வியாழன், செப்டம்பர் 15, 2016

தயவுசெய்து வேண்டாம்...!!!





அன்பான உறவுகளே!!!


தயவுசெய்து ஒரு முக்கியமான விடயம் பற்றி பேசவேண்டும்.

இன்று யாழ்ப்பாணம் பளைப்பகுதியில் நிகழ்ந்த "கோர விபத்து" ஒன்றின் புகைப்படங்களை பலர் பகிர்ந்துள்ளதை அவதானித்தேன்.

மிகவும் கோரமாக உடல் சிதறி இறந்துபோனவர்களின் புகைப்படங்களை இரத்தம் சொட்டச்சொட்ட..
குடல் கிழிந்து தொங்க...
கைகால் முறிந்து...

கடவுளே....!!!

ஒரு இறைச்சிக்கடையில் ஆடு மாடுகளை வெட்டி துண்டாக்கி படமாக எடுத்தால்;
எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அந்தப்படங்கள்.

வேண்டாம்...

தயவுசெய்து அந்தப்படங்களை நீக்குங்கள்.
முகப்புத்தகத்திலோ இணையத்திலோ பகிராதீர்கள்.

இப்படியான கோரமான படங்களை பகிரமுன்;
அவர்கள் உங்களின் நெருங்கிய உறவினர்களாக இருந்தால் என்ன செய்வீர்கள் என ஒரு கணம் சிந்தியுங்கள்.

விபத்து பற்றிய செய்தியை பகிருங்கள்.
விபத்து நிகழந்த இடத்தை பகிருங்கள்.
விபத்துக்குள்ளான வாகனத்தை பகிருங்கள்.

தயவுசெய்து ...
கோரமாக இறந்து கிடக்கும் அந்த உறவுகளின் புகைப்படங்களை பகிராதீர்கள்.

please follow the media ethics. please don't share the pictures of with severe causalities.
📢please share and make awareness!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge