெள்ளத்தில் தடுப்பு முகாம்களில் எத்தனையோ மக்கள் சொல்லொணா துன்பத்தை அனுபவித்தார்கள். அப்போது யாரும் வரவும் இல்லை.
உதவிக்கரம் நீட்டவும் இல்லை.
உதவிக்கரம் நீட்டவும் இல்லை.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதே போல ஒரு வெள்ள அனர்த்தம் வன்னியில் வந்தது. அப்போது கூட தென்னிலங்கையின் பெரும்பாலான மக்கள்
கண்டுகொள்ளவேயில்லை.
கண்ணீர் சிந்தவும் இல்லை.
உதவிக்கரம் நீட்டவும் இல்லை.
கண்டுகொள்ளவேயில்லை.
கண்ணீர் சிந்தவும் இல்லை.
உதவிக்கரம் நீட்டவும் இல்லை.
ஒரு சிலர் செய்தார்கள். அதை மறக்கமுடியாது.
போரின் பின்னர் கண்ணுக்கு முன்னே சரணடைந்த பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.
ஆயிரம் ஆயிரம் தாய்மார்கள் நாள்தோறும் கண்ணீரோடு கதறிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த வாரத்தோடு சுமார் 100 நாட்கள் அவர்கள் வெயிலிலும் மழையிலும் காய்ந்து கண்ணீரோடு வீதியோரங்களில் கேப்பாரற்ற அனாதைகளாக இருக்கிறார்கள்.
எம்மினத்தவர்களே அவர்களின் வலிகளை புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு அப்பால்
லச்சக்கணக்காக நாள் தோறும் “புதினம்” பார்க்க வடக்குக்கு வரும்
தென்னிலங்கை சமூகம் இந்த அவலத்தை ஒரு நிமிடம் கூட நின்று பார்க்கத்தவறிவிட்டது.
லச்சக்கணக்காக நாள் தோறும் “புதினம்” பார்க்க வடக்குக்கு வரும்
தென்னிலங்கை சமூகம் இந்த அவலத்தை ஒரு நிமிடம் கூட நின்று பார்க்கத்தவறிவிட்டது.
போர் வெற்றிகளை கொண்டாடும் இடங்களில் குதுகலித்து மகிழ்ந்துவிட்டு போகும் அவர்கள் அதற்கு அப்பால் ஆயிரம் ஆயிரம் சக மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட இடத்தில் ஒரு துளி கண்ணீர் சிந்துவதற்கோ அல்லது அந்த இடத்தில் நின்று ஒரு நிமிடம் மனம் வருந்துவதற்கோ தயாராகவில்லை.
வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் என்பது தமிழர்களை பொறுத்த வரை “ வலி சுமந்த கறுப்பு மாதம்” அந்த மாதம் முழுவதும் எல்லாவீடுகளிலும் “ஒப்பாரிச்சத்தம்” மட்டுமே
கேட்டுக்கொண்டிருக்கிறது.
கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால் தெற்கில் அந்த மாதம் “ போர் வெற்றி மாதமாக” குதுகலத்துடனும் வெற்றிக்கொண்டாட்டங்களுடனும் கடந்து போகின்றன.
ஒரு இனம் அழிக்கப்பட்டதை ... அழிந்துபோனதை அதே மண்ணில் வாழும் இன்னொரு இனம் மகிழ்ச்சியாய் கொண்டாடி மகிழ்வதை “மனிதாபிமான இதயம்” கொண்ட
எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
‘எனக்காக நீ அழுதால் மட்டுமே நான் உனக்காக அழுவேன்” என்ற நியாயமற்ற கோரிக்கையை நான் எந்த இடத்திலும் கவிதையில் குறிப்பிடவில்லை.
“ உனக்காக அழுவதற்கு எனக்கு விருப்பம்தான் ஆனால் கண்ணீர் என்னிடம் கைவசம் இல்லை சகோதரா” என்றே ஒன்றுக்கு மூன்றுமுறை தெளிவாக
குறிப்பிட்டுள்ளேன்.
இதில் எங்கே “ காழ்ப்புணர்ச்சி” இருக்கிறது?
இதில் எங்கே “ இனத்துவேசம்” இருக்கிறது?
இதில் எங்கே “ பழிவாங்கும் உணர்ச்சி” இருக்கிறது? எனக்கு புரியவேயில்லை.
“உனக்காக என் கரங்களை நீட்டுகிறேன். இறுக்கிப்பிடித்துக்கொள்”
“உனக்காக புத்தனிடம் வேண்டுகிறேன்” என கவிதையை முடித்திருக்கிறேன்.
இதில் எங்கே “ இனத்துவேசம், காழ்ப்புணர்வு, பழிவாங்கும் உணர்ச்சி” இருக்கிறது? எனக்கு இன்னும் புரியவேயில்லை.
“உனக்காக புத்தனிடம் வேண்டுகிறேன்” என கவிதையை முடித்திருக்கிறேன்.
இதில் எங்கே “ இனத்துவேசம், காழ்ப்புணர்வு, பழிவாங்கும் உணர்ச்சி” இருக்கிறது? எனக்கு இன்னும் புரியவேயில்லை.
ஒருவனின் வலிகளில் இன்பம் காணும் ஈனப்பிறவிகளா நாங்கள்?
அல்லது சகமனிதன் சாவில் சந்தோசம் கொள்ளும் “உணர்வற்ற கல் நெஞ்சக்காரர்களா?” தமிழர்கள்!
எனக்குப்புரியவேயில்லை.
அல்லது சகமனிதன் சாவில் சந்தோசம் கொள்ளும் “உணர்வற்ற கல் நெஞ்சக்காரர்களா?” தமிழர்கள்!
எனக்குப்புரியவேயில்லை.
போன கிழமை மே 18 அன்று “கிளிநொச்சியில் வெடிகொழுத்தி கொண்டாடினாய்!”
“சிங்க லே” என்ற தனிச்சிங்கள கொடிகளை கிளிநொச்சி வீதிகளில் ஏற்றி குதூகலித்தாய்.
“சிங்க லே” என்ற தனிச்சிங்கள கொடிகளை கிளிநொச்சி வீதிகளில் ஏற்றி குதூகலித்தாய்.
“புதிய விகாரைகளை” அமைப்பதிலும் அதை கொண்டாடுவதிலும் மும்முரமாக நின்றாயே சிங்கள சகோதரா?
ஏன் என் வலிகளை உணர மறந்தாய்?
ஏன் இப்படி நியாயமற்று நடந்தாய்? என கேள்வி கேட்பதிலும் என்ன பிழை என எனக்கு தெரியவில்லை.
“வெள்ள அனர்த்தத்தால் சனம் செத்துக்கொண்டிருக்கும் போது” இப்படி கேட்பது பிழை என ஒரு சிலர் ஆதங்கப்பட்டார்கள்.
நான் அவர்களிடம் கேட்கிறேன்?
“வெடி கொழுத்தி போர் வெற்றியை கொண்டாடும் தருணத்தில்” அவர்களுக்கு இந்த கவிதையை எழுதினால் கேட்டிருக்குமா?
“வெடி கொழுத்தி போர் வெற்றியை கொண்டாடும் தருணத்தில்” அவர்களுக்கு இந்த கவிதையை எழுதினால் கேட்டிருக்குமா?
8ஆண்டுகளாக எத்தனை பேர் கண்ணீர் வடித்து கதறி அழுகிறோம் முள்ளிவாய்க்காலில்...
எங்களின் அவலக்குரல் கேட்டதா அவர்களுக்கு?
எங்களின் அவலக்குரல் கேட்டதா அவர்களுக்கு?
போர் முடிந்து 8 ஆண்டுகளில் இன்றுவரை ஒரு சிங்கள சகோதரன்.... அல்லது தென்னிலங்கை சமூகத்தில் ஒரு அரசியல் பிரதிநிதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வந்து
மனதார எங்களின் அழுகுரல்களை கேட்டிருப்பார்களா? இல்லையே ஏன்???
மனதார எங்களின் அழுகுரல்களை கேட்டிருப்பார்களா? இல்லையே ஏன்???
ஏன் கனக்க?
2009 இல் போர் தின்ற மக்கள் அதன் பிறகு எத்தனை “அவலங்களை” சந்தித்து இருப்பார்கள். ஒரு உதவிக்கரமாவது தென்னிலங்கையில் இருந்து
எமக்காக நீட்டப்பட்டதா?
இல்லையே ஏன்???
2009 இல் போர் தின்ற மக்கள் அதன் பிறகு எத்தனை “அவலங்களை” சந்தித்து இருப்பார்கள். ஒரு உதவிக்கரமாவது தென்னிலங்கையில் இருந்து
எமக்காக நீட்டப்பட்டதா?
இல்லையே ஏன்???
அப்படியிருக்கும் போது; இப்போது எனக்கு வரும் கோபம் அல்லது கவலை நியாயமானதா? இல்லையா?
அதுசரி எல்லாம் இருக்கட்டும். என்னதான் நாங்கள் கோபப்பட்டாலும் வடக்கில் இருந்து உதவிகள் இப்போது தென்னிலங்கை மக்களின்
அவலத்தை துடைக்க நீள்கிறதா? இல்லையா?
இதிலிருந்தே புரிந்துகொள்ளுங்கள் நாங்கள் எவ்வளவு பெரிய “உயிர்நேய வாதிகள்” என்று.

மேலும்;
இந்தக்கவிதையில் “இனத்துவேசம்” “காழ்ப்புணர்வு” “ பழிவாங்கும் உணர்ச்சி” ஒரு இடத்தில் கூட இருந்திருந்தாலும்
இலங்கையின் சிங்கள ஊடகங்களோ அல்லது ஆங்கில ஊடகங்களோ
இதை வெளியிட்டிருக்காது. அவர்கள் இந்த கவிதையை “திறந்த மனதோடும் ” பார்க்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

பல்கலைக்கழக சிங்கள மாணவ சகோதரன் ஒருவன் இந்த கவிதைக்கு பதில் எழுதும் போது “ நானும் என் நண்பர்களும் அடுத்த வருடம் நடக்கும்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வந்து உங்களின் துன்பத்தில் பங்குகொள்ள ஆயத்தமாய் இருக்கிறேன்” என்று சொல்லும் போதுதான்
நான் சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என்று முழுமையாக உணர்ந்தேன்.
மற்றப்படி இந்த கவிதை சிங்களவர்களை நோக்கி...
“ இரங்கி கையேந்தி நிற்கிறது”
“நல்லிணக்கமும் மண்ணாங்கட்டியும்”
“சிங்களவன் திருந்தான்”
“சாகட்டும் விடுங்கோ”
போன்ற கடுமையான விமர்சனங்களுக்குக்கும் அதைப்போன்ற பின்னூட்டங்களுக்கும் நான் பொறுப்பாளி அல்ல!
“ இரங்கி கையேந்தி நிற்கிறது”
“நல்லிணக்கமும் மண்ணாங்கட்டியும்”
“சிங்களவன் திருந்தான்”
“சாகட்டும் விடுங்கோ”
போன்ற கடுமையான விமர்சனங்களுக்குக்கும் அதைப்போன்ற பின்னூட்டங்களுக்கும் நான் பொறுப்பாளி அல்ல!
நன்றி
#தமிழ்ப்பொடியன்
#தமிழ்ப்பொடியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக